news

News February 17, 2025

மோடி வீட்டுக்கு சென்ற ராகுல் காந்தி!

image

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்று ஆலோசனை நடத்தினார். தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைவதால், அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News February 17, 2025

பாஜகவுக்கு அடிபணிவதே அதிமுகவின் கொள்கை: திமுக

image

அதிமுகவுக்கு என்று கொள்கை நிலைப்பாடோ, போராட்ட வரலாறோ இல்லை என திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமையை எவ்வளவு பறித்தாலும், கூச்சமின்றி பாஜக காலில் விழுந்து கிடப்பதையே அதிமுக வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். தங்களது கட்சிப் பொறுப்பை காப்பாற்றிக்கொள்ள, பாஜகவிடம் சரண்டர் ஆவதையே அதிமுக தனது நிரந்தர கொள்கையாக கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

News February 17, 2025

ஏழை மக்களும் இனி ₹250க்கு முதலீடு செய்யலாம்

image

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுத் திட்டங்களை மக்கள் பெரிய விஷயமாக பார்த்த காலம் மலையேறப் போகிறது. ஆம், ‘ஜன் நிவேஷ்’ என்ற பெயரில் புதிய SIP திட்டத்தை SBI அறிமுகப்படுத்தியுள்ளது. மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதுதான் SIP. இனி, ஜன் நிவேஷ் திட்டத்தில் குறைந்தபட்சம் ₹250 முதல் நீங்கள் முதலீடு செய்யலாம். ஏழை மக்களும் முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாகும்.

News February 17, 2025

தமிழ்நாட்டை காப்பி செய்யும் புதுச்சேரி

image

உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது. உறுப்பு தானம் செய்வதன் மூலம் பல உயிர்கள் காக்கப்படுவதால், அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அதே உத்தியை புதுச்சேரி அரசு கையில் எடுத்துள்ளது.

News February 17, 2025

சென்னையை நோக்கி வரும் ஆபத்து?

image

City-Destroyer என்று செல்லமாக அழைக்கப்படும் 2024 YR4 விண்கல், 2032ஆம் ஆண்டு பூமியில் மோதுவதற்கான வாய்ப்பு 1.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, அந்த விண்கல் சென்னையில் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நாசா கணித்துள்ளது. ஒருவேளை இந்த விண்கல் பூமியில் மோதினால், அது ஹிரோஷிமா அணு குண்டை விட 500 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2025

தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார்

image

பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை கூடிய தேர்வுக்குழு, புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதி செய்யப்பட்டவரின் பெயர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்றே முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News February 17, 2025

CSK அணியிடம் இப்படியும் ஒரு சாதனை இருக்கா…

image

ஐபிஎல் தொடரில் 9 முறை தொடக்க ஆட்டத்தில் விளையாடிய அணி என்ற சாதனையை CSK அணி படைத்துள்ளது. மும்பை அணி 8, கொல்கத்தா அணி 7, பெங்களூரு அணி 5 முறைகள் தொடக்க ஆட்டத்தில் விளையாடியுள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை தொடக்க ஆட்டத்தில் ஒருமுறை கூட விளையாடியதில்லை. 2025 ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி, தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை மார்ச் 23இல் எதிர்கொள்ளவுள்ளது.

News February 17, 2025

WPL 2025: பெங்களூரு அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயம்

image

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு வெற்றிபெற டெல்லி அணி 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34, சாரா பிரைஸ்23 ரன்கள் எடுத்தனர். பெங்களூரு அணியின் ரேணுகா தாக்கூர் சிங், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 3 விக்கெட்டை வீழ்த்தினார்.

News February 17, 2025

பிரபல நடிகை மரணம்… வெளியானது புதிய தகவல்

image

பிரபல தென் கொரிய நடிகை கிம் சே ரான்(24) நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் <<15485890>>இறந்து கிடந்தார்<<>>. குறுகிய காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்ததால், பொறாமையால் யாரோ அவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், கிம் சே ரான் தற்கொலை செய்து கொண்டது போஸ்ட் மார்ட்டம் ஆய்வில் உறுதியானதாக போலீஸ் தெரிவித்துள்ளது. நடிகை ரான் பல படங்கள், வெப் சீரிஸ்களில் நடித்து சர்வதேச புகழ்பெற்றவர்.

News February 17, 2025

தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. புகார் தொடர்பான காவல்துறையின் துரித நடவடிக்கை மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்தது உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மாணவி விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படும் எனவும் நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.

error: Content is protected !!