India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பல லட்சம் கோடிகளில் பட்ஜெட் போட்டாலும், நம் நாட்டில் எளிய மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்பது ஒரு சராசரி இந்தியனின் வேதனையாக உள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது எடுத்த இப்புகைப்படம் மனதை கனக்கச் செய்கிறது. கால் வைக்கக் கூட இடமில்லாத அந்த பெட்டியில், தனது மகளை ஒரு தந்தை பாதுகாப்பாக அழைத்துச்செல்கிறார். கூட்டத்தை பார்த்து ஏதுமறியாத அந்த பிஞ்சு கதறி துடிக்கிறது.
தமிழகத்தில் நாளை முதல் 19ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் வேளையில் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும். தவிர்க்க முடியாத காரணத்தால் செல்ல நேர்ந்தால் பருத்தி உடை அணிவதோடு, தண்ணீர் பாட்டிலையும் உடன் எடுத்துச் செல்லுங்கள்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நிமிடத்திற்கு இத்தனை பக்தர்கள் என கணக்கு வைத்து 18 ஆம் படி ஏற்றப்படுகிறார்கள். அதற்குப் பின்பும் மேம்பால க்யூவில் காத்திருந்தால் தான் தரிசனம். ஆனால், வரும் மார்ச் மாதம் முதல் இதில் மாற்றம் வரப்போகிறது. படியேறியதும் கொடிமரம் வழியாக சென்று நேரடியாக ஐயப்பனை தரிசிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காததால், நிதி அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது TN அரசியலில் தீயை பற்ற வைத்திருக்கிறது. Dy.CM உதயநிதி இந்தியை ஏற்குமாறு மிரட்டுவதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி, தலைக்கனம் வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். பல மொழிகளை போற்றினால் இந்தியா ஒரே நாடு; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும் என சீமானும் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் நலன் கருதி விலகியவர்கள், நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து தனது நலன் விரும்பிகளுடன் EPS ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையின்போது செங்கோட்டையன் பேசியது, ஐகோர்ட் தீர்ப்பு, OPS விவகாரம் உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டதாம். சசிகலா, தினகரன் ஆதரவாளர்களை அழைத்துப் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
சிலிக்கான் வேலியான பெங்களூரு கடந்த சில தினங்களாகவே வெயிலால் தகித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியை காட்டிலும் இங்கு வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதால் கூல்ட்ரிங்ஸ் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் கணித்திருப்பது முன்கூட்டியே சம்மர் தொடங்குவதற்கான சமிக்ஞையாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தேர்தல்களில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்கும் திட்டத்திற்கான ₹182 கோடி நிதியை நிறுத்துவதாக USA அறிவித்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்று வந்த நிலையில், இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், வங்கதேசம், நேபாள், கம்போடியா நாடுகளுக்கான சிறப்பு திட்ட நிதிகளையும் நிறுத்தியுள்ளது. இதற்கு முன்பும், பல நாடுகளுக்கான நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்திருந்தார்.
உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டது. அதன் நம்பரும் தெரியாது என்றால், இந்த சிம்பிள் ஸ்டெப்ஸ் மூலம் நம்பரை தெரிந்து கொள்ளலாம் *Income Tax E-Filing போர்ட்டலுக்கு செல்லுங்கள் * Know Your PAN என்பதை கிளிக் செய்து, அதில் Quick Links பக்கத்திற்கு செல்லவும் *முழு பெயர், பிறந்த தேதி, மொபைல் நம்பரை டைப் செய்யவும் * OTP கொடுத்து வெரிஃபை செய்தவுடன், SMS வழியாக உங்களின் PAN நம்பர் வரும்.
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள தங்கச் சுரங்கத்தில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 48 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கெனீயா மாவட்டத்தில் உள்ள இந்த சுரங்கம் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி, கராச்சியில் வரும் 19ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 20ஆம் தேதி நடக்கும் லீக் போட்டியில் இந்தியா வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பிறகு 23ஆம் தேதி பாகிஸ்தானுடனும், மார்ச் 2ஆம் தேதி நியூசிலாந்துடனும் இந்தியா பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது.
Sorry, no posts matched your criteria.