news

News February 11, 2025

வெடிகுண்டு தாக்குதல்: 2 ராணுவ வீரர்கள் வீரமரணம்

image

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் அக்னூர் செக்டாரில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து, இரவு 8 மணியளவில் அங்கு சென்ற ராணுவ வீரர்கள், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

News February 11, 2025

இரவு இதை செய்யாதீங்க.. செய்தால் பிரச்னை தான்..

image

இரவில் லைட்டுகளை போட்டுக்கொண்டே தூங்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. ஆனால் இப்படி தூங்குவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு என ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக உடல்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். ஏனென்றால் தூங்கும்போது செயல்படும் மெலடோனின் ஹார்மோன் வெளிச்சத்தில் செயல்படாது. இரவில் செல்போன் அல்லது டிவி பார்ப்பதும் பிரச்சனை தான். இன்றே மாறலாமே?

News February 11, 2025

மாட்டிக் கொண்ட Ex.துணை முதல்வர்

image

பட்டியலின மக்களுக்கு மட்டுமே உரிமையுள்ள பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக SC/ST ஆணையம் விசாரித்து வந்த நிலையில், பஞ்சமி நிலத்தை ஓபிஎஸ் வாங்கியதை ஆணையம் இன்று உறுதி செய்தது. இதையடுத்து, அந்த நிலத்தை ஓபிஎஸ் பெயருக்கு மாற்றியதற்கான பட்டாவை ரத்து செய்யுமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News February 11, 2025

துரோகம் செய்வது ஆண்களா? பெண்களா? ஷாக் ஆவீங்க…

image

திருமணமான இந்தியர்களில் 55% பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் இழைத்துள்ளனர் என்கிறது ஓர் ஆய்வுமுடிவு. இவர்களில் பெண்கள் (56%) தான் அதிகம். ஆண்கள் 44% பேர். திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களில் 48% பேர் குழந்தை பெற்ற தாய்மார்கள். பிரபல கிளீடன் செயலி, சென்னை உள்பட முக்கிய நகரங்களில் திருமணமான ஆயிரக்கணக்கானோரிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இது மாற்றமா… தடுமாற்றமா?

News February 11, 2025

ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?

image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நாளை விளையாடவுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது. முதல் இரண்டு போட்டிகளை வென்றிருக்கும் இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கெனவே 4 டி20 போட்டிகளை வென்று இந்தியா மொத்த தொடரையும் கைப்பற்றியுள்ளது.

News February 11, 2025

7 வயது மகனை கொன்ற தந்தை

image

பிஹாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், தன் 7 வயது மகனை, தலையை துண்டித்து தந்தையே கொலை செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. 2-ம் வகுப்பு படிக்கும் மகன் ஸ்கூல் ஃபீஸ் கேட்டு தொல்லை செய்யவே, இப்படி செய்ததாகவும், இனி அவனுக்காக படிப்பு செலவு தேவையில்லை, வீடு வாங்க வேண்டியதில்லை, மொத்தத்தில் செலவில்லை என்று சொல்லி அந்த கொடூரன் வீடியோவும் வெளியிட்டுள்ளான். இதனால் விஷயம் வெளியே தெரிய, அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

News February 11, 2025

வார விடுமுறை: குவியும் சிறப்பு பஸ்கள்

image

வார விடுமுறை என்றாலே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு விடுகின்றனர். அந்த வகையில், வார விடுமுறைக்கு ஊருக்கு செல்பவர்களுக்காக, வரும் 14, 15ஆம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து பிற ஊர்களுக்கு 485 சிறப்பு பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து 102 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

News February 11, 2025

எளிதாக உடல் எடையை குறைக்கலாம்

image

பலவித டயட்களுக்கு மத்தியில் உடல் எடையை குறைப்பதற்கு என்றுமே உறுதுணையாக இருக்கும் எளிமையான டயட், Calorie Deficit டயட்தான். அதாவது கலோரி என்பது நமது உடலுக்கான எரிபொருள். நாளொன்றுக்கு நமக்கு தேவைப்படும் கலோரிகளை விட குறைவாக சாப்பிடும்போது உடல் எடை தானாக குறையும். இதனை சரியாக கணக்கிட்டு, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை சரி விகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். எடை குறையும்.

News February 11, 2025

தவெகவில் ‘இளம்பெண்கள்’ அணி உதயம்!

image

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள விஜய்யின் தவெக, 28 அணிகளை இன்று அறிவித்துள்ளது. இதுவரை வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத புதுப்புது அணிகள் தவெகவில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, பெண்கள் அணி, இளம்பெண்கள் அணி, சிறார் அணி, குழந்தைகள் அணி, திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, மீடியா அணி, உண்மை சரிபார்ப்பு அணி, உள்ளிட்ட அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

News February 11, 2025

திருமணத்துக்கு முன் உடலுறவு: வைரலாகும் நடிகையின் பதில்

image

இந்தியர்களுக்கு அழகின் உருவமான ஐஸ்வர்யா ராய், அழகுடன் அறிவுக்கூர்மையும் கொண்டவர். இவர் திருமணத்துக்கு முன் சொன்ன பதில் தற்போது வைரலாகி வருகிறது. அமெரிக்க பிரபலம் ஓபரா வின்ப்ரே, ‘திருமணத்துக்கு முன் உடலுறவு பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்க, ‘முத்தமிடுவதை கூட இந்தியர்கள் பொதுவில் செய்யமாட்டார்கள். திருமணத்துக்கு முன் உடலுறவு தவறு’ என்று போல்டாக பதிலளித்தார். உங்க கருத்து என்ன?

error: Content is protected !!