news

News January 6, 2025

நடிகைக்கு FB-இல் ஆபாச கமெண்ட்: 27 பேர் மீது வழக்கு

image

நடிகை ஹனிரோஸ் தனக்கு ஒருவர் தொல்லை கொடுப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தார். தொடர்ந்து அந்த பதிவில் ஆபாசமான கருத்திட்டவர்கள் மீது அவர் எர்ணாகுளம் போலீஸில் புகார் அளிக்க, 27 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஓராண்டு சிறை (அ) அபாரதம் விதிக்கும் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த கமெண்ட்களை கடந்து போகலாம் என்றாலும், சட்ட நடவடிக்கை எடுப்பது தேவையென கருதுவதாக ஹனிரோஸ் தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

அவங்களுக்கே இந்த நிலைமை என்றால்.. எங்களுக்கு? இபிஎஸ்

image

கூட்டணிக் கட்சிகளுக்கு கூட போராட்டம் நடத்த DMK அரசு அனுமதி கொடுப்பதில்லை என EPS குற்றஞ்சாட்டினார். கூட்டணிக் கட்சிகளுக்கே இந்த நிலை என்றால், எதிர்க்கட்சிகளின் நிலையை நினைத்து பாருங்கள் என்றார். ஒட்டுமொத்த இந்தியாவே யார் அந்த சார் என்று கேட்டு வருவதாக கூறிய அவர், நீதிமன்றம் தாமாக வழக்கை விசாரிக்கவில்லை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டுமென அதிமுகதான் வழக்கு தொடுத்ததாகவும் கூறினார்.

News January 6, 2025

HMPV: அறிகுறிகள், சிகிச்சை என்ன?

image

சாதாரண, சளி காய்ச்சல், மூச்சு திணறல் அறிகுறிகளையே HMPV வைரஸ் கொண்டிருக்கிறது. 2001ல் கண்டறியப்பட்ட இந்த வைரசுக்கு தனிப்பட்ட சிகிச்சையோ, மருந்தோ இல்லை. சில பரிந்துரைகள் முன் எச்சரிக்கையாக வழங்கப்படுகிறது. காய்ச்சல் – சளிக்கான மருத்துவம் எடுப்பது, உடலில் நீர்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுதல், ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அறிகுறிகள் பல நாள்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

News January 6, 2025

மீண்டும் லாக்-டவுன் வருமா?

image

HMPV தொற்று இந்தியாவிலும் உறுதிப்படுத்தப் பட்டதாகத் தொடர்ந்து மீண்டும் லாக்-டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020ஆம் ஆண்டு லாக்-டவுன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு உலகம் முழுவதும் கடுமையாக இருந்தது. இதனையடுத்து, 2021ஆம் ஆண்டு கோவிட் இரண்டாவது அலையின்போது முழு லாக்-டவுன் இல்லாமல் பெருந்தொற்று எதிர்கொள்ளப்பட்டது. ஆகையால், HMPV பரவினால் அதன் தீவிரத்தை பொறுத்தே லாக்-டவுன் தொடர்பான முடிவு எடுக்கப்படும்.

News January 6, 2025

உள்ளாட்சி அமைப்புக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம்

image

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்ததால், சிறப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 9,624 ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 27 மாவட்ட ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சிறப்பு அலுவலர்களாகவும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊராட்சிகளின் உதவி இயக்குநர் சிறப்பு அலுவர்களாகவும் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

News January 6, 2025

பங்குச்சந்தை கடும் சரிவு

image

இந்தியாவில் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டபோது இந்திய சந்தைகள் சுமார் 30 சதவீதத்துக்கும் மேல் மதிப்பை இழந்தன. அதேபோல இந்த முறையும் சந்தை சரிவை சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. இன்று நிஃப்டி சுமார் 350 புள்ளிகளை இழந்து 23,659க்கு வர்த்தகம் ஆகிறது.

News January 6, 2025

பத்திரப்பதிவு மூலம் ₹15,000 கோடி வருவாய்

image

தமிழகத்தில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் ₹15,000 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட ₹2,000 கோடி அதிகமாகும். 25 லட்சத்து 3,365 ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ததன் மூலம் இந்த வருவாய் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News January 6, 2025

ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்

image

சட்டப்பேரவையை அவமதித்த ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். திமுக அரசின் சாதனைகளை படிக்க விரும்பாமல், ஆளுநர் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பொய்யான அவதூறு செய்திகளுக்கு எல்லாம் திமுக அரசு அஞ்சாது என்றும், ஆளுநரின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்கள் பார்த்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.

News January 6, 2025

இந்தியாவில் HMPV வைரஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று இருப்பதை ICMR உறுதி செய்துள்ளது. சீனாவில் அதிகளவில் பரவி வரும் இந்த வைரஸ், பெங்களூருவில் 8 மாத ஆண் குழந்தைக்கும், 3 மாத பெண் குழந்தைக்கும் உறுதியாகியுள்ளது. ஆனால், இவ்விவகாரத்தில் திருப்பமாக தாய்க்கும், சேய்க்கும் வெளிநாட்டு தொடர்பு இல்லை. இருந்தும் இந்த வைரஸ் அவர்களுக்கு எப்படி பரவியது என்ற கேள்வி எழுந்துள்ளது.

News January 6, 2025

இந்திய படத்திற்கு ஜஸ்ட் மிஸ்ஸான Golden Globe விருது

image

சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது ‘All we imagine as light’ படத்திற்காக பாயல் கபாடியாவிற்கு ஜஸ்ட் மிஸ் ஆனது. நடைபெற்று வரும் விருது விழாவில் The Brutalist படத்திற்காக பிராடி கார்பெட் விருதை வென்றுள்ளார். இது 2025 கோல்டன் குளோப்-இல் பயல் கபாடியாவிற்கு கைநழுவிய 2வது விருது இது. ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம் பிரிவிலும் ‘All we imagine as light’ படம் நாமினேட்டாகி தோல்வியடைந்தது.

error: Content is protected !!