India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உணவு அல்லாத பொருட்களுக்கு இந்தியர்கள் அதிகம் செலவிட தொடங்கியுள்ளதாக SBI அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 12 ஆண்டுகளில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி நுகர்வு வழக்கத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. 2011-12 நிதி ஆண்டில் 52.90%ஆக இருந்து உணவுக்கான செலவு 2023-24இல் 47.04%ஆக குறைந்துள்ளது. கிராமத்தில் உணவுக்கான செலவு 5.86% குறைந்த நிலையில், நகரங்களில் 2.94% குறைந்துள்ளது.
BGT தொடரின் கடைசிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 162 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும் ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 157 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, 162 என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியிருக்கிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 8 மாதங்களில் இல்லாத அளவில் சரிந்துள்ளது. இது டிச. 27ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் $4.11 பில்லியன் குறைந்து, $640.27 பில்லியனாக உள்ளது. ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் RBI டாலரை விற்று வருகிறது. அதேநேரம், தங்கத்தை தொடர்ந்து வாங்குவதால், அதன் கையிருப்பு $541 மில்லியன் உயர்ந்து $66.26 பில்லியனாக இருக்கிறது.
பாஜக கூட்டணியில் நிதிஷ்குமார் நீடிப்பது சந்தேகம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பிஹாரில் கூட்டணிக் கட்சியை பாஜக முதுகில் குத்தியுள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையைத் தொடங்கியுள்ளதாகவும் கூறினார். இதனால் கலக்கத்தில் இருக்கும் நிதிஷ், அக்கூட்டணியில் தொடர்வது சந்தேகம்தான் என்றும் தெரிவித்தார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரமும், 2 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வைல்டு கார்டு என்ட்ரியில் BB வீட்டிற்குள் சென்ற மஞ்சரி மற்றும் ராணவ் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. அவர்களை சக போட்டியாளர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள BB சீசன் 8 டைட்டில் வின்னராக யார் வருவார்? கமெண்ட்ல சொல்லுங்க.
உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் தனது காதலி விக்டோரியா மலோனை திருமணம் செய்து கொண்டார். நார்வேயில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதில் இருந்தும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கார்ல்சன் 5 முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*1664 – சிவாஜி தலைமையிலான மராத்தியப் படையினர் சூரத்துப் போரில் முகலாயரை வென்றனர். *1918 – ஜெர்மன் தொழிலாளர் கட்சி அமைக்கப்பட்டது. *1940 – பண்பலை வானொலி முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. *1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்பேர்ணில் நடைபெற்றது. *2014 – இந்தியாவின் ஜிசாட் 14 செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது.
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஒடிசாவை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் கோவா முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அந்த அணி மேலும் 2 கோல்களை அடித்து அசத்தியது. இறுதியில் 4-2 என்ற கோல் கணக்கில் கோவா அணி வெற்றி பெற்றது.
*முதலாளித்துவத்தின் ஒற்றுமையை, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையால் மட்டுமே அசைக்க முடியும். *மன வலிக்கு ஒரே ஒரு சிறந்த மாற்று மருந்து உள்ளது, அது உடல் வலி. *மக்களை அவர்களின் வரலாற்றிலிருந்து விலக்கிவையுங்கள், அவர்கள் எளிதில் கட்டுப்படுவார்கள். *நாத்திகம் தொடங்கும் இடத்தில் கம்யூனிசம் தொடங்குகிறது. *எனக்கு பணத்தைப் பிடிக்காது, நாங்கள் போராடுவதற்கு பணம் தான் காரணம்.
‘இந்தியன் 3’ பஞ்சாயத்தால், ‘கேம் சேஞ்சர்’ படத்திற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க, லைகா நிறுவனம் சங்கத்தை நாடியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் லைகா-ஷங்கர் இடையே உள்ள பிரச்னையை, தனது படத்தின் மீது திணிப்பதாக, ‘கேம் சேஞ்சர்’ தயாரிப்பாளர் தில் ராஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 3ஆவது நபரான தன்னை இதில் இழுக்கக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sorry, no posts matched your criteria.