India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மார்ச் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள CSK vs MI போட்டியில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் MI அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் பாண்டியாவுக்கு 1 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆகையால், அவர் CSK போட்டியில் விளையாட இயலாது. அவருக்கு பதிலாக, ரோகித் மீண்டும் தலைமையேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பீகாரில் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 2 மனைவிகளுடன் வாழ்ந்து வந்த நபர் கையும் களவுமாக பிடிபட்டபோது காவல் நிலைய கவுன்சிலிங் சென்டர் கொடுத்த தீர்வு நம்மை ஆச்சரியப்பட செய்யக் கூடியது. அதாவது வாரத்தில் 3 நாள் முதல் மனைவியுடனும் அடுத்த 3 நாள் 2வது மனைவியுடனும் கணவர் வாழ வேண்டும். மீதமுள்ள 1 நாள், அவர் விடுமுறை எடுத்து கொள்ளலாம். இந்த ஐடியா எப்படி இருக்கு?
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் மார்ச்சிற்கு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தலைவர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த மாதம் தேசியத் தலைவர் தேர்தலை நடத்த அக்கட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால் மாநிலத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதில் தாமதம் நிலவுவதால், தேசியத் தலைவர் பதவிக்கானத் தேர்தலை அடுத்த மாதம் நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் Tier-2 நகரங்கள் பட்டியலில், வேகமாக வளர்ந்து வரும் நகரமாக திருச்சி இடம்பெற்றுள்ளது. இந்த லிஸ்டில் கோவை, சேலம், மதுரை நகரங்கள் இருப்பினும், ‘Emerging City’ என தமிழ்நாட்டில் திருச்சி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் சூரத், வாரங்கல், நாசிக் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. IT கன்சல்டிங் நிறுவனம் Zinnov இந்த Ranking-ஐ வெளியிட்டுள்ளது. உங்க திருச்சி நண்பருக்கு இதை ஷேர் பண்ணுங்க.
இன்ஸ்டாகிராமில் Comment–களை Dislike செய்வதற்கான ஆப்ஷனை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் ஒருவரின் பதிவுக்கு வரும் Comment–களை Like மட்டுமே செய்ய முடியும். தற்போது இந்த அம்சத்தை மெட்டா நிறுவனம் சேர்த்துள்ளது. அதே சமயம் இந்த ஆப்ஷன் கருத்துகளை பரிமாறுபவர்களுக்கு இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆரம்பக் காலங்களில் சந்தானத்துடன் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்றவர் சிரிக்கோ உதயா. பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சந்தானத்தின் பல முக்கிய காமெடி சீன்களையும் எழுதியுள்ளார். இந்நிலையில், தீராத சர்க்கரை நோயால் ஓமந்தூரார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று ஒரு கால் அகற்றப்பட்டது. இதையடுத்து, நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து பண உதவி செய்தனர்.
ஜனாதிபதி திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். பிரான்ஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்தும், அமெரிக்க அதிபருடனான தனது சந்திப்பு பற்றியும் முர்முவிடம் மோடி விரிவாக விளக்கியதாக ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்கா, பிரான்ஸுடனான இந்தியாவின் உறவு குறித்தும் மோடி ஆலோசித்ததாக தெரிகிறது.
‘இங்க ஆண்கள் படுற கஷ்டத்தை யாராச்சும் பேசுறாங்களா?’ என இயக்குநருக்கு தோன்றியிருக்கும்போல. அதற்கேற்ப
‘ஆண்பாவம் பொல்லாதது’ டைட்டிலில் படம் எடுத்துள்ளார் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல். ‘ஜோ’ பட ஹிட் ஜோடி ரியோ ராஜ்- மாளவிகா நடிக்க இளைஞர்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி இன்று வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்களுக்காக ஒரு படம்!
பாப்கார்னுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து CBIC விளக்கமளித்துள்ளது. சாப்பிடத் தயாராக சில்லரையில் அளிக்கப்படும் பாப்கார்னுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது என்று CBIC தெரிவித்துள்ளது. தியேட்டர் போன்ற இடத்தில் உப்பு, காரத்துடன் லேபில் இட்டு அளிக்கப்பட்டால் 12%, இனிப்புடன் கலந்து அளிக்கப்பட்டால் 18% வரி விதிக்கப்படுகிறது எனவும் விளக்கமளித்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவசர கூட்டத்திற்கு ஐரோப்பிய தலைவர்களை அழைத்துள்ளார். நாளை (17.02) பாரீசில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சமீபத்திய நடவடிக்கைகள் நேட்டோ அமைப்பிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதால் இக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கென தனி ராணுவம் தேவை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி யோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.