India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டாஸ்மாக் கடைகளில் ஜன.1ஆம் தேதி மது மற்றும் பீர் விற்பனை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், விற்பனை சரிவிற்கான காரணத்தை கண்டறியும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், விற்பனை சரியாமல் இருப்பதையும், போலி மது விற்பனை நடைபெறாமல் உறுதி செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
ஆப்கன் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, உள்நாட்டில் ஏற்பட்ட தோல்விகளுக்கு அண்டை நாடுகளின் மீது குற்றம் சுமத்துவது பாகிஸ்தானுக்கு பழக்கமாகிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். AFG-PAK எல்லையில் தற்போது தீவிர தாக்குதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மதுபிரியர்கள் அதிகம் விரும்பி குடிக்கும் பானங்களில் பீரும் ஒன்று. 2025 ஜன. 1இல் டாஸ்மாக்கில் 90,109 பீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளன. 2024 ஜன.1இல் 93, 883 விற்பனையாகின. அதனுடன் ஒப்பிடுகையில் இது 4.02% குறைவு. 2024 டிசம்பரிலும் பீர் விற்பனை 1.48% குறைந்துள்ளது. ஜன.1இல் நெல்லை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பீர் விற்பனை குறைந்துள்ளது. சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
பெண்களின் பாலியல் எண்ணங்களை கண்டறியும் வகையில், சர்வதேச ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பெண்கள் முதலில் சுயநினைவுடனும், பின்னர் சுயநினைவு இல்லாத நிலையிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பெரும்பாலான பெண்கள் சுயநினைவு இல்லாத நிலையில், தங்களுக்கு பெண்கள் மீதே அதிக ஈர்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், பாலியல் உறவுக்கு ஆண்களையே பெரும்பாலான பெண்கள் தேர்வு செய்துள்ளனர்.
நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊசி மூலம் மருந்து செலுத்தி டாக்டர் சந்தான கோபாலன் தற்கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலுக்கும் தெரியவில்லை. அவரின் உடலை மீட்டு, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய ரயில்வே ஒரு வரலாற்று மாற்றத்தை கண்டுள்ளதாக PM மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். 2014 வரை நாடு முழுவதும் 35% ரயில் பாதைகள் மட்டுமே மின்மயமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அது 100%ஐ நெருங்கிவிட்டது என்றார். மேலும், உள்கட்டமைப்பை நவீனமயமாக்குதல், பயணிகளுக்கு நவீன வசதிகள், நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில் சேவை ஆகியவற்றை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரபு தெரிந்தும் சட்டப்பேரவையை ஆளுநர் ரவி அவமதித்துள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் பாடவில்லை எனக்கூறி ஆளுநர் வெளியேறி இருப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக தெரிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், R.N.ரவியின் செயல்பாடு அரசியல் சாசன பொறுப்புக்கு ஏற்றது இல்லை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கைதானவர்கள் 6 மாதத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில், இதற்கு மேலும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டிய தேவை ஏன் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விஷச்சாராயம் குடித்து 68 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக 18 பேர் மீது குண்டாஸ் போடப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திமுக நாளை போராட்டம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், ஒன்றிய அரசின் மீதுள்ள மக்களின் கோபத்தை திசை மாற்றும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
BGT கடைசி டெஸ்டில் பும்ரா காயமடைந்து பாதியிலேயே போட்டியில் இருந்து வெளியேறினார். அவருக்கு முதுகு தசை பிடிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில்தான், வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 5 T20, 3 ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. பும்ரா இல்லாதது என்ன மாற்றத்தை அணிக்கு கொடுக்கும்.
Sorry, no posts matched your criteria.