India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புத்தக கண்காட்சியில் அரசுக்கு எதிரான சீமானின் விமர்சனத்துக்கும், தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என பபாசி விளக்கமளித்துள்ளது. நிகழ்ச்சியில் புதுவை தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டதை ஏற்க முடியாது என்றும், தமிழக அரசின் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று மாலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வரை சீமான் ஒருமையில் பேசியிருந்தார்.
➤மேஷம் – பொறுமை ➤ ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – போட்டி ➤கடகம் – அச்சம் ➤சிம்மம் – வெற்றி ➤கன்னி – ஆதரவு ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – நிம்மதி ➤தனுசு – கவனம் ➤மகரம் – உற்சாகம் ➤கும்பம் – பிரீதி ➤மீனம் – ஆக்கம்.
2025ஆண்டின் தொடக்கம் இந்திய அணிக்கு மட்டுமல்ல பாக்., அணிக்கும் மோசமாக அமைந்துள்ளது. பாக்., அணிக்கு எதிரான 2nd Test முதல் இன்னிங்சில் தெ.ஆப்., 615 ரன்களை குவித்தது. மிரட்டலாக விளையாடிய ரிக்கல்டன் 259 ரன்களை குவித்தார். 2025ன் முதல் இரட்டை சதம், PAKக்கு எதிராக 250 ரன்களை அடித்த முதல் SA டெஸ்ட் தொடக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். இதன்பின் களமிறங்கிய PAK 64/3 ரன்களுக்கு தடுமாறி வருகிறது.
ஜம்மு & காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில், உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 3 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலைப்பகுதியின் குறுகிய வளைவில் திரும்பும் போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. அம்மாநிலத்தில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. கடந்த டிச.24ல் நடந்த விபத்தில், 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஜன.11- 23 வரை, மல்டிபிளக்ஸ் டிக்கெட்டுகளின் விலை வழக்கமான கட்டணத்தை விட ₹175, சிங்கிள் ஸ்கிரீன் டிக்கெட்டுகள் ₹135ஆக அதிகரிக்கலாம். புஷ்பா படத்தின் வசூலுக்கு முக்கிய காரணம் டிக்கெட் விலை உயர்வு. அதேபாணியில் டிக்கெட் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக MET தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 6ஆம் தேதி கடலோர தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? அப்படியெனில் கீழே கமெண்ட் பண்ணுங்கள்.
தமிழக பாஜகவுக்கு 15ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் ஒருவர் 2 முறை தலைவர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ளது. ஆதலால் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களும், மாநிலத் தலைவர் பதவிக்கு காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட், நடிப்பில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் மனம் திறந்த ஹாலண்ட், “எனக்கு குழந்தைகள் பிறந்தபின், நடிப்பதில் இருந்து முழுமையாக விலகி, குடும்ப வாழ்க்கையை முழுமையாக வாழப் போகிறேன்” என்றார். ஹாலிவுட்டின் டாப் நடிகை ஸெண்டாயாவுடன் இவர் தீவிர டேட்டிங்கில் உள்ளார். ஹாலண்டின் முடிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்கு ஸ்பைடர்மேன் பிடிக்குமா?
ChatGPT, AI பாட்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்களின் தனிப்பட்ட தகவல்கள், பாஸ்வேர்ட், யாருக்கும் தெரியக்கூடாது என நினைக்கிற ரகசியங்கள், பைனான்ஸ் விவரங்கள் ஆகியவற்றை AI-யிடம் நிச்சயம் பகிர வேண்டாம். AI ஒருபோதும் தகவல்களை மறக்காது, இந்த தகவல்கள் வேறு யார் கைக்கும் கிடைக்கலாம். AI-க்களிடம் மருத்துவ ஆலோசனை கேட்பதும் நல்லதில்லையாம். ஆபாச விஷயங்கள் வேண்டவே வேண்டாம்.
பெஞ்சல் புயலை தீவிர பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது. புயலால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த பாதிப்பிலிருந்து மீள முடியாமல் மக்கள் துயரத்தில் உள்ளனர். இந்நிலையில், அந்த புயலை தீவிர பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதியை மட்டுமன்றி, இதர நிதிகளையும் பேரிடர் கால சீரமைப்புக்கு பயன்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.