India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரேசிலை சேர்ந்த கன்னியாஸ்திரி இனா கானபரோ தான், தற்போது உலகின் மிக வயதான நபராம். 117 வயதாகும் இவருக்கு கால்பந்து என்றால் உயிர். சிறுவயதில் மிகவும் மெலிந்து இருப்பதை பார்த்து, இவர் குழந்தைப் பருவத்தையே தாண்ட மாட்டார் எனக் கணிக்கப்பட்டவர், உலகின் மிக மூத்த மனிதராக வாழ்ந்து வருகிறார். முன்னதாக மூத்த நபராக இருந்த ஜப்பானை சேர்ந்த பெண்- டோமிகோ இடூகா, டிச.29 அன்று மறைந்தார்.
மலையாள சினிமாவில் நிறைய ஸ்கோப் இருப்பதாக ‘IDENTITY’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். என்னுடைய சினிமா கேரியரில் மலையாள சினிமா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அங்கே அறிவுப்பூர்வமான – வித்தியாசமான கதைகளாக இருக்கும். நமக்கும் நிறைய ஸ்கோப் கிடைக்கும். அதனால் வருடத்துக்கு ஒரு மலையாளப் படம் பண்ண வேண்டும் என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ம.பி.யில் இந்தூர் நகரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற, நிர்வாகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பிச்சைக்காரர்களை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1000 பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஆட்சியருக்கு போன் கால்கள் வந்தவண்ணம் உள்ளதாம். பிச்சைக்காரர்களுக்கு பிச்சையிடுவது குற்றம் என ஏற்கெனவே இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
➤மேஷம் – செலவு
➤ ரிஷபம் – சிந்தனை
➤மிதுனம் – பெருமை
➤கடகம் – நன்மை
➤சிம்மம் – சிக்கல்
➤கன்னி – ஆதரவு
➤துலாம் – உயர்வு
➤விருச்சிகம் – உதவி
➤தனுசு – வரவு ➤மகரம் – ஆர்வம்
➤கும்பம் – பக்தி ➤மீனம் – நலம்.
நீங்கள் என்ன செய்தாலும் ஒரு சிலர் விமர்சிக்க தான் செய்வார்கள். என்ன உடை அணிகிறீர்கள். என்ன வண்டி வைத்துள்ளீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என எல்லாவற்றையும் பற்றி யாராவது ஒருவர் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அதேபோல, உங்கள் கனவுகளை, லட்சியங்களை விமர்சிக்கதான் செய்வார்கள். அதனால், அடுத்தவர் அபிப்பிராயம் என்ன என்பதை நினைத்து கவலைப்படுவதை விட்டு, உங்க டார்கெட் நோக்கி செயல்பட தொடங்குங்கள்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானிலும், துபாயிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டித் தொடரில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து மட்டுமே அறிவித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 7 அணிகள் இதுவரை அறிவிக்கவில்லை. இதையடுத்து ஜன.12க்குள் அறிவிக்க வேண்டுமென ICC கெடு விதித்துள்ளது.
மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லா கலைஞன், இசைப்புயலுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அதற்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்., ஊக்கமளிக்கும் உங்கள் சொற்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இசை இதயங்களை இணைக்கும் மொழி. இவ்வழியில் பங்களிக்க, பயணிக்க பணிவுடன் இயங்குகிறேன். நீங்கள் இதே தொலைநோக்கு சிந்தனையுடனும் தமிழ்நாட்டை வழிநடத்த, எனது மனமார வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
பொங்கலை முன்னிட்டு 8 பிரிவுகளில் கலைப் போட்டிகளை அரசு அறிவித்துள்ளது. கோலப் போட்டி, ஓவியம், புகைப்படம், ரீல்ஸ், பாரம்பரிய உடை, மண்பானை அலங்கரித்தல், செல்பி, ஆவணப் போட்டிகள் நடத்தப்படுவதாக அரசு கூறியுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கான போட்டிகள் என்றும், இதில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் படைப்புகளை tndlprmhpongal2025@gmail.com முகவரிக்கு அனுப்பலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியானதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இரு குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், HMPV குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மனித வளங்களை வளர்ப்பதில் (mandays) மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை விட, தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது, RBI
ஆய்வறிக்கைப்படி, தமிழ்நாடு 8,42,720 மனித உழைப்பு நாள்களைக் கொண்டு தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை அரசு வழங்குகிறது.
Sorry, no posts matched your criteria.