news

News January 7, 2025

ஏஜென்சி மூலம் டார்ச்சர் செய்த வங்கிக்கு ₹5 லட்சம் Fine

image

நாமக்கல்லைச் சேர்ந்த அனு பிரசாத் என்பவர், கடந்த 2007ல் IOB வங்கியில் ₹2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாததால், கோர்ட் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால், இன்னும் ₹7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டை அவர் நாட, ₹5 லட்சம் இழப்பீடு வழங்க IOBக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News January 7, 2025

தேர்தல் நடத்தை விதி அமல்

image

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர், அரசியல்
கட்சித்தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம் கொடுத்தால் புகார் கூறவும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால், பறிமுதல் செய்யப்படும்.

News January 7, 2025

முடிஞ்சா கண்டுபிடித்து சொல்லுங்க..!

image

கையில் போனை வைத்து சும்மா பொழுதை போக்க ரீல்ஸ் பார்ப்பதை கொஞ்சம் நிறுத்தி விட்டு, மூளைக்கு வேலை கொடுப்போம் வாங்க! இந்த படத்தை பார்த்ததும் உடனே கண்களுக்கு மட்டும் வேலை கொடுக்க வேண்டாம், கொஞ்சம் மூளையை உபயோகித்து பாருங்கள். இந்த படத்தில் இருக்கும் எண் 5ஐ வெறும் 25 வினாடிகளில் கண்டுபிடித்து கமெண்ட்ல சொல்லுங்க பார்க்கலாம்.

News January 7, 2025

கதிர் ஆனந்தின் கல்லூரியில் மீண்டும் ED சோதனை

image

வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்திற்கு சொந்தமான காட்பாடி கிங்ஸ்டன் கல்லூரில் மீண்டும் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின்போது சில கணினிகள் வேலை செய்யாததால், இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடத்தப்பட்ட சோதனையின் போது சுமார் 2 கோடி ரொக்கம் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

News January 7, 2025

EB Bill செலுத்துவோர்களுக்கு அப்டேட்

image

மின் இணைப்பு, மின் கட்டணம், மின்வெட்டு உள்ளிட்ட அப்டேட்களை உடனுக்குடன் பயனாளர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் TANGEDCO நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், இனி வீட்டில் இருந்தே உங்கள் மொபைல் எண்ணை எளிதாக மாற்றம் செய்யலாம். https://www.tnebltd.gov.in/mobilenoentry/ என்ற link-ஐ கிளிக் செய்து, உங்களின் புதிய செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனே மாறிவிடும்.

News January 7, 2025

இடைத்தேர்தலில் திமுக VS காங்., யார் போட்டி?

image

EVKS மறைவையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையும் இடைத்தேர்தலில் காங்., போட்டியிட விரும்பம் தெரிவித்துவிட்டது. ஆனால், திமுகவே போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் கூறுகின்றனர். இதனால் , யார் போட்டியிடுவது என்பது குறித்து ஸ்டாலின் ஓரிரு நாளில் முடிவு செய்வார். ஒருவேளை திமுக போட்டியிட நினைத்தால், கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படக்கூடும்.

News January 7, 2025

“புற்றுநோயால் நான் சந்தித்த இழப்பு..” கான்ஸ்டாஸ் உருக்கம்

image

கோலி, பும்ரா, ஜெய்ஸ்வால் போன்றோருடன் உரசலில் ஈடுபட்டு BGT தொடரில் ரசிகர்களின் கவனத்தை அதிகளவில் ஈர்த்தார் சாம் கான்ஸ்டாஸ்(19). இவர் புற்றுநோய்க்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட பிங்க் டெஸ்ட் குறித்து பேசும் போது, “இப்போட்டிக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. எனது மைத்துனரை ரத்த புற்றுநோயாலும், தாத்தாவை குடல் புற்றுநோயாலும் இழந்தவன் நான்” என உருக்கமாக பேசினார்.

News January 7, 2025

உங்களுக்குத் தெரியாமலே பறிபோகும் உங்கள் பணம்

image

மூன்றுக்கும் மேற்பட்ட BANK A/C வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த எச்சரிக்கை செய்தி. ஆம்! ஒருவருக்கு அதிகபட்சம் 3 வங்கிக் கணக்குகள் போதுமானது. அதற்கு மேல் இருந்தால் அவற்றை முறையாக க்ளோஸ் செய்ய வேண்டும். இல்லை எனில், குறைந்தபட்ச பராமரிப்புத் தொகைக்கு அபராதம், SMS கட்டணம், ATM கார்டு கட்டணம் எனப் பல வகைகளிலும் உங்களுடைய பணமும், நேரமும் விரயமாகும். இது தேவைதானா? சிந்தித்து செயல்படுங்கள்.

News January 7, 2025

மன்சூர் மகனுக்கு ஜாமின்.. ஆனால் ஒரு கண்டிஷன்

image

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்கிற்கு, சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. துக்ளக்கிடம் இருந்து எந்த போதைப்பொருளும் பறிமுதல் செய்யவில்லை என போலீசார் தெரிவித்ததால், ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஜெ.ஜெ.நகர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை கோர்ட் விதித்துள்ளது.

News January 7, 2025

டெல்லியில் பிப்.5இல் ஒரே கட்டமாக தேர்தல்

image

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்.5ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. ஜன. 10 – 17 வரை வேட்புமனுத் தாக்கல், ஜன.18 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை, ஜன.20ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும். தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்.8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. டெல்லியில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 2020இல் நடந்த தேர்தலில் AAP 62 இடங்களை வென்றது.

error: Content is protected !!