news

News February 17, 2025

தங்கம் சவரனுக்கு ₹400 உயர்வு

image

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் இன்று (பிப்.17) உயர்ந்துள்ளது. கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒருகிராம் ₹7,940க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹108க்கும், ஒரு கிலோ ₹1,08,000க்கும் விற்கப்படுகிறது. கடந்த 1 வாரத்தில் சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏறக்குறைய அதற்கு ஈடாக விலை அதிகரித்துள்ளது.

News February 17, 2025

ஆதாருடன் டிரைவிங் லைசன்ஸ் இணைப்பு கட்டாயம்?

image

Driving License, வாகன RCயுடன், ஆதார், மொபைல் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான DL, RC தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்டவையாக உள்ளன. இதில், பலவற்றில் ஆதார், போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதையொட்டி, லைசன்ஸூடன் ஆதாரை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

News February 17, 2025

எப்போதும் காங்கிரஸ்காரனாக இருக்க முடியாது: சசி தரூர்

image

பிரதமர் மோடியை காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அண்மையில் பாராட்டியது பேசு பொருளானது. அதற்கான காரணத்தை விளக்கிய சசி தரூர், டிரம்ப் பதவியேற்ற பின், அவரை சந்தித்த 4 ஆவது உலகத் தலைவர் நமது பிரதமர். அப்படியென்றால் உலக அரங்கில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் என்னவென்பதை புரிந்து கொள்ளுங்கள் என கேட்டுள்ளார். தவிர, எல்லா நேரங்களிலும் காங்கிரஸ்காரனாக இருக்க முடியாது என்றார்.

News February 17, 2025

புயலுக்கு 8 பேர் பலி: மிதக்கும் கென்டகி

image

அமெரிக்காவின் கென்டகி, ஜார்ஜியா மாகாணங்களை புரட்டிப் போட்ட புயலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக வீடுகள், வெள்ளத்தில் மிதக்கின்றன. 300க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கென்டகியின் கிழக்குப் பகுதியில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதால் நிலைமை மோசமாகி வருகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கவர்னர் ஆன்டி பெஷியர் அறிவுறுத்தியுள்ளார்.

News February 17, 2025

இந்த நம்பர்களில் இருந்து போன் வருகிறதா? உஷாரா இருங்க!

image

புதுசு, புதுசாக டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறுகின்றன. +371, +381 என்ற எண்களிலிருந்து உங்களுக்கு திடீரென மிஸ்டு கால் வரும். யார் என அறிய நீங்கள் திரும்ப போன் பண்ணினால், அதற்கே உங்களுக்கு கிட்டத்தட்ட ₹1,200 பில் வந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள், உங்களின் பர்சனல் டேட்டாவையும் திருடுகிறார்கள் என எச்சரிக்கப்படுகிறது. அடுத்தவாட்டி கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

News February 17, 2025

ICSE 10ஆம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம்

image

ICSE 10ஆம் வகுப்பு தேர்வு இன்று காலை 11 மணிக்கு நாடு முழுவதும் தொடங்குகிறது. முதல்நாளான இன்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வையொட்டி பல்வேறு வழிகாட்டுதல்களை ICSE வெளியிட்டுள்ளது. அதில், கருப்பு அல்லது ஊதா நிற பேனாவை வைத்தே பதில் எழுத வேண்டும், கால்குலேட்டர் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் சாதனம் எடுத்து வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 17, 2025

சவாலை சமாளிக்க இதை செய்யுங்க!

image

வாழ்க்கையில் அடிக்கடி சவால்களை சந்திக்க நேருதா? கவலைப்படாதீங்க. துணிச்சலுடன் அவற்றை எதிர்கொள்ள காத்திருங்கள். ஏனெனில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நாம் சந்திக்கும் சவால்கள் தான் அதிகமாக அள்ளித் தரும். எனவே, அதை சரியாக பயன்படுத்தி பாருங்கள். நிச்சயம் வெற்றிக்கான படிக்கல்லாக மாறிடும். அப்புறம் அந்த படிக்கல் மேல் ஏறி நின்று கவனித்தால், வானம் கூட தொட்டு விடும் தூரத்திலேயே இருக்கும்.

News February 17, 2025

பிளஸ் 2 பொதுத் தேர்வு.. ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

image

பிளஸ் 2 பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு மார்ச் 3 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கான ஹால் டிக்கெட்டை இன்று மதியம் www.dge.tn.gov.in இணையதளத்தில் பள்ளிக்கல்வி துறை வெளியிடுகிறது. இதை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, விவரங்களை உறுதி செய்தபிறகு விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News February 17, 2025

பெரியார் குறித்து அவதூறு: சீமானுக்கு சம்மன்

image

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், சீமான் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, வடலூர் போலீசார் அனுப்பிய சம்மனுக்கும் சீமான் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News February 17, 2025

அரசு நிதியுதவி பள்ளிகளுக்கு மானியம் விடுவியுங்க: TN அரசு

image

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தை விடுவிக்க TN அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளுக்கு கற்பித்தலுக்கான இறுதிக்கட்ட மானியம், பராமரிப்பு மானியத்தை விடுவிக்கும்படி வட்டார கல்வி அலுவலர்களை அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!