news

News January 5, 2025

வாக்காளர் இறுதிப்பட்டியல் நாளை வெளியீடு

image

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்காக நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தங்கள், விலாசம் மாறுதல் என 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் மீதான பரிசீலனை பணிகள் முடிந்த நிலையில், நாளை ஜனவரி 6ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News January 5, 2025

விளையாட முடியாதது விரக்தியை தந்தது: பும்ரா

image

காயத்தால் விளையாட முடியாதது விரக்தியை ஏற்படுத்தியதாக இந்திய கேப்டன் பும்ரா கூறியுள்ளார். தொடர் நாயகன் விருதை வென்ற பிறகு பேசிய அவர், இந்த தொடரில் பந்துவீச அதிக சாதகமான பிட்ச்-இல் பந்துவீச முடியாமல் போனது பெரிய ஏமாற்றம் என்றார். முதல் இன்னிங்ஸில் விளையாடும் போதே, கொஞ்சம் அசவுகரியமாக உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்ததாகவும், வெற்றி பெற்ற ஆஸி., அணியை வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 5, 2025

பொங்கல் தொகுப்பை பெற நேரில் வர வேண்டும்: அரசு

image

பொங்கல் தொகுப்பு ஜன.9 முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது. இதையொட்டி அரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில், பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் அட்டைதாரர்கள் நேரில் வர வேண்டும் என்றும், கைவிரல் ரேகையை பதிவு செய்து, பிறகு அங்குள்ள புத்தகத்தில் பெயர் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகே தொகுப்பு வழங்கப்படும். மாற்று நபர்களை அனுப்பி வைக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

News January 5, 2025

தீபிகாவின் ₹500 கோடி சொத்து.. என்னென்ன இருக்கு பாருங்க!

image

இன்று 39ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தீபிகா படுகோனின் சொத்து மதிப்பு ₹500 கோடிகள் என ரிப்போர்ட் கூறுகிறது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இவர் இருக்கிறார். ஒரு படத்திற்கு ₹15-₹20 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. பல நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். ₹78 கோடி மதிப்பில் 3 பங்களாக்களை வைத்துள்ளார். ரேஞ்ச் ரோவர், பென்ஸ், BMW உள்ளிட்ட சொகுசு கார்களும் உள்ளன.

News January 5, 2025

திமுக கூட்டணியில் விரிசலா?

image

அண்ணா பல்கலை., மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுகவை எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளே விமர்சிக்கின்றன. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள திமுக, இது தோழமைக்கு நல்லதல்ல என முரசொலி நாளிதழ் வாயிலாக எச்சரித்திருந்தது. இந்நிலையில், திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும், திமுக கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

News January 5, 2025

திருமணமான ஜோடிகளுக்கு மட்டுமே இனி OYOவில் ரூம்

image

OYO ஹோட்டல்களில் திருமணமானவர்கள் மட்டுமே இனி ஜோடியாகத் தங்க முடியும். முதற்கட்டமாக UPஇன் மீரட்டில் இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ஆன்லைன் வாயிலாக புக்கிங் செய்தாலும், திருமணமானதற்கான அடையாள அட்டையைக் காண்பித்தால் மட்டுமே ஜோடியாக தங்க அனுமதி எனக் கூறியுள்ள அந்நிறுவனத்தின் வடக்கு மண்டல அதிகாரி பவாஸ் ஷர்மா, இந்த நடைமுறை விரைவில் மற்ற பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

News January 5, 2025

கறுப்பு நிற துப்பட்டாவுக்கு தடை?

image

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மாணவிகள் கறுப்பு துப்பட்டா அணிந்துவர தடை விதிக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த மாணவிகளிடம் கறுப்பு துப்பட்டா வாங்கி வைக்கப்பட்டதாகவும், வெளியே வரும்போது திருப்பி கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 5, 2025

தேமுதிக, அதிமுக கூட்டணி தொடரும்

image

2026 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக, தேமுதிக கூட்டணி தொடரும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 2021தேர்தலில் அமமுகவுடன் கூட்டணியமைத்து படுதோல்வியடைந்த தேமுதிக, 2024 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியமைத்து தோல்வி கண்டது. 2026ஆம் ஆண்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணியில் தொடரப் போவதாக அறிவித்துள்ளது.

News January 5, 2025

மாணவர்கள் சைக்கிளில் மட்டுமே செல்ல வேண்டும்

image

சென்னை அண்ணா யுனிவர்சிட்டி பதிவாளர் பிரகாஷ் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், *அமேசான், ஸ்விகி உள்ளிட்ட டெலிவரி நபருக்கு கேட் வரை மட்டுமே அனுமதி, *காலை, மாலையில் செக்யூரிட்டிகள் ரோந்து செல்ல வேண்டும். *பாலியல் புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். *மாணவர்கள் வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, சைக்கிளில் மட்டுமே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 5, 2025

வினோத தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

image

பாஜகவின் மாணவர் அமைப்பான ABVPஐச் சேர்ந்த இருவருக்கு வித்தியாசமான தண்டனையை சென்னை HC வழங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் அரசு மீது அவதூறு பரப்பியது தொடர்பான வழக்கில் ABVPஐச் சேர்ந்த யுவராஜ் & ஸ்ரீதரனுக்கு தண்டனை வழங்கப்பட்டது. அது என்னவென்றால், சென்னை GH அவசர சிகிச்சை பிரிவில் இருவரும் ஒரு மாதம் பணிபுரிய வேண்டும் என்பதுதான். இது எப்படி இருக்கு?

error: Content is protected !!