news

News February 15, 2025

எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகம் குடிக்கிறார்கள்?

image

நாட்டிலேயே அசாமில் தான் பெண்கள் அதிகம் மது அருந்துகிறார்கள் என்கிறது லேட்டஸ்ட் சர்வே. நாட்டில் 15-49 வயது பெண்களில் 1.2% பேர் மது அருந்துகிறார்கள். ஆனால், அசாமில் இந்த அளவு 16.5% ஆகவும், மேகாலயாவில்(8.7%), அருணாச்சலில் (3.3%) ஆகவுள்ளது. ஜார்க்கண்ட், திரிபுராவில் 1%-க்கு கிழே குறைந்துள்ள நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்கள் இந்த பட்டியல்லயே இல்லை. அவ்வளவு கொஞ்சமாவா குடிக்கிறாங்க?

News February 15, 2025

சிவகார்த்திகேயன் செய்த மறக்க முடியாத உதவி❤️❤️

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சஜீவன் சஞ்சனா, தன்னால் மறக்க முடியாத நிகழ்வு ஒன்றினை நினைவுகூர்ந்துள்ளார். 2018 வயநாடு வெள்ளத்தில் எனது கிரிக்கெட் உபகரணங்களை இழந்தேன். அப்போது சிவகார்த்திகேயன் எனக்கு ஃபோன் செய்து, ஏதாவது உதவி வேண்டுமா எனக் கேட்டார். அப்போது அடுத்த போட்டியில் விளையாட ஸ்பைக்ஸ் ஷூ வேண்டும் என்றேன். ஒரே வாரத்தில் அது எனது வீட்டுக்கு வந்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

News February 15, 2025

தவெக பொதுக்கூட்டம்: தேதி அறிவித்தார் விஜய்

image

தவெக தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, அக்கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பல இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், கடைசியில் சென்னையை அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள CONFLUENCE CONVENTIONAL CENTRE இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் 26ஆம் தேதியன்று தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

News February 15, 2025

கும்பமேளாவை நீட்டிக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

image

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வரும் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளதால், பிரயாக்ராஜை நோக்கி அதிக பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ரயில்களிலும், பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கும்பமேளாவை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் கோரியுள்ளார். கடந்த முறை 75 நாட்கள் வரை நடத்தப்பட்டதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

News February 15, 2025

சாம்பியன்ஸ் டிராபி: அதிக ரன்கள் குவித்த வீரர் தெரியுமா?

image

சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கெய்ல் அதிகபட்சமாக 791 ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார். 2ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே (742 ரன்கள்), 3ஆவதாக இந்தியாவின் தவான் (701), 4ஆவதாக இலங்கை முன்னாள் வீரர் சங்ககரா (683), 5ஆவதாக இந்திய முன்னாள் வீரர் கங்குலி (665) ஆகியோர் உள்ளனர். கோலி (529) 11ஆவது இடத்திலும், ரோஹித் (481) 14ஆவது இடத்திலும் உள்ளனர்.

News February 15, 2025

டெல்லி புது CM யார்? தொடரும் ஆலோசனை!

image

டெல்லியில் அமோக வெற்றி பெற்ற பாஜக, யாரை முதல்வராக நியமிப்பது என்பது குறித்து ஜேபி நட்டா தலைமையில் இன்று ஆலோசிக்கவுள்ளது. மோடி நாடு திரும்புவதற்காக காத்திருந்த கட்சியினர், அவர் திரும்பியதால் மும்முரமாக CM தேர்வில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட 48 எம்எல்ஏக்களில் ஒருவரே CM ஆவார். Dy CM பதவி இருக்க போவதில்லை. அடுத்த 2 நாள்களில் யார் CM என்பது தெரிய வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News February 15, 2025

பூமியை காப்பாற்றும் முயற்சியில் சீனா

image

ஹாலிவுட் திரைப்படங்களைப் பொறுத்தவரை பூமியை காப்பாற்றும் முயற்சிகளை அமெரிக்காதானே செய்யும்? ஆனால், தற்போது சீனா அந்த பொறுப்பை கையில் எடுத்துள்ளது. 2024 YR4 என்ற விண்கல் 2032ஆம் ஆண்டு பூமியில் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதனை திசை திருப்பும் முயற்சியில் சீனா குதித்துள்ளது. 2028ஆம் ஆண்டுக்குள் அதனை திசை திருப்ப வேண்டிய தேவை இருப்பதால், பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

News February 15, 2025

தமிழகத்துக்கு நிதி தர முடியாது: மத்திய அரசு

image

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு வர வேண்டிய ₹2,152 கோடியை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு கொடுத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து பேசிய தர்மேந்திர பிரதான், அரசியல் காரணங்களுக்காக தமிழகம் மும்மொழிக் கொள்கையை மறுப்பதாகக் கூறினார்.

News February 15, 2025

சிவகார்த்திகேயேன் படம் ரீ ரிலீஸ்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

image

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 2016-இல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம் ‘ரஜினிமுருகன்’. தற்போது இப்படத்தை 9 ஆண்டுகளுக்கு பிறகு ரீ ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனமான ‘திருப்பதி பிரதர்ஸ்’ முடிவு செய்துள்ளது. மார்ச் மாதம் இப்படம் மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். யாருக்கெல்லாம் ரஜினிமுருகன் பிடிக்கும்?

News February 15, 2025

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி காலமானார்

image

அண்ணா பல்கலை., முன்னாள் துணைவேந்தர் வாசகம் (91) காலமானார். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர், இஸ்ரோ விஞ்ஞானி, திருவனந்தபுரம் தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார். நாட்டின் விண்வெளி திட்டத்தில் முக்கிய பங்காற்றிய இவர், மிக இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று பெங்களூரு இல்லத்தில் காலமானார்.

error: Content is protected !!