news

News February 16, 2025

இந்த உணவுகளை மீண்டும் சுட வைத்து சாப்பிடுகிறீர்களா?

image

இரவு சமைத்த உணவு மீதம் இருந்தால், அதனை சுடவைத்து மீண்டும் சாப்பிடும் வழக்கம் நம் வீடுகளில் அதிகம். ஆனால் சில உணவுகளை இவ்வாறு சுடவைத்து சாப்பிடும் போது, அதில், நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, கடல்சார் உணவுகள், பச்சை காய்கறிகள், முட்டை, உருளைக்கிழங்கு, fried rice போன்றவற்றை நிச்சயமாக சுடவைத்து சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

News February 16, 2025

டிரம்ப் ரஷ்யா வரக்கூடாது: உக்ரைன் அதிபர் வார்னிங்

image

உக்ரைனின் பங்களிப்பு இல்லாமல் நடத்தப்படும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை ஏற்க மாட்டோம் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தவறான வழியில் போர் நிறுத்தம் ஏற்பட்டால், அது ரஷ்யாவிற்கு கூடுதல் பலன்களை கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், 2ஆம் உலகப்போரை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் பங்கேற்க டிரம்ப் ரஷ்யா வந்தால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

News February 16, 2025

ஹிட் கொடுத்தாலும் சான்ஸ் கிடைக்கல: ஐஸ்வர்யா

image

தெலுங்கில் நடித்த ‘சங்கராந்திக்கி வஸ்துனம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும், தனக்கு இன்னும் ஒரு தெலுங்கு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தனக்கு வாய்ப்பு வழங்க தெலுங்கு திரையுலகினரும், மக்களும் கால அவகாசம் எடுத்துக் கொள்வார்கள் என நினைப்பதாகவும், தான் கமர்ஷியல் ரக ஹீரோயின் கிடையாது என்பதால் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லையோ என தோன்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை.. நாளை ஹால்டிக்கெட்

image

நாடு முழுவதும் 9- 12ஆம் வகுப்பு வரை சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழகத்தில் மட்டும் 6,695 பேர் தேர்வு செய்யப்படுவர். இந்தத் தேர்வு பிப்.22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நாளை (பிப்.17) ஹால்டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.

News February 16, 2025

உங்கள் பணத்தை சேமிக்க உதவும் ஈசி டிப்ஸ்!

image

*நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்பதை ட்ராக் செய்வது அவசியம். இதன் மூலம் தேவையற்ற செலவுகள் குறித்த கணக்குகளை அறியலாம் *உங்களின் வருமானத்தில் EMI 40% தாண்டாமல் இருப்பது அவசியம் *ஒரே வருமான ஆதாரத்தை மட்டுமே சார்ந்து இருக்காமல் கூடுதல் வருமான ஆதாரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள் *குறுகிய காலச் சேமிப்பை சரியாக செய்து முடியுங்கள். அது உங்களை மேலும் சேமிக்க தூண்டும். SHARE IT.

News February 16, 2025

இங்கிலாந்து வீரர்கள் தப்பிக்க பார்க்கிறார்கள்: அஸ்வின்

image

ENG திறமையான அணியாக இருந்தாலும், தொடர் தோல்விகளை சந்தித்துவிட்டு அதற்கு சப்பைக்கட்டு காரணங்களை கூறி வருவது ஏமாற்றம் அளிப்பதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு திறமை இல்லாமல் இல்லை எனவும், ஆனால், தோல்வியை சந்திக்கும் போது தொடர்ந்து ஏதாவது காரணங்களை கூறி தப்பிக்க பார்ப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது அவர்களின் மனநிலையை காட்டுவதாகவும், தவறை திருத்திக் கொள்ள முனையவில்லை எனவும் கூறியுள்ளார்.

News February 16, 2025

தமிழகத்தை Balackmail செய்யும் மத்திய அரசு: CM ஸ்டாலின்

image

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி இல்லை என ‘Blackmail’ செய்வதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் எனவும், திமிராக பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

News February 16, 2025

கள்ளச்சாராய விவகாரத்தில் 2 பேர் கொலை: சீமான் காட்டம்

image

மயிலாடுதுறை கள்ளச்சாராய விவகாரத்தில் காவல்துறையின் அலட்சியத்தால் தான் இருவர் கொல்லப்பட்டதாக சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்விரோதம் காரணம் என போலீசார் விளக்கமளிப்பது வியப்பளிப்பதாகவும், முன்விரோதம் ஏற்படக் காரணமே சாராய விற்பனைதானே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நினைத்தால் குற்றத்தை தடுக்க வேண்டும், காரணத்தை மறைக்க கூடாது எனவும் கூறியுள்ளார்.

News February 16, 2025

கடவுளை ஏன் பூக்களை வைத்து வணங்குகிறோம்?

image

கடவுளை வணங்கும் போது, பூக்களை வைத்தே வணங்குகிறோம். இது ஏன் என்ற கேள்வி எழுந்ததுண்டா? இந்துபுராணங்களின் படி, அனைத்து கடவுள்களும் பூக்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பூக்களின் நறுமணம் கடவுள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஐதீகம். மேலும் , பூக்களைச் சமர்பிப்பதன் மூலம், ஒருவருக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.

News February 16, 2025

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் பலி 18ஆக உயர்வு

image

டெல்லி ரயில் நிலையத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலில் பலியானோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. கும்பமேளாவுக்காக டெல்லியில் இருந்து நேற்றிரவு தாமதமாக இயக்கப்பட்ட 2 ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பெண்கள், 4 சிறார்கள் உள்ளிட்ட 18 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் உடல் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது.

error: Content is protected !!