India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN சட்டப்பேரவையில் இருந்து பாமக MLAக்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் GK மணி, ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு உரிமை உள்ளதாகவும், போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதைக் கண்டித்து பாமக வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலை. விவகாரத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமக மகளிரணியினரை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு பெரிய லாக்டவுன் ஏற்பட்டு விடுமோ என அச்சுறுத்தும் வகையில் சீனாவில் வேகமாக பரவி வருகிறது HMPV வைரஸ். இது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் 2 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளை, 65 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகளவில் பாதிக்கிறது. இதன் பொதுவான symptoms: காய்ச்சல், குளிர் ஜூரம், மூச்சுநுண்குழாய் அழற்சி, சளி போன்றவை ஆகும். இந்த வைரஸ் பாதிப்பை உறுதிப்படுத்த ஆய்வக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சீனாவில் வேகமாக பரவிவரும் HMPV வைரஸ் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்குள் நுழையக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும் பெங்களூருவில் 8 மாத குழந்தைக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குழந்தையை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என்று மாநில அரசு அரசாணையே வெளியிட்டிருக்கிறது. ஆனால், பேரவையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியிருக்கிறார். அதனை சபாநாயகரும் முதல்வரும் ஏற்காததால் ஆளுநர் வெளியேறியிருக்கிறார்.
உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதால் அதனை சபாநாயகர் தானே வாசித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை ஆளுநர் உரையாக வாசிப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டும் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியதால் சபாநாயகர் அதனை தமிழில் வாசித்து வருகிறார்.
சட்டப்பேரவையில் உரையை தொடங்குவதற்கு முன்னரும், பின்னரும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் மட்டும் இந்த முறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் ராஜ்பவன் குற்றம்சாட்டியுள்ளது. இது தேசிய கீதத்துக்கு அவமானம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கியது. இதனிடையே, பேரவையில் இருந்து வெளியேறிய செல்வப்பெருந்தகை, ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்., MLAக்கள் வெளிநடப்பு செய்ததாகக் கூறினார். நீட்டிற்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவதாகவும், தமிழகத்திற்கு எதிராக உள்ளதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்து வந்ததாகவும் கூறினார்.
ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சற்றுமுன் தொடங்கிய நிலையில், ஆளுநர் உடனடியாக அவையில் இருந்து வெளியேறினார். வழக்கமாக சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படும். ஆனால், இம்முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்படாததால், உள்ளே என்ன நடந்தது என்பது உடனடியாக தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியே வந்து கூறினால் தான் உள்ளே நடந்தது தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆளுநர் உரையை வாசிப்பதற்கு முன்பே அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பத் தொடங்கிய அதிமுகவினர் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ‘யார் அந்த சார்?’ என்ற பதாகை ஏந்தி கோஷம் எழுப்பி வருகின்றனர்.
சட்டப்பேரவையில் தேசியகீதம் பாட அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி ஆளுநர் வெளியேறியிருக்கிறார். உரையை வாசிப்பதற்காக பேரவைக்கு வந்த ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்தவுடன் தேசியகீதம் பாட வேண்டும் என்றார். அப்போது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனை ஏற்க மாட்டாமல் ஆளுநர் விருட்டென சபையை விட்டு வெளியேறினார்.
Sorry, no posts matched your criteria.