news

News February 16, 2025

ரேஷன் கார்டுதாரர்களுக்கு உணவுக்கு பதில் பணமா?

image

நாடு முழுவதும் ரேஷன் முறையில் மிகப் பெரிய மாற்றம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணமாக தருவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது. அதில் பயனாளிகள் யார்? எவ்வளவு பணம் என்பதெல்லாம் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு இதுவரை உறுதியான முடிவை எடுக்கவில்லை.

News February 16, 2025

மக்கள் நீதி மய்யத்துக்கு வயது 8!

image

கமல்ஹாசனின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, பிப்.21, 2018இல் தொடங்கப்பட்டது. 8வது ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதை வருகிற பிப்.21ஆம் தேதி விமர்சையாக கொண்டாடவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. அந்த தினத்தில் கமல்ஹாசன், தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து எழுச்சி உரையாற்றுகிறார். திமுக சார்பில் ராஜ்ய சபா MPஆக கமல்ஹாசன் நியமிக்கப்படுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

News February 16, 2025

NATO என்றால் என்ன?

image

2ஆம் உலகப் போர் முடிந்தபின், ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதுதான் NATO அமைப்பு. North Atlantic Treaty Organization என்ற பெயர் கொண்ட இந்த அமைப்பில், 30 ஐரோப்பிய நாடுகளும் 2 அமெரிக்க நாடுகளும் உள்ளன. வெளியிலிருந்து தாக்குதல் வரும்போது, ஒருவருக்கொருவர் உதவும் நோக்கில் NATO உருவாக்கப்பட்டது. தற்போது அந்த அமைப்பில் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிகிறது.

News February 16, 2025

விற்பனைக்கு வந்த அஜித் வெடி

image

சிவகாசி பட்டாசு சந்தையை பொறுத்தவரை தற்போது என்ன டிரெண்டிங்கில் இருக்கிறதோ, அதை வைத்து பட்டாசுகள் தயாரிப்பார்கள். அந்த வகையில், அஜித்தின் அடுத்த படமான ‘Good Bad Ugly’ பட போஸ்டர்களை வைத்து ‘AK வெடி’ தயாரிக்கப்பட்டுள்ளது. கனமாக இருக்கும் இந்தப் பட்டாசு, அதிக சத்தத்துடன் வெடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு அஜித் வெடி சந்தையை ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை.

News February 16, 2025

டோல்கேட் கட்டணம்: வருகிறது குட் நியூஸ்

image

நேஷனல் ஹைவே பயன்படுத்துவோர் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்னை டோல்கேட் கட்டணம் தான். தற்போது அதற்கு தீர்வு காணும் வகையில் கவர்ச்சிகரமான திட்டம் அமலாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.3,000 செலுத்தி Annual Pass வாங்கினால், இந்தியா முழுவதும் போகலாம். அதே போல் ரூ.30,000க்கு Life Time pass பெற்றால் 15 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். தனியார் கார்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் பொருந்தும்.

News February 16, 2025

தேசிய கல்விக் கொள்கையை திணிக்கக் கூடாது: அன்புமணி

image

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மாநில அரசின் உரிமைகளை மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்திற்கு நிதி வழங்குவது மத்திய அரசின் கடமை என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

News February 16, 2025

பழம்பெரும் நடிகை காலமானார்

image

பழம்பெரும் தெலுங்கு நடிகையும், தயாரிப்பாளருமான சி. கிருஷ்ணவேணி (101) இன்று காலமானார். 1924-இல் ஆந்திர மாநிலம் கோதாவரியில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிற்காலத்தில் கதாநாயகியாக உயர்ந்தவர். கணவருடன் இணைந்து படங்களை தயாரித்த இவர், ஆந்திரா Ex CM என்.டி.ராமராவ், நடிகை அஞ்சலி தேவி, கண்டசாலா உள்ளிட்ட பல பிரபலங்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தினார்.

News February 16, 2025

மும்மொழிக் கொள்கையின் முரண்

image

பள்ளிகளில் மாணவர்கள் ஏதேனும் ஒரு மாநில மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்து படிக்கலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், நடைமுறையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தியையே மூன்றாவது மொழியாக தேர்வு செய்கின்றனர். நாடு முழுவதும் இந்தி பரவியிருப்பது, மற்ற மொழிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமை ஆகிய காரணிகள் மற்ற மொழிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியை முதன்மைப்படுத்துகிறது.

News February 16, 2025

மம்முட்டியின் கலம்காவல்: First Look poster வெளியானது

image

மம்முட்டி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் First Look Poster வெளியிடப்பட்டுள்ளது. கலம்காவல் என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை ஜித்தின் கே ஜோஸ் டைரக்ட் செய்துள்ளார். காரில் இருப்பவருடன் சண்டை போடுவது போல் அந்த போஸ்டரில் தெரிகிறது. வாயில் சிகரெட்டும் வைத்திருப்பதால் நிச்சயம் அதிரடி சண்டை காட்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

News February 16, 2025

CSK அணி விளையாடும் போட்டிகள்

image

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் பட்டியலை மேலே படத்தில் காணலாம். குறிப்பாக, மார்ச் 23 CSK vs MI, மார்ச் 28 CSK vs RCB, ஏப்ரல் 11 CSK vs KKR, ஏப்ரல் 20 CSK vs MI, மே 3 CSK vs RCB, மே 7 CSK vs KKR, மே 18 CSK vs RR அணிகள் மோதவுள்ளன. இதில் உங்களது ஃபேவரைட் போட்டி எது?

error: Content is protected !!