India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுக கூட்டணி மூலம் கிடைத்த அன்புமணியின் எம்பி பதவி வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், மீண்டும் எம்பியாக பாஜகவில் காய் நகர்த்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணியில் அங்கம் வகிக்கும் PMK, 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை இன்னும் உறுதியாக சொல்லவில்லை. இந்நிலையில், டெல்லியில் நிதின் கட்கரியை சந்தித்த அவர், கூட்டணி, ராஜ்யசபா எம்.பி பதவி தொடர்பாகப் பேசியதாக கூறப்படுகிறது.
WPL ஏலத்தில் விலை போகாத பருணிகா சிசோடியாவை மும்பை அணி ₹10 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மும்பை அணியின் ஆல்ரவுண்டர் பூஜா, காயம் காரணமாக WPLல் இருந்து விலகிய நிலையில், பருணிகாவை அந்த அணி வாங்கியுள்ளது. சுழல் பந்து வீச்சாளரான இவர், சமீபத்தில் நடந்து முடிந்த U19 டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டார். Economy Rate 2.71 என்ற அளவில் சிறப்பாக பந்துவீசி, அந்த தொடரில் 10 விக்கெட்களை கைப்பற்றினார்.
உ.பி.யில் JEE தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அதானி வேதனை தெரிவித்துள்ளார். தேர்வுகளை விட வாழ்க்கை பெரிது எனவும், ஒவ்வொரு தோல்விக்கு பிறகும் வாழ்க்கை இன்னொரு வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். பெற்றோர்கள் இதை குழந்தைகளுக்கு கூற வேண்டும் எனவும், ஆரம்ப காலங்களில் தானும் பல தோல்விகளை சந்தித்து இந்த நிலைக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1993- 2022 வரை சுமார் 30 ஆண்டுகளில் இந்தியாவில் நேரிட்ட பருவநிலை பாதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில், புயல், மழை, வெள்ளம் போன்ற மோசமான வானிலையால் நாட்டில் 80,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது இக்காலகட்டத்தில் உலகம் முழுவதும் மோசமான வானிலைக்கு பலியானோர் எண்ணிக்கையில் 10%க்கும் அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியிருக்கும் இந்தியர்களை திரும்ப பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சில ஏஜெண்டுகளின் வசீகர பேச்சுகளுக்கு இரையாகி இப்படி வந்து சிக்கிக் கொண்டுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டிலும் ஒருவர் சட்டவிரோதமாக குடியிருப்பதற்கு உரிமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பாகுபாடு காட்டப்படுவதாக நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார். பாலிவுட் பட ஆடிஷனுக்கு சென்றால் ஹிந்தி தெரியுமா என கேட்டுவிட்டு தான் வாய்ப்பு கொடுப்பதாகவும், ஆனால், தென்னிந்திய மொழிகள் தெரியாவிட்டாலும், வட இந்திய ஹீரோயின்களுக்கு இங்கு வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் அவர் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் தன்னால் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
ரேஷன் கடைகளுக்கு வரும் பாெதுமக்களிடம் கனிவான முறையில் நடந்திட வேண்டும் என்று ஊழியர்களுக்கு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர், அனைத்து ரேஷன் பொருள்களையும் ஒரே நேரத்தில் அளித்திட வேண்டும். ரேஷன் கடைகளுக்கு வரும் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், இனி அவருக்கு 8 முதல் 11 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஆயுதங்களுடன் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அண்மையில் அவர் மீது முட்டை வீசத் திட்டமிடுவது போன்ற ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பானது தமிழ்நாட்டிற்குள் மட்டும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பருப்பு வகைகளுக்கான இறக்குமதி வரி விலக்கு சலுகை வரும் 28ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் பிரஹ்லாத் ஜோஷி அறிவித்துள்ள நிலையில், பருப்புகளின் விலை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.135லிருந்து ரூ.160ஆகவும், கடலைப் பருப்பு ரூ.110லிருந்து ரூ.130ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உங்க ஊரில் பருப்பு விலை என்ன?
2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணாவை நாடு கடத்த டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா- அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், டிரம்ப் இதை அறிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ராணா, தற்போது அமெரிக்க சிறையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.