news

News February 12, 2025

BLOOD MOON பார்க்கனுமா?

image

இந்தியாவில் தெரியக்கூடிய அடுத்த முழு சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நிகழவுள்ளது. அன்றைய தினம், பூமியில் நிழலால் நிலவு ரத்த நிறத்தில் தென்படும். இந்த முழு கிரகணத்தை இந்தியாவில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னையில் இரவு 11 மணிக்கு தொடங்கும் முழு கிரகணம், நள்ளிரவு 12.22 வரை நீடிக்கும். பகுதி கிரகணம் இரவு 8.58க்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நீடிக்கும்.

News February 12, 2025

இவர்களுக்கு மாதம் ரூ.3,000

image

சிறு மற்றும் அடித்தட்டு விவசாயிகளுக்கு உதவ மத்திய அரசு, ‘பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் இணையும் விவசாயிகளுக்கு, 60 வயது நிறைவடைந்த பின், மாத பென்ஷனாக ₹3,000 வழங்கப்படும். 18-40 வயது விவசாயிகள் இதில் இணையலாம். இதற்கு மாதம் ₹55 – ₹200 பிரீமியம் செலுத்த வேண்டும். ஒருவேளை விவசாயி மரணமடைந்தால், அவரது மனைவிக்கு ₹1,500 மாத பென்ஷனாக கிடைக்கும்.

News February 12, 2025

காங்கிரஸில் இணைந்த முன்னாள் ஜனாதிபதியின் மகன்

image

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் காங்கிரசில் இணைந்தார். கடந்த 2021 ஜூலையில் காங்கிரசில் இருந்து விலகிய அவர், TMC-யில் இணைந்தார். மே.வங்க முதல்வர் மம்தாவோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட்சி பணிகளில் விலகி இருந்த அவர், தற்போது மீண்டும் காங்கிரஸில் ஐக்கியமானார். 2012, 2014இல் இவர் காங்கிரஸ் எம்.பியாக இருந்துள்ளார்.

News February 12, 2025

புதையல் எடுக்கப் போய்… இப்படி ஆகிவிட்டதே

image

வேலூர் அருகே அரியூர் சிவநாதபுரம் மலையில் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தங்கப் புதையல் இருப்பதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு கோயிலின் சுற்றுச்சுவரை கடப்பாரை கொண்டு உடைத்த 3 பேர் புதையலை எடுக்க முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு ஊர்மக்கள் துரத்தியும், பிடிபடாமல் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 12, 2025

தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

image

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!

News February 12, 2025

‘லவ் மேரேஜ்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

image

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கும் இப்படத்தில் சுஷ்மிதா பட், மீனாக்ஷி தினேஷ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகளை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

News February 12, 2025

தை பௌர்ணமி எப்படி வழிபடலாம்?

image

தை மாத பௌர்ணமி, பூச நட்சத்திரத்தில் தோன்றுவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் முருக பக்தர்கள் காவடி எடுத்து பாத யாத்திரை செய்வார்கள். ஒவ்வொரு பௌர்ணமியுமே சிவனுக்கு சிறப்புதான் என்றாலும் தை பௌர்ணமி தினமான இன்று, திருவண்ணாமலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி ஆகிய மலைகளில் பக்தர்கள் கிரிவலம் அல்லது மலையேற்றம் செய்து வழிபடுவார்கள். சிலர் வீட்டிலேயே விரதம் இருந்து விளக்கேற்றுவார்கள்.

News February 12, 2025

கொந்தளிக்கும் ஆப்பிள் ஐஃபோன் யூசர்ஸ்

image

ஆப்பிளின் லேட்டஸ்ட் வெளியீடான ஐஃபோன் 16 குறித்து பயனாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ஃபோன் யூஸ் பண்ணாதபோதே பேட்டரி குறைவதால், நாளொன்றுக்கு 2 முறை சார்ஜ் போட வேண்டிய தேவை இருக்கிறதாம். ஐஃபோன் 16 அதிக சூடாகிறது. ஐஃபோன் 15க்கும் இதற்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாமல் விலை மட்டும் ஏற்றப்பட்டுள்ளது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

News February 12, 2025

பெரிதாகும் போட்டோ.. அதிமுகவில் காட்சி மாற்றம்

image

அதிமுக கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக செங்கோட்டையனின் புகைப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது. கோபி செட்டிப்பாளையத்தில் தற்போது நடைபெற்று வரும் MGR பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் இப்படி பேனர் வைக்கப்பட்டுள்ளது. EPSக்கு எதிராக செங்கோட்டையன் குரல் கொடுத்ததில் இருந்து அதிமுகவில் பல காட்சிகள் மாறி வருகின்றன. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

News February 12, 2025

21 நாட்கள் விதி தெரியுமா?

image

பிடிக்காத அல்லது கெட்டப் பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி பழக்கமாக்க வேண்டுமா? இதற்கு 21 நாட்கள் விதி கைக்கொடுக்கும் என்கின்றனர். எந்த ஒன்றை தினசரி தொடர்ந்து 21 நாட்களுக்கு செய்கிறோமோ, அது அப்படியே தினசரி பழக்கமாகிவிடும் என்கிறது 21 நாட்கள் விதி. இதையே 90 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்…

error: Content is protected !!