India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஸ்ரீதேஜை சந்திக்க செல்லக் கூடாது என அல்லு அர்ஜுனுக்கு காவல்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. கடந்த மாதம் 4ம் தேதி ‘புஷ்பா 2’ படம் பார்க்கச் சென்ற அல்லு அர்ஜுனை பார்க்க கூடிய ரசிகர்களின் நெரிசலில் சிக்கி பலியான ரேவதியின் மகன் ஸ்ரீதேஜ் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார். ஜாமீனில் வெளியில் உள்ள அல்லு அர்ஜுன், சிறுவனை நேரில் சென்று பார்க்க உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக வரும் 11ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. முன்னதாக, 10ஆம் தேதி கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 11ஆம் தேதியாக கணிக்கப்பட்டுள்ளது. 10ஆம் தேதி மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புண்டு.
கிரிக்கெட் வீரர் யுசி சஹால் X தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். ஆனால், இது அவரது சாதனைகளுக்காக அல்ல. அவரது மனைவி தனஸ்ரீயும் சஹாலும் பிரியப் போவதாக வந்த தகவலையடுத்து இவரைப் பற்றிய கருத்துகளை ரசிகர்கள் பகிரத் தொடங்கியிருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் Unfollow செய்து கொண்டதால் விவாகரத்து செய்தி பரவியிருக்கிறது. ஆனால், இதுகுறித்து இருவரும் அதிகாரப்பூர்வமாக ஏதும் பேசவில்லை.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் நாளை தொடங்கவுள்ளது. இதில், 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை நியமிக்கும் சட்டத்தை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இடம் பெறாதது, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை, வேங்கை வயல் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சீனாவில் வேகமாக பரவும் HMPV வைரஸின் தாக்கம் இந்தியாவில் இருக்கிறதா என்று மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறையின் மானிட்டரிங் குழு நேற்று ஆலோசனை நடத்தியது. அதன்பின், சீன நிலவரம் கூர்ந்து கவனிக்கப்படுவதாகவும் WHOக்கு உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது வரை இந்தியாவில் எந்தவித பாதிப்பும் இல்லை.
சுமார் 40 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்துவந்த மாருதியின் சாதனையை டாடா முறியடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் குறித்த டேட்டா வெளியிடப்படும். அதில், 1985 முதல் மாருதியே இடம்பிடித்து வந்தது. முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் அதிகம் விற்கப்பட்ட காராக ‘டாடா பஞ்ச்’ இடம் பிடித்திருக்கிறது.
கேரள லாட்டரிகளை வெளிமாநிலங்களிலும் விற்பனை செய்ய அம்மாநில அரசு சட்டத் திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கட்டுப்பாடுகளுடன் ஏஜெண்டுகளை விரைவில் நியமிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகாவில் லாட்டரி விற்பனைக்குத் தடை உள்ளது. தமிழர்கள் பலரும் கேரளாவில் லாட்டரி வாங்கி வரும் நிலையில், TNஇல் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்தால் போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள்.
பொங்கல் பண்டிகைக்கு ஏற்கெனவே அரசு விடுமுறை 3 நாள்கள் உள்ளது. அதோடு, ஜனவரி 17ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய் (ஜன 14) முதல் ஞாயிறு (ஜன 19) வரை 6 நாள்கள் விடுமுறை வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் கோயில் திருவிழா காரணமாக கடலூரில் 13ஆம் தேதியும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் மட்டும் 9 நாள்கள் விடுமுறை கிடைக்கும்.
உணவிற்கு பிறகு ஸ்வீட் சாப்பிடுவது பலரின் வழக்கம். ஆனால், அது பல உடல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. கல்லீரல் கொழுப்பு அதிகரிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்து Type 2 சர்க்கரை நோய் ஏற்படுவது, ஊட்டச்சத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவது, பல் சுகாதார பிரச்னைகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும். மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஸ்வீட் தொடர்ந்து பழகி, சட்டென கிடைக்காமல் போனால், அது எரிச்சலை உண்டாக்கி, மனநிலையை பாதிக்கும்.
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு கருத்தரங்கில் <<15070558>>CM ஸ்டாலின்<<>>, 3 அறிவிப்புகளை வெளியிட்டார். *சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் வழிவகையைச் செய்வோருக்கு 1 மில்லியன் USD பரிசு. *கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருது. *தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கைக்கு ₹2 கோடி வழங்கப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.