news

News January 7, 2025

விபத்துக்கு பின் அஜித் எப்படி இருக்கிறார்.. PHOTO

image

துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஓட்டிய ரேஸ் கார் விபத்தில் சிக்கியது. இதுகுறித்து அஜித் மேனேஜர் கூறுகையில், கார் மட்டும் தான் சேதமடைந்துள்ளது; அஜித்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. விபத்துக்குப்பின் சகஜ நிலைக்கு திரும்பிய அவர் நலமுடன் இருக்கிறார் என்று விளக்கமளித்துள்ளார். விபத்துக்குப்பின், அஜித்தை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துச்செல்லும் போட்டோ வெளியாகியுள்ளது.

News January 7, 2025

ஜன.11இல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜன.11ஆம் தேதி இபிஎஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் போட்டியிட 10ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் நிலையில், 11ஆம் தேதி அதிமுக ஆலோசனை செய்கிறது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? அல்லது விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது போல் புறக்கணிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

News January 7, 2025

ஈரோடு கிழக்கில் பாஜக போட்டி?

image

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை கமலாலயத்தில் தேசிய பொதுச்செயலாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறுதல், தேர்தல் பூத் அமைப்பு உள்ளிட்டவை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

News January 7, 2025

இணைந்தது இந்தோனேஷியா: வலுவாகும் பிரிக்ஸ் கூட்டணி

image

பிரிக்ஸ் அமைப்பில் 10-வது நாடாக இந்தோனேஷியா இணைந்ததாக, அந்த அமைப்பின் தற்போதைய தலைமையான பிரேசில் முறைப்படி அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, தெ.ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, யு.ஏ.இ., ஈரான் ஆகிய நாடுகளுடன், தெ.கிழக்கு ஆசியாவின் பெரிய பொருளாதாரமான இந்தோனேஷியா இணைவது பிரிக்ஸை வலுப்படுத்தும். பிரிக்ஸ், தற்போது உலக மக்கள்தொகையில் 40%, பொருளாதாரத்தில் 25% பங்களிப்பை கொண்டுள்ளது.

News January 7, 2025

ரஜினியுடன் மோதும் SK?

image

ரஜினியின் ‘கூலி’ படத்தை, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே 1ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதே நாளில் முருகதாஸ் இயக்கத்தில் SK நடித்து வரும் அவரது 23ஆவது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2 படங்களின் ஷூட்டிங் இன்னும் முடியாததால், ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 7, 2025

பிச்சைக்காரர் தான் வேண்டும்: கணவனை கைவிட்ட மனைவி

image

தன்னையும், 6 குழந்தைகளையும் விட்டுவிட்டு, பிச்சைக்காரருடன் தன் மனைவி ஓடிவிட்டதாக உ.பி.,யை சேர்ந்த ராஜு, போலீசில் புகார் அளித்துள்ளார். தெருவில் பிச்சை எடுக்க வந்தபோது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், மாட்டை விற்று தான் சேமித்து வைத்திருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு பிச்சைக்காரருடன் மனைவி சென்றுவிட்டதாகவும் ராஜு புலம்புகிறார். தீவிர தேடலுக்கு பின், போலீசார் அப்பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.

News January 7, 2025

இடைத்தேர்தல்: நடத்தை விதிமுறைகள் என்னென்ன?

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி (பிப்.5) அறிவிப்பை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்றே அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஈரோடு மாநகராட்சி மேயர், து.மேயர் அறைகள் சீல் வைக்கப்பட்டன. அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், பலகைகளை மறைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. வாகனங்களை தணிக்கை செய்யும் பணிகளும் தொடங்கி விட்டன. கையில் ரொக்கம் எடுத்துச் செல்லவும் (அதிகபட்சம் ரூ.50,000) கட்டுப்பாடு வந்துவிட்டது.

News January 7, 2025

இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு; அதை நோக்கி தனது கட்சியின் பயணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், திமுக +, அதிமுக +, நாதக, பாஜக + என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.

News January 7, 2025

மக்கள் இப்படித்தான் என்னை பாக்கணும்: சன்னி

image

பல தடைகளை உடைத்த கடினமான உழைப்பாளியாக மக்கள் தன்னை நினைவுகூர வேண்டும் என சன்னி லியோன் விருப்பம் தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட் அடிப்பது நமது கைகளில் இல்லை என்பதால், தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் உலகம் மாறி வருவதாகவும், விரும்புவதைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே தன்னுடைய லட்சியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 7, 2025

பும்ராவின் injury: தவிக்கும் இந்திய அணி

image

முதுகு தசைப்பிடிப்பால் அவதிப்படும் பும்ரா, சாம்பியன்ஸ் ட்ராபி தொடரையும் மிஸ் பண்ணலாம் என தகவல் வெளியாகி வருகின்றது. அவர் அணியில் இடம்பெற்றாலும் விளையாடுவது அவரின் உடல் நலத்தை பொறுத்தே அமையும் என NDTV sports செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான தொடருக்கு முன்பாக பும்ராவின் இந்த நிலை அணிக்கு பெரிய பின்னடைவு தான். இந்த செய்தி ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

error: Content is protected !!