news

News February 14, 2025

பள்ளிகளில் பாலியல் குற்றத்தை தடுக்க அரசு நடவடிக்கை

image

பள்ளிகளில் பாலியல் குற்றம் நடந்தது குறித்து ‘மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டிகள் மற்றும் 14417 என்ற தொலைபேசி எண் மூலம் புகார்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும் என்று கூறிய அவர், இதற்கான வழிகாட்டியை உடனடியாக தயாரிக்க CM உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News February 14, 2025

வீடு, வாகன கடனுக்கான வட்டியை குறைத்த வங்கிகள்

image

ரிசர்வ் வங்கி (RBI ) அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தது. இதன் எதிரொலியாக, பேங்க் ஆப் பரோடா, பிஎன்பி, யூனியன் பேங்க், கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ பேங்க், பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளும் வீடு, வாகனம், கல்வி, தனிநபர் கடனுக்கான வட்டியை 25 புள்ளிகள் குறைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியும் விரைவில் வட்டியை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

News February 14, 2025

அரசியல் கட்சிகள் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரிப்பு

image

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 15 மடங்கு அதிகரித்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதில் 1951-52இல் 54 கட்சிகள் இருந்ததாகவும், 2024ஆம் ஆண்டில் 743ஆக உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், 1951-52இல் மக்களவைத் தேர்தலில் 1,874 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டதாகவும், அதே எண்ணிக்கை 2024இல் 8,360ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

இந்தியாவை மீண்டும் சீண்டும் சீனா!

image

பிரம்மபுத்திராவின் குறுக்கே 60,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அணையை கட்டினால் அருணாச்சல், அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் பிரச்னைகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜ்யசபாவில் பேசிய மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நாட்டின் நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாக கூறினார்.

News February 14, 2025

17.32 கோடி TO 97 கோடி.. வாக்காளர் எண்ணிக்கை உயர்வு

image

இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் 1951-52இல் நாடு முழுவதும் 17.32 கோடி வாக்காளர்கள் இருந்ததாகவும், இந்த எண்ணிக்கை 1957இல் 19.36 கோடியாக அதிகரித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 1991-92இல் வாக்காளர்கள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியதாகவும், 2024இல் 97.91 கோடியாக இருப்பதாகவும் தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

News February 14, 2025

கூடுதல் மகளிர் விடுதி: பெண்களுக்கு நற்செய்தி

image

பணிபுரியும் மகளிருக்காக சென்னை, கோவை, மதுரையில் கூடுதலாக மகளிர் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. கல்வியறிவு, குடும்பச் சூழல், சமூக அந்தஸ்து உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்து வருகிறது. நாட்டின் மொத்த பெண் பணியாளர்களில் 41% பேர் தமிழகத்தில் உள்ளனர். எனவே, அவர்களுக்கு உதவும் வகையில் முக்கிய நகரங்களில் மகளிர் விடுதிகள் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது.

News February 14, 2025

இபிஎஸ் இல்லாத அதிமுக தயாராகிறது: டிடிவி தினகரன்

image

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக தயாராகி வருவதாக டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MGR, ஜெயலலிதாவுக்கு மறு உருவம் கிடையாது எனக் கூறியுள்ள அவர், 23ஆம் புலிகேசி மன்னராக ஆர்.பி.உதயகுமார் இருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார். எடப்பாடி அணியால் நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் எவ்வித நிபந்தனையும் இன்றி இணையத் தயார் எனக் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

News February 14, 2025

ரஞ்சி அரையிறுதியில் விளையாடும் ஜெய்ஸ்வால்

image

சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம் பெறாத ஜெய்ஸ்வால், ரஞ்சி கோப்பை அரையிறுதியில் விளையாடவுள்ளார். இம்மாதம் 17ஆம் தேதி முதல் நாக்பூரில் நடைபெறும் விதர்பாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக விளையாடுகிறார். முதலில் அறிவிக்கப்பட்ட CT அணியில் ஜெய்ஸ்வாலின் பெயர் இருந்தாலும், பின்னர் அவருக்குப் பதிலாக வருண் சக்ரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சப்ஸ்டிடியூட் பட்டியலில் ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

News February 14, 2025

இந்த மாவட்ட திமுக மா.செக்கள் நீக்கம்

image

திமுகவில் முக்கிய மா.செக்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த க.அண்ணாதுரை MLA, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். நீலகிரி மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றிய பா.மு.முபாரக், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றிய TPM மைதீன்கானை பொறுப்புகளில் இருந்து விடுவித்த கட்சித் தலைமை, புதிய நிர்வாகிகளை நியமித்தும் உத்தரவிட்டுள்ளது.

News February 14, 2025

இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான்: மோடி

image

ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிப்பதாக உலகமே நினைக்கிறது என PM மோடி கூறினார். ஆனால், இந்தியா எப்போதும் அமைதியின் பக்கமே இருக்கும் என்று தெரிவித்தார். புதினுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், தன்னைப் போலவே டிரம்பும் நாட்டிற்கே முன்னுரிமை அளிப்பதாகவும், இரு நாடுகளும் வலுப்பெற்று உயரம் தொடும் என்று தான் நம்பவுவதாகவும் கூறினார்.

error: Content is protected !!