India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உரையை வாசிப்பதற்காக பேரவை வந்த ஆளுநர் திடீரென வெளியேறியிருக்கிறார். இதற்கான காரணம் அறிய தொடர்ந்து Way2Newsஐ பின் தொடரவும்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் 9.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய தினம் ஆளுநர் பேரவையில் உரையாற்றுகிறார். அரசின் சாதனைகளைப் பேசி, இந்த ஆண்டுக்கான திட்டங்களை அவர் விளக்குவார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை ஆலோசிக்க வலியுறுத்தி ‘யார் அந்த சார்’ என்று பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்துள்ளனர் அதிமுக MLAக்கள். என்ன செய்யப் போகிறது அரசு?
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கும் நிலையில் அதிமுக MLAக்கள் சட்டையில் ‘யார் அந்த சார்?’ பேட்ஜ் குத்தியபடி வந்தனர். முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கும் முன் EPSஉடன் MLAக்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின், அறையை விட்டு வெளியே வந்த MLAக்கள் சட்டையில் பேட்ஜ் அணிந்து வந்தனர். அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக அவர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்லுப்பாறை அருகே வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயமடைந்தவர்களை மீட்டனர். இதில், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சாஹல் தனது மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தனஸ்ரீயின் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், அவர் தனது நண்பரும், நடன இயக்குனருமான பிரதீக்குடன் நெருக்கமாக இருக்கிறார். ஏற்கெனவே, இப்படம் இணையத்தில் வெளியான போது, இப்படி எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என தனஸ்ரீயை சாஹல் ரசிகர்கள் கடிந்தனர். இந்நிலையில், மீண்டும் அப்புகைப்படம் வைரலாகி உள்ளது.
கொத்தாக வாழைப்பழங்களை வாங்கும் போது, சிங்கிள் பழங்களை குறித்து யோசித்தது உண்டா? வியாபாரமாவதை விட அதிகளவில் வீணாகி, Food Waste அதிகமாகின்றன. இதனைத் தவிர்க்க ஜெர்மனியில் நூதன முயற்சி கையாளப்படுகிறது. ஒரு பழத்தை வைத்து அத்துடன் “சிங்கிளாக இருக்கும் நாங்களும் வாங்க வேண்டியவர்களே” என இரக்கத்தை தூண்டும் வகையில் செண்டிமெண்ட் வாசகங்கள் வைக்கப்பட, விற்பனை அதிகரித்து, Food wasteம் குறைவதாக கூறுகிறார்கள்.
கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வரும் தேர்தலில் அவர் தோல்வியை சந்திக்கலாம் என்று பெருவாரியான கருத்துக் கணிப்புகள் கூறுவதால் அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இன்றோ அல்லது 8ஆம் தேதியோ அவர் பதவி விலகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நிதியமைச்சர் டோமினிக் லிபிளாங்கை பொறுப்பு அதிபராக அவர் நியமிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஜனவரி மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரும் 10ஆம் தேதியே வரவு வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியே மகளிர் உரிமைத் தொகை ₹1000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதேபோல, இந்த ஆண்டும் முன்கூட்டியே பணம் வரவு வைக்கப்படவுள்ளது. பொங்கலை கொண்டாட ரெடியா மக்களே?
அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி சபாநாயகரிடம் ADMK கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது. DMKவின் கூட்டணிக் கட்சியான VCKவும், இவ்விவகாரம் குறித்து பேரவையில் விவாதிக்கக் கோரி நோட்டீஸ் கொடுத்துள்ளது. இந்த தீர்மானங்களை விவாதத்திற்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானிப்பார். ஒருபக்கம் எதிர்கட்சி, மறுபக்கம் கூட்டணிக் கட்சி என DMKவுக்கு நெருக்கடி காத்திருக்கிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு தடையை மீறி போராட முயன்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர். அதிமுக மாணவரணிச் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் யூனிவர்சிட்டி மாணவர்களுக்கு கருப்பு பேட்ஜ் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், போலீசார் அவர்களை கேட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.