India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகாவை போல், தமிழகத்திலும் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கை எடுப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வைரஸ் தொற்று குறித்து யாரும் பதற்றமடைய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஹன்சிகா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஹன்சிகா சகோதரர் பிரசாந்தின் மனைவியும், சீரியல் நடிகையுமான முஸ்கான் நான்சி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கணவர் பிரசாந்த், அத்தை ஜோதி, ஹன்சிகா பணம் கேட்டு மனரீதியில் துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து 3 பேர் மீதும் டிசம்பரில் குடும்ப வன்முறை வழக்குப்பதிவு ஆகியுள்ளது. ஆனால் தற்போதே தெரிய வந்துள்ளது.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் இன்று ஒட்டுமொத்தமாக தணிக்கை செய்யப்பட்டிருப்பது, அவசர காலத்தை நாட்டுக்கு நினைவூட்டுவதாக, ஆளுநர் ரவி பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். தமிழக மக்கள், பேரவையின் உண்மையான நடவடிக்கைகள், அவர்களது தொகுதி பிரதிநிதிகளின் நடத்தை ஆகியவற்றை அறிவதில் இருந்து விலக்கப்பட்டனர். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமையும் வெட்கக்கேடான முறையில் நசுக்கப்பட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு புதிய HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் HMPV தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கர்நாடகா 2, குஜராத் 1, கொல்கத்தா 1, தமிழ்நாட்டில் 2 என ஒரே நாளில் 6 பேருக்கு இந்த தொற்று உறுதியாகியுள்ளது. சளி, இருமல், தொண்டை எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்றவை இதன் அறிகுறியாகும்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாக இருந்ததால், இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. தற்போது படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. அஜித் ஃபேன்ஸ்க்கு பொங்கல் ஏப்ரலில்தான் போல!
HMPV வைரஸ் பரவல் எதிரொலியாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 2 குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலை பொறுத்து மற்ற மாநிலங்களிலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ODI தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா கேப்டனாகவும், தீப்தி சர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், உமா செத்ரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஹர்மன்ப்ரீத் கவுர், ரேணுகா சிங் தாக்கூர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளவர்களின் விவரங்கள் மூலம் நம் நாட்டில் எத்தனை பேர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ஆண்டுக்கு 5 – 10 லட்சம் சம்பளம் வாங்குவோர் 1.28 கோடி பேர் இருக்கின்றனர். 10-15 லட்சம் சம்பளம் பெறுவோர் 50 லட்சம் பேர், 15 – 20 LPA – 19 லட்சம் பேர், 20-25 LPA – 9 லட்சம் பேர், 25 – 50 LPA – 13 லட்சம் பேர் எனத் தெரியவந்துள்ளது.
சீன வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, டிப்ஸ்களை தெரிந்து கொள்வோம். *கைகளை தண்ணீர், சோப் கொண்டோ (அ) சானிடைசர் காெண்டோ 20 விநாடிகள் சுத்தம் செய்தல் *இருமல் (அ) தும்மலின்போது வாய், மூக்கை துணியை கொண்டு மூடுதல் *மாஸ்க் அணிதல் *உடல்நிலை பாதிக்கப்பட்டோரிடம் இருந்து விலகி இருத்தல் *சுத்தமில்லாத கைகளால் கண்கள், மூக்கு, வாயை தொடுவதை தவிர்த்தல் *உடல்நிலை பாதித்தால் சுயதனிமை. SHARE IT.
சட்டப்பேரவை மரபை ஆளுநர் காக்க வேண்டும் என விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் பேரவை கூடும் பொழுதும், மரபு சார்ந்த செயல்பாடுகளில் ஆளுநர் – அரசுக்கு இடையே மோதல் போக்கு உருவாவது தொடர்கதையாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல, இந்தப் போக்கை கைவிட்டு, மக்கள் பிரச்னைகள் குறித்தான விவாதங்களே பேரவையில் இடம் பெற வேண்டும். அதனை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.