India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜப்பானில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஆண்கள் தனியாக வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவில் வேலை செய்யும் பெண்களுக்கு தனியாக வரும் ஆண்கள் பாலியல் தொல்லை தருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனியாவது திருந்துவார்களா?
வாரம் 90 மணி நேரம் வேலை செய்யுமாறு முதலாளிகள் கூறும் வேளையில், ஒருவர் வேலையால் தனது குடும்பத்தையே இழந்து நிற்கிறார். டெக் நிறுவனத்தில் தினமும் 14 மணி நேரம் என 3 ஆண்டுகள் அவர் கடுமையாக வேலை செய்துள்ளார். இந்த காலத்தில் அவருக்கு குழந்தை பிறந்து, குழந்தையையும், மனைவியையும் கவனித்துக் கொள்ள முடியாமல் போனது. இதனால் மனைவி டைவர்ஸ் கேட்க, ₹7.8 கோடி சம்பளத்தில் தற்போது அவருக்கு ப்ரமோஷன் கிடைத்துள்ளது.
H5N1 (avian flu) என்ற புதிய வகை பறவைக்காய்ச்சல் மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், நாம் கடைகளில் வாங்கி உண்ணும் சிக்கன் & முட்டையை தவிர்க்கலாம். தேவைப்படும்போது இரண்டையும் வீட்டில் வாங்கி சமைப்பதே பாதுகாப்பானது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் 75 டிகிரி செல்சியசில் வெப்பநிலையில் சமைக்கும்போது, வைரஸ்கள் செயலிழந்து போகும் என்பதால் ஆபத்து இருக்காது.
பொதுவெளியில் சபை நாகரிகத்தை கடைபிடிக்க வேண்டும் என கராத்தே தியாகராஜனுக்கு, BJP MLA நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். நெல்லையில் அரசு நிகழ்ச்சியில் பிரதமரை, முதல்வர் விமர்சித்த நிலையில், மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பாஜகவின் கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தன் தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் பிளேயிங் லெவனை இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில், ரோகித் சர்மா, சுப்மன் கில் , விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளனர். வருண் சக்ரவர்த்தி
இந்த அணியில் இடம்பெறவில்லை.
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த சிறப்பு நிகழ்ச்சி வரும் 19ஆம் தேதி நடைபெறும் என்று தலைவர் டிம் குக் அறிவித்திருக்கிறார். அன்றைய தினம், iPhone SE 4 என்ற புதிய ஸ்மார்ட் ஃபோன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறைந்த விலையில் வெளியாகவிருக்கும் இந்த ஐஃபோனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நீங்கள் அடுத்த ஐஃபோனை வாங்கத் தயாராகி விட்டீர்களா?
சாம்பியன்ஸ் டிராபியின் பரிசுத்தொகையை ICC அறிவித்துள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ₹20.8 கோடியும், ரன்னர் அப் ஆகும் அணிக்கு ₹10.4 கோடியும், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகளுக்கு ₹5.2 கோடியும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து அணிகளுக்கும் மொத்தம் ₹60 கோடி பரிசு வழங்கப்பட உள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, பாகிஸ்தானில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 625 புள்ளிகள் சரிந்து 75,512 புள்ளிகளாக வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 246 புள்ளிகள் குறைந்து 22,784ஆக வர்த்தகமானது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பும், இந்த சரிவுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் மீண்டும் இணைய வேண்டும் என்றால் 6 மாதங்கள் அமைதியாக இருக்க வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் இருந்தால், இபிஎஸ்-யிடம் நாங்கள் பேசி நடவடிக்கை எடுக்கச் சொல்வோம் என்றும் கூறியுள்ளார். ராஜன் செல்லப்பாவின் இந்த கருத்து ஓபிஎஸ்க்கு காட்டப்பட்ட பச்சைக்கொடி என சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடான பழநி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா அண்மையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது முருகன் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. கனிக்காக பழநியில் அமர்ந்த முருகனின் எலுமிச்சை கனியை வாங்க கோயிலுக்கு வந்திருந்தவர்கள் போட்டிப்போட்டனர். கடைசியாக திருவரங்குளத்தை சேர்ந்த பக்தர் ₹ 5 லட்சத்துக்கு அதனை ஏலத்தில் எடுத்தார்.
Sorry, no posts matched your criteria.