news

News January 4, 2025

நாளையுடன் விடைபெறும் ஊராட்சித் தலைவர்கள்

image

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நாளை (ஜன.5) உடன் முடிகிறது. இதன்படி, ஊராட்சித் தலைவர்கள், ஊரக ஒன்றிய தலைவர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் தங்களது அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்கு விருந்து கொடுத்து விடை பெறுகின்றனர். இனி ஊராட்சி மன்ற செயலாளர்கள் தான், அரசு நலத்திட்டங்கள், மக்களுக்கான திட்டங்களை கண்காணிப்பார்கள். இதனால், விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

News January 4, 2025

30 துணை கலெக்டர்களுக்கு பதவி உயர்வு

image

மாநிலம் முழுவதும் துணை கலெக்டர்கள் 30 பேருக்கு பதவி உயர்வு அளித்து TN அரசு உத்தரவிட்டுள்ளது. 30 பேரையும் பல்வேறு மாவட்டங்களில் வருவாய் அதிகாரிகளாக நியமனம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆணையிட்டுள்ளார். முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு 54 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டனர். அதேபோல், சில நாட்களுக்கு முன்பு 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

News January 4, 2025

தம்பதியர், காதலர்களுக்கு… உடனே இதை கவனியுங்கள்

image

தம்பதியர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்தும் அறிகுறிகள்: *நெகடிவாகவே தொடங்கும் பேச்சுகள் *பிரச்னைகளை கவனிக்காதது போல இருத்தல் *சாதாரண சண்டைகூட பெரிதாக மாறுவது *காதல் வந்த கணத்தை (பழையதை) மறந்துவிடுதல் *எப்போதும் மோசமானதையே கற்பனை செய்தல் *எப்போதும் குறை, விமர்சனம் சொல்லுதல் *விலகிவிட்ட உணர்வு, ஏக்கம் *துணைவர் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை செய்தல்.

News January 4, 2025

நடிகை கியாரா அத்வானி ஹாஸ்பிடலில் அட்மிட்டா?

image

மும்பையில் இன்று நடைபெறும் கேம் சேஞ்சர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் கியாரா அத்வானி கலந்து கொள்ளவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர், சோர்வின் காரணமாகவே கியாரா நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் மருத்துவமனையில் அட்மிட்டானதாக வெளியான தகவல் பொய் என்று மறுத்துள்ளார்.

News January 4, 2025

சாவர்க்கரும் சமூக நீதியும்: அண்ணாமலை

image

சாவர்க்கர் பிராமணராக இருந்ததால் தமிழகத்தில் புறக்கணிப்பட்டாரா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஒரே இடத்தில் அனைவரும் சாப்பிட வேண்டும் என சாவர்க்கர் அன்றே ஒரு உணவகத்தை உருவாக்கியதாகவும், தமிழகம் இன்று பேசும் சமூகநீதியை, அன்றே செய்து காட்டியவர் என்றும், அவர் கூறியுள்ளார். மேலும், சாவர்க்கர் இருந்த சிறையை அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News January 4, 2025

BREAKING: திருவள்ளுவர், அண்ணா விருதுகள் அறிவிப்பு

image

திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு. படிக்கராமு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா விருதுக்கு எல். கணேசன், பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன், பாரதிதாசன் விருதுக்கு பாென். செல்வகணபதி, திருவிக விருதுக்கு ஜி.ஆர். ரவீந்திரநாத், பெரியார் விருதுக்கு விடுதலை ராஜேந்திரன், அம்பேத்கர் விருதுக்கு ரவிக்குமார் எம்பி, விசுவநாதம் விருதுக்கு பாெதியவெற்பன், கலைஞர் விருதுக்கு முத்து வாவாசி தேர்வாகியுள்ளனர்.

News January 4, 2025

பொங்கல் விடுமுறை: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

image

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, சென்னை தாம்பரம்- நெல்லை மற்றும் குமரி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. நெல்லையில் இருந்து 12, 19, 26 தேதி ரயில் மதியம் 3.30 மணிக்கு புறப்படும். தாம்பரத்தில் இருந்து 13, 20, 27ஆம் தேதி சிறப்பு ரயில் மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை நெல்லைக்கு 4.40 மணிக்கு செல்லும். தாம்பரம் – குமரி இடையே 13, 14 தேதிகளில் சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது.

News January 4, 2025

சிபிஐ விசாரணையே ஒரே தீர்வு: தமிழிசை

image

அண்ணா பல்கலை. விவகாரத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் சந்திப்புக்கு பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய சிபிஐ விசாரணை கட்டாயம் தேவை என்றும், அதை வலியுறுத்தியே ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 4, 2025

இஸ்ரேல் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலி

image

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. 24 மணி நேரத்தில் மட்டும் ஏவுகணை, ட்ரோன் மூலம் நடத்தியத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உடல்சிதறி பலி என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

News January 4, 2025

பட்டாசு ஆலை விபத்து: 2 பேர் கைது

image

சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து 6 பேர் உயிரிழந்த விவகாரத்தில், போர்மேன்களான கணேஷ், சதீஸ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக, தற்போது கைது செய்யப்பட்ட இருவர் மற்றும் ஆலை உரிமையாளர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ₹4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!