news

News January 7, 2025

போதை ஏற்றும் மேகக்கூட்டம்

image

உங்களுக்கு மது போதை ரொம்ப பிடிக்குமா? இந்த செய்தி உங்களுக்குதான். நம்ம பூமியில இருந்து 10,000 ஒளி ஆண்டுகள் தூரத்துல ஒரு மேகக்கூட்டம் இருக்கு. அது முழுக்க முழுக்க Ethyl Alcoholஆல ஆனதாம். அதுதான் இங்க மக்கள் குடிக்குற சரக்கோட மூலப் பொருள். அந்த மேகத்துல இருக்கற சரக்கை பூமியில இருக்கற மக்கள் எல்லாரும் 10 கோடி வருஷத்துக்கு நாளுக்கு 3,00,000 பாட்டில் குடிக்கலாமாம்.

News January 7, 2025

கனடாவுக்கு தூண்டில் போடும் ட்ரம்ப்

image

பிரச்னைகளை சமாளிக்க முடியாததால் தான் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ள டிரம்ப், கனடாவை US உடன் இணைய அழைப்பு விடுத்துள்ளார். US-ன் 51-வது மாகாணமாக கனடா இணைந்தால், நிதி பற்றாக்குறை தீரும், ரஷ்யா, சீனா கப்பல்களின் அச்சுறுத்தல் நீங்கும். பெரும்பாலான கனடா மக்களும் இதையே விரும்புகிறார்கள். நாம் சிறந்த தேசமாக மாறலாம் என்று ஆசை வார்த்தைகளுடன் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 7, 2025

நடிச்சா ஹீரோவா மட்டும்தான் நடிப்பேன்: கலையரசன்

image

இனி நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கலையரசன் கூறியுள்ளார். மெட்ராஸ்காரன் திரைப்பட விழாவில் பேசிய அவர், ஒரு படத்திற்கு கதை எழுதும் போதே ஒரு கதாபாத்திரம் சாக போகிறதென்றால், என் பெயரை எழுதி விடுவார்கள் போல என வேதனை தெரிவித்தார். இனி 2ஆம் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மெட்ராஸ், தானா சேர்ந்த கூட்டம் என இவர் நடித்த பல படங்களில், அவரது கதாபாத்திரம் இறப்பது போன்றே அமைந்திருக்கும்.

News January 7, 2025

HMPV வைரஸ் 5 நாட்களில் சரியாகிவிடும்: அமைச்சர் மா.சு.

image

HMPV வைரஸால் 3 முதல் 5 நாட்களுக்குச் சளி போன்ற பாதிப்புகள் இருக்கும் எனவும் வீரியம் குறைந்த வைரஸ் என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை, சேலத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட இருவரும் நலமுடன் இருப்பதாகக் கூறிய அவர், WHO இதுவரை எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது நல்லது என்று கூறினார்.

News January 7, 2025

பொங்கலன்று தேர்வா? தேதியை மாற்றுங்க: CM கடிதம்

image

UGCயின் நெட் தேர்வு தேதியை மாற்றக்கோரி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தைப் பொங்கல் பண்டிகை நாட்களில் UGCயின் நெட் தேர்வுகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்திய அவர், ஜன.13 முதல் 16ம் தேதி வரை நடைபெறும் தேர்வுகளின் தேதியை மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக MPக்கள் பலரும் இக்கோரிக்கையை வைத்தபோதும், மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது.

News January 7, 2025

ஆதார் கார்டு 12 எண்களின் அர்த்தம் தெரியுமா?

image

நாட்டில் இருக்கும் 145 கோடி பேருக்கு எப்படி ஆதார் கார்டு 12 எண்கள் திரும்ப வராமல் இருக்கிறது தெரியுமா? இந்த 12 எண்களும் கம்ப்யூட்டர் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறது. முதலில் வரும் 11 எண்கள் ரேண்டமாக மீண்டும் வராதவாறு தேர்வாகிறது. கடைசி ஒரு எண்ணிற்கு முந்தைய 11 எண்களின் Checksum எண் Verhoeff Algorithm வழியாக வழங்கப்படுகிறது. கிரெடிட் கார்டு, பான் கார்டுக்கும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது.

News January 7, 2025

எவரெஸ்ட் சிகரத்தை ஆட்டம் காண வைத்த நிலநடுக்கம்

image

நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் எவரெஸ்ட் சிகரத்திலும் எதிரொலித்துள்ளது. எவரெஸ்ட் மலையில் 4.5 ரிக்டர் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால், அப்பகுதியில் பனிச்சரிவும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடந்தகாலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எவரெஸ்டின் உயரமும் கட்டமைப்பும் லேசாக மாற்றம் கண்டது. இந்த முறை என்ன ஆகுமோ.. தற்போது சிகரத்தில் ஏறச் சென்றவர்கள் நிலை பற்றி இதுவரை தகவல் இல்லை.

News January 7, 2025

HMPV வைரஸ் யாரை அதிகம் தாக்கும், அறிகுறிகள் என்ன?

image

வேகமாக பரவி வரும் சீனாவின் HMPV வைரஸானது 14 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், நுரையீரல், சுவாசக்கோளாறு உள்ளவர்களை அதிகம் பாதிக்கிறது. இருமல், சளி, மூக்கில் நீர் வடிதல், நடக்கும் போது தலைச் சுற்றல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி இல்லாத போதிலும் காய்ச்சல், வலி நிவாரணி மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

News January 7, 2025

ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது

image

சட்டசபை ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் பாடும் வழக்கத்தினை 1991ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பு வரை இந்த வழக்கம் இருந்ததில்லை. இன்று, உரைக்கு முன்பும் பின்பும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற புதிய வழக்கத்தை கொண்டுவர ஆளுநர் வலியுறுத்துகிறார். ஆனால், தமிழக அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.

News January 7, 2025

புடவை கட்டுவதால் கேன்சர் வருகிறதா..?

image

புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படும் என கட்டுரை வெளியாகி அதிர்ச்சியடைய செய்தது. இடுப்பு பகுதியில் நாடாவை இறுக்கமாக அணிவதன் மூலம் புண்கள் ஏற்பட்டு கவனிக்காமல் விட்டால் தோல் புற்றுநோய் வரும் எனப்படுகிறது. ஆனால், சேலை கட்டுவதாலேயே இப்பாதிப்பு வரும் என்பதை இந்திய மருத்துவர்கள் மறுக்கிறார்கள். எவ்விதமான இறுக்கமான உடை அணிந்தாலும் இப்பாதிப்பு ஏற்படும். எனவே, இறுக்கமான உடை அணிவதை தவிர்ப்பதே தீர்வு.

error: Content is protected !!