India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அடுத்த மாதம் 29ஆம் தேதி (சனிக்கிழமை), 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 31ஆம் தேதி (திங்கட்கிழமை) ரம்ஜானுக்கு எனத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பொது விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 31ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை நாள் என்றாலும், நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் <<15445801>>வங்கி<<>> ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கௌதம் அதானி முதன்முதலில் 1988ல் பிவிசி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து எரிசக்தித்துறை, உள்கட்டமைப்பு என பல்வேறு துறைகளில் கால்பதித்தார். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், ஆடை உற்பத்தியில் தொழிலைத் தொடங்கியது. அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, 1980களில் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல் யூனிட்டை தொடங்கினார். டாடா குழுமம் முதன்முதலில் ஸ்டீல் உற்பத்தியில் தொழில் தொடங்கியது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது தொடர்பாக கம்பீர், அகர்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல், பண்ட் பெயர்கள் முதல் மற்றும் 2ஆவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு பரிசீலிக்கப்பட்டு உள்ளது. அப்போது ராகுலுக்கு கம்பீர், ரோஹித்தும், பண்டுக்கு அகர்கரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்க முடியாது என பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையதளப் பக்கத்தை முடக்கியதும் மத்திய அரசின் பாசிச அணுகுமுறையை காட்டுகிறது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். பாசிச அணுகுமுறையை எந்த அரசு எடுத்தாலும் எதிர்ப்போம் எனவும் விஜய் கூறியுள்ளார். விஜயை தங்கள் பக்கம் இழுக்கவே பாதுகாப்பு வழங்கியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாஜகவை அவர் விளாசித் தள்ளியுள்ளார்.
டயரில் இருக்கும் குறியீடுகள் அதன் அகலம், உயரம், ரிம் டயாமீட்டர், எவ்வளவு எடையை தாங்கும்? ஆகியவற்றின் குறியீடு என தெரியும். ஆனால், கடைசியில் இருக்கும் V,W,Y எழுத்துக்களின் அர்த்தம் தெரியுமா? இவை டயர் ஸ்பீடு ரேட்டிங். V – 240 கி.மீ வேகம், W – 270 கி.மீ வேகம், Y – 300 கி.மீ வேகம் வரை அதிகபட்சமாக செல்லலாம் என்பதை சொல்கிறது. ஒரே ஸ்பீடு ரேட்டிங் கொண்ட டயர்கள்தான் 4 சக்கரங்களிலும் இருக்க வேண்டும்.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
தெலங்கானாவில் கணவனைத் தாக்கிவிட்டு அவரது கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பழங்குடியின தம்பதி கடந்த 2ஆம் தேதி கோயிலுக்கு பாதயாத்திரை சென்றுவிட்டு பசல்வாடி பகுதியில் உள்ள கோயில் முன்பு ஓய்வெடுத்துள்ளனர். அப்போது அப்பகுதியிலிருந்த நபர் இந்த கொடுஞ் செயலை செய்துள்ளார். CCTV அடிப்படையில் நாகப்பட்டினத்தை சேர்ந்த மாதவன் என்பவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
விவசாய மின் இணைப்புகளுக்கு விரைவில் ‘ஸ்மார்ட் மீட்டர்’ வருகிறது. மாநிலத்தில் தற்போது 23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், அவற்றிற்கு 18 மணிநேரம் மின்சாரமும் வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிய ஸ்மார்ட் மீட்டரை கொண்டுவர உள்ளதாக தெரிகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தாமல் புதிய மின் இணைப்புகளை வழங்க வேண்டாம் என மத்திய அரசு ஆணையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ரயில் நிலையத்தில் சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் மிரட்சியுடன் தெரிவிக்கின்றனர். கும்பமேளாவுக்காக பிஹாரின் சாப்ராவில் இருந்து ரயில் ஏற வந்த ஒரு பயணி, தாயை இழந்துள்ளார். தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மூச்சுத் திணறி பலர் மயங்கியதாக அந்த பயணி கண்ணீர்விட்டபடி கூறினார். ரயில்கள் தாமதமும் நெரிசலுக்கு காரணம் என்கிறார் மற்றொரு பயணி.
நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. அவர் அண்மையில் தாம் 2ஆவதாக கர்ப்பமாக இருப்பதாக பதிவு வெளியிட்டு இருந்தார். இதையடுத்து இலியானாவுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நிறைமாத கர்ப்பமான வயிறு புகைப் படத்தை இலியானா வெளியிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையணிந்து, செல்பி புகைப்படம் எடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.