news

News August 9, 2025

2026 T20 WC வரை இவர்கள்தான் ஆஸி., ஓபனிங் பேட்ஸ்மென்கள்

image

2026 டி20 உலகக்கோப்பை வரை மிட்செல் மார்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் தான் தங்கள் அணியின் ஓபனிங் பேட்ஸ்மென்கள் என ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஜோடி இன்னும் டி20 -களில் ஓபனிங் இறங்கி பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை என்றாலும், ஒருநாள் போட்டிகளில் தாங்கள் கெத்து என நிரூபித்துள்ளது. வெறும் 5 இன்னிங்ஸ்களில் 70.50 சராசரியுடன் 282 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி அடித்துள்ளது.

News August 9, 2025

AI பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடம்: சாம்

image

OpenAI-ன் நவீன AI மாடலான GPT-5 அறிமுகமாகியுள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன், அமெரிக்காவிற்கு பிறகு இந்தியாவில் தான் தங்களது AI மாடலை அதிகம் பயன்படுத்துவதாக கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் ChatGPT-ஐ இன்னும் மலிவான விலைக்கு கொடுக்க முயற்சிப்பதாகவும், இதற்காக உள்நாட்டு பங்குதாரர்களுடன் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

ரூமி பொன்மொழிகள்

image

*நேற்று நான் ஒரு புத்திசாலி, அதனால் உலகை மாற்ற விரும்பினேன். இன்று நான் ஒரு ஞானி, அதனால் என்னை நானே மாற்றிக் கொள்கிறேன். *நீங்கள் எவ்வளவு அமைதியாகிறீர்களோ, உங்களால் அவ்வளவு அதிகமாகக் கேட்க முடியும். *நீங்கள் இழக்கும் எதுவும் வேறொரு வடிவத்தில் திரும்ப வரும். *உங்களுக்கு உயிர் கொடுக்கும் சக்தி ஒன்று உள்ளே உள்ளது. அதைத் தேடுங்கள். *நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அது உங்களைத் தேடுகிறது.

News August 9, 2025

கம்பேக் கொடுக்க தயாராகும் கோலி

image

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பயிற்சியில் <<17340341>>கோலி <<>>ஈடுபட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை கோச் நயீம் அமினுடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். வரும் அக்டோபர் 19 முதல் 25 வரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நரைத்த மீசை, தாடியுடன் கோலி இருந்த புகைப்படம் வைரலானது.

News August 9, 2025

ராகுலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: பியூஷ் கோயல்

image

எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்க ராகுல் காந்தி ஆசைப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினரின் பேச்சை கேட்டு இந்திய பொருளாதாரம் குறித்து எதிர்மறையாக ராகுல் விமர்சனம் செய்வதாகவும், இதற்காக நாட்டு மக்கள் என்றும் அவரை மன்னிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியாவை உலகநாடுகள் அங்கீகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

மீண்டும் அமெரிக்கா செல்லும் பாக்., தளபதி

image

பாகிஸ்தான் தளபதி அசிம் முனீர் மீண்டும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அமெரிக்க தளபதி மைக்கேல் இ குரில்லாவின் பிரியாவிடை நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார். பஹல்காம் தாக்குதலை அடுத்து அசிம் முனீர் டிரம்ப்புடன் விருந்தில் பங்கேற்ற நிலையில், 2 மாதங்களில் 2-வது முறையாக பயணம் செய்கிறார். இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் விழுந்த நிலையில், இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

News August 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 422 ▶குறள்: சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. ▶பொருள்: மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.

News August 9, 2025

ஒரு தொகுதிக்கே 6 மாதங்கள் ஆனது: ராகுல்

image

ஒரு தொகுதியில் உள்ள போலி வாக்குகளை கண்டுபிடிக்க தங்களுக்கு 6 மாதங்கள் ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பட்டியலை தேர்தல் ஆணையம் தரவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளும் என்றாவது ஒருநாள் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 9, 2025

இந்திய அணிக்கு குட் நியூஸ்

image

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து மீண்டுவிட்டதாக தெரிகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. முன்னதாக, ஜெர்மனியில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் NCA-ல் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பில் இருக்கிறார்.

News August 9, 2025

ராமருக்கு போல் சீதாவுக்கும் பிரமாண்ட கோயில்: அமித்ஷா

image

பீஹார் மாநிலத்தில் சீதாதேவியின் பிறப்பிடமாக கருதப்படும் சீதாமர்ஹியில் உள்ள புனவ்ராதாம் பகுதியில் ஜானகி மந்திர் கோயில் உள்ளது. சீதாதேவியின் கோயிலாக இது கருதப்படுகிறது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட ஆலயம் அமைக்கப்பட்டது போல், தற்போது இக்கோயிலை ₹882.87 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்வதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் அமித்ஷா பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

error: Content is protected !!