India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல மலையாளப் பட இயக்குநர் சனல் குமாருக்கு எதிராக நடிகை ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2022இல் நடிகை ஒருவரைக் காணவில்லை, அவரது உயிருக்கு ஆபத்து என சனல் குமார் சோசியல் மீடியாவில் ஆடியோவுடன் பதிவிட்டிருந்தார். இதனிடையே, தன்னை பற்றி சசிதரன் தவறாக கூறியுள்ளதாக ஆலுவா கோர்ட்டில் ஆஜரான நடிகை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சனல் குமாருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படும் என்று மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிப்.24ஆம் தேதி சென்னையில் முதல்வர் மருந்தகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிக குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்கும். இதனால், மக்கள் அதிகளவில் பயன்பெறுவதோடு, மருந்து, மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையும் குறையும்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் “Retro” திரைப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகும் ‘கண்ணாடி பூவே’ பாடலின் அறிவிப்பு சிறப்பு போஸ்டர், சூர்யா கைதி உடையில் சிறையில் தன் காதலை நினைத்து பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹960 குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹120 குறைந்து ₹7,940க்கும், சவரனுக்கு ₹960 குறைந்து ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹107க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 96ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி 93ஆவது இடத்திலிருந்த இந்தியா தற்போது 96ஆவது இடத்தில் உள்ளது. இதில், இலங்கை – 121, பாகிஸ்தான் – 135, சீனா – 76வது இடங்களில் உள்ளன. ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் டென்மார்க், பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளன.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எந்த கிரகத்தில் வாழ்கிறார் என்றே தெரியவில்லை என பிரியங்கா காந்தி சாடியுள்ளார். நாட்டில் பணவீக்கம் இல்லை, வேலைவாய்ப்பின்மை இல்லை, விலையேற்றம் இல்லை என்று கூறும் அளவிற்கு நிதியமைச்சர் சென்றுவிட்டதாகவும் அவர் தாக்கி பேசியுள்ளார். கடந்த UPA அரசை காட்டிலும், தற்போதைய NDA அரசாங்கம் மேற்கூறிய விவகாரங்களில் சிறப்பாக செயல்படுவதாக நிதியமைச்சர் பேசியிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் 255 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கியுள்ளனர். தொடக்கக் கல்வித் துறையில் 80, பள்ளிக் கல்வித்துறையில் 175 ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதில் தவறிழைத்த ஆசிரியர்கள் மீது அரசாணை எண் 121இன் படி பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் உடனான ஆலோசனைக்குப் பிறகு வரும் மார்ச் மாதமே இதனை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் நடிக்க வந்த போது, ஒவ்வொரு நாளும் அழுததாக நடிகை நளினி தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளை பராமரிக்கவே மீண்டும் நடிக்க வந்ததாகவும், அந்த காலகட்டத்தில் தனது கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள கூட ஆள் இல்லை எனவும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார். வேண்டாம் என்று தானே சினிமாவை விட்டு விலகி இருந்தேன், திரும்ப ஏன் என்னை நடிக்க வைத்தாய் என கருமாரி அம்மனிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொழில் செய்ய இதுதான் சரியான நேரம் என உலக முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரான்ஸில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளதாகவும், தொழில் செய்ய சிறப்பான சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விண்வெளி, ஏஐ, செமிகண்டக்டர், பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து என பல துறைகளில் வாய்ப்புகள் குவிந்து கிடப்பதாகவும் கூறியுள்ளார்.
Open AI புதிதாக ஏஐ ஏஜெண்ட்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். இந்த ஏஜெண்ட்கள், பல வருட அனுபவங்களை கொண்ட சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் செய்யும் பணிகளை செய்யக்கூடிய திறன் கொண்டவையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், மனித சாஃப்ட்வேர் இன்ஜினியர்களின் மேற்பார்வை தேவைப்படும் கட்டமைப்பாகவே இவை தற்போது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.