news

News January 7, 2025

சிறந்த படத்திற்கான ஆஸ்கார் போட்டியில் ‘கங்குவா’

image

‘கங்குவா’ 97வது ஆஸ்காரின் Best Picture பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த தகவலை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த 323 படங்களில், 207 திரைப்படங்கள் மட்டுமே சிறந்த படப் பிரிவில் பரிசீலிக்கத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி இணையத்தை ஸ்தம்பிக்க வைக்க, சூர்யா ரசிகர்கள் “இப்போ சண்டைக்கு வாடா” என ஆர்ப்பரிக்கிறார்கள்.

News January 7, 2025

நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் உறுதி

image

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு காரணமாக ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்லப்பட்ட அந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் HMPV வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

News January 7, 2025

தமிழகத்தில் சர்வதேச பலூன் திருவிழா

image

பொங்கல் பண்டிகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் TNல் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு 10-12ம் தேதி சென்னையிலும், 14-16 பொள்ளாச்சியிலும், 18-19 மதுரையிலும் இத்திருவிழா நடக்க உள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் ஹாட் ஏர் பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன. இதற்காக பல நாடுகளில் இருந்து ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர்.

News January 7, 2025

ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்

image

பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிப்பதில் மாநில ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது UGC. முன்னதாக ஆளுநரால் நியமிக்கப்படும் ஒருவர், UGC பரிந்துரைக்கும் ஒருவர், பல்கலைக்கழக உறுப்பினர் என துணை வேந்தர் தேர்வுக்குழுவில் மூன்று பேர் இருப்பார்கள். இப்போது, அனைத்து உறுப்பினர்களையும் ஆளுநரே தேர்வு செய்யலாம் என்று UGC தெரிவித்துள்ளது.

News January 7, 2025

HMPV: முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு அறிவுரை

image

நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு அபரிதமான விதத்தில் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும், தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வழங்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2001 முதல் உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று உள்ளதால், மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

News January 7, 2025

கவர்னரை கண்டித்து போராட்டத்தில் குதித்த திமுக

image

கவர்னர் ரவி, சட்டமன்றத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கனிமொழி தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில், ‘சட்டமன்ற மரபுகளை அவமதித்த ஆளுநரே வெளியேறு’ என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கும் காவல்துறை திமுகவின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி அளித்தது எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News January 7, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலம் பாதிப்பு

image

ADMK பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய்ச்சல் காரணமாக இன்று சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்கவில்லை. நேற்று அவை நிகழ்வில் பங்கேற்ற பின் வீடு திரும்பிய அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓய்வில் உள்ளார். அவரை அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 7, 2025

மொத்தமாக மாறும் போட்டிகள்: ரசிகர்களுக்கு இனி செம ட்ரீட்

image

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் ரசிகர்களிடம் பெரிய ஈர்ப்பாகி அமைந்து வருகிறது. ஆனால், இந்த அணிகள், 4 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே நேருக்கு நேர் மோதுகின்றன. இதனை மாற்றி, இந்த அணிகள் அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணி வாரியங்கள் ICC உடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 7, 2025

₹198க்கு தினமும் 2ஜிபி டேட்டா

image

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் குறைந்தவிலை ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்திருக்கிறது. அதன்படி, ₹198க்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்-லிமிட்டட் கால், தினமும் 100 இலவச SMS ஆகியவை கிடைக்கும். இதன் வேலிடிட்டி 14 நாள்கள். இதே திட்டத்தை நீங்கள் 28 நாள்களுக்கு பெற விரும்பினால் ₹349க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில், ஜியோ டிவி, ஜியோ சினிமா சேவைகள் இலவசமாக கிடைக்கும்.

News January 7, 2025

மனைவி, மகள்களுடன் IT மேன் தற்கொலை

image

தம்பிக்கு இ-மெயிலில் கடிதம் அனுப்பிவிட்டு IT என்ஜினீயர், மனைவி, மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். UPயை சேர்ந்த அனூப்குமார், மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் பெங்களூருவில் வசித்து வந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக அதிக பணம் செலவானதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல..

error: Content is protected !!