India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தன் மீது விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் இன்று விசாரித்தது. அப்போது, சீமானின் முதல் மனைவி விஜயலட்சுமியா? என நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்கு, சீமானும், விஜயலட்சுமியும் 2008இல் மதுரை கோயிலில் மாலை மாற்றிக் கொண்டதாகவும், அன்று முதல் பல முறை விஜயலட்சுமியை கட்டாயப்படுத்தி சீமான் தொடர்பு வைத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களின் பொறுப்பாளர்களை நியமித்து இறுதிப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ஆனால், இந்தப் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம்பெறாததால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இபிஎஸ்க்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட சர்ச்சை ஓய்ந்து இருவரும் சமாதானமானதாக சொல்லப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸி., அணிகள் மோதும் என்றும், ஆனால் கோப்பையை ஆஸி., அணி கைப்பற்ற முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் ரோஹித் ஷர்மா அதிக ரன்களை குவிப்பார் என்றும், ஆஸி., அணியின் ஹெட் தொடர் நாயன் விருதை பெறுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடகா, மைசூருவை சேர்ந்த லேபர் கான்ட்ராக்டர், சேத்தன்(43). இவர் நேற்றிரவு USA-வில் உள்ள தன் தம்பிக்கு கால்செய்து தற்கொலை செய்வதாக கூறிவிட்டு, தன் மனைவி, 15 வயது மகன், தாய் மூவருக்கும் விஷம் கொடுத்தபின் அவரும் தூக்கிட்டுக் கொண்டார். தகவலறிந்து போலீஸ் வந்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. தொழில்ரீதியான பண நெருக்கடி தான் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
SK பட தலைப்புகளை கவனித்தவர்களுக்கு ஒரு ட்ரெண்ட் புரியும். அவர் அடிக்கடி பழைய படங்களின் டைட்டிலை தனது படத்திற்கு பயன்படுத்தி வருகிறார். எதிர்நீச்சலில் தொடங்கி, காக்கி சட்டை, வேலைக்காரன், மாவீரன், அமரன், பராசக்தி என இன்று வெளியான மதராஸி வரை. இதில், ஹிரோ, டான் பழைய ஹிந்தி படங்களின் பெயர்கள் ஆகும். அப்படி என்ன இருக்கோ தெரியலையே. இன்னும் வேற என்ன பழைய பட டைட்டில் SKக்கு சூட்டாகும். கமெண்ட் பண்ணுங்க!
சென்னையில் <<15487816>>பெண் காவலர்<<>> ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என்றும், அரசின் மீதோ காவல்துறை மீதோ சமூக விரோதிகளுக்கு எந்த பயமும் இல்லாத சூழல் உருவாகிவிட்டது எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், முதல்வரோ எதை பற்றியும் கவலைப்படாமல் வெற்று விளம்பரங்களில் லயித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல திரளான பக்தர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அதே சமயம் அன்றைய தினம் ஈஷா மையத்திற்கும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால் வெள்ளியங்கிரிக்கு செல்ல மாற்று வழி ஏற்படுத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் உரிய வசதிகளை செய்து தருமாறு வனத்துறைக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.
மகளிருக்கான கட்டணமில்லா சேவை பஸ்களை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதற்காக வருவாய் குறைவான 174 மாநகர சிவப்பு நிற விரைவுப் பேருந்துகள், விடியல் பயணத் திட்டத்திற்கு மாற்றப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் 63% பெண்கள் பயணித்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய், மனைவி எலிசபெத்தை அசாம் அரசு விசாரணை வளையத்தில் வைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் பாகிஸ்தானுடனும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால், இருவரும் தேச துரோகத்தில் ஈடுபட்டார்களா? என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழிக் கொள்கை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி தருவோம் என மத்திய அரசு மிரட்டிப் பார்ப்பதாகவும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைசி வரையிலும் பின்பற்றப்படும் எனவும் உறுதியளித்தார். மொழி திணிப்பை தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.