India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (பிப்.18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க. உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்!
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும், அதற்கான ரகசியம் தன்னிடம் உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒரு தொண்டர் வருவார் என்றும், பொதுச்செயலாளர் பதவியே அதிமுகவில் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாதாரண தொண்டரை பொதுச்செயலாளர் ஆக்குவதற்குதான் அரசியல் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் தன்னை ’அப்பா’ என்று அழைப்பது பெருமையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ”தந்தையாக இருந்து திட்டங்களை முதல்வர் செயல்படுத்துவார். உங்கள் வீட்டில் உள்ள அண்ணனாக நானும் உங்களோடு என்றும் துணை நிற்பேன்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார். இவர்களது கருத்துகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் IND அணியில் யார் விளையாடுவார்கள் என்று ESPNcricinfo கணிப்பு வெளியிட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப், ஷமி அணியில் இடம்பெறுவார்கள் என்றும், ஆல் ரவுண்டர் பட்டியலில் பாண்டியா, ஜடேஜா இருப்பார்கள் எனவும் அந்நிறுவனம் கணித்துள்ளது. அணி விவரம், ரோஹித் ஷர்மா (கேப்டன்), கில், கோலி, ஸ்ரேயாஸ், KL ராகுல், பாண்டியா, ஜடேஜா, அக்ஸர் பட்டேல், குல்தீப், அர்ஷ்தீப், ஷமி.
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், 2வது மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு ஃபோன் வந்துள்ளது. பதறியடித்து சென்று பார்த்த போது, மாணவிக்கு இடுப்பின் கீழ்ப்பகுதி செயல்படவில்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர். மாணவி கீழே விழுந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுக்கின்றனர்.
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெற CM ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டத்தின்படி, தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை 30% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 3% வட்டியுடனும் திருப்பி செலுத்தலாம். விருப்பமுள்ளோர் exwel.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேஷம் – மகிழ்ச்சி, ரிஷபம் – வெற்றி, மிதுனம் – உயர்வு, கடகம் – நஷ்டம், சிம்மம் – ஆதரவு, கன்னி – அன்பு, துலாம் – ஊக்கம், விருச்சிகம் – நலம், தனுசு – பக்தி, மகரம் – ஆக்கம், கும்பம் – முயற்சி, மீனம் – சிந்தனை.
காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் விவகாரத்தில் தேச விரோத சக்திகளின் சதி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியிருக்கிறார் அசாம் CM ஹிமந்த சர்மா. எனவே, இதனை HM அமித்ஷாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி என சாடியுள்ளார்.
நாம் பயன்படுத்தும் மொபைல் போன் ரேடியோ அலை(RF) கதிர்வீச்சை வெளியிட்டுக் கொண்டே உள்ளது. இதை உடல் ஓரளவுக்கே தாங்கும். அளவுக்கு அதிகமான RF அலைகளை உடல்செல்கள் உட்கவர்ந்தால், கண்கள் மற்றும் விதைப்பைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை SAR என்ற அளவீட்டில் அளக்கிறார்கள். செல்போன்களின் SAR அளவு 1.6 W/kg வரை மட்டுமே பாதுகாப்பானது என அரசு வரையறுத்துள்ளது. உங்கள் போனின் SAR என்ன என்பதை <<15478395>>இப்படி செக்<<>> பண்ணுங்க.
ஆந்திராவில் பறவைக் காய்ச்சலால் பல்லாயிரம் கோழிகள் உயிரிழந்ததால், நாமக்கல், பல்லடம் கோழிப்பண்ணைகள் அலர்ட் ஆகியுள்ளன. இங்கிருந்தே கோழிகள், முட்டைகள் எல்லா இடங்களுக்கும் சப்ளை ஆகின்றன. இந்நிலையில், நோய்த்தடுப்பு, உயிர்ப் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் பண்ணையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆகவே, சிக்கன் சாப்பிடுபவர்கள் அச்சப்பட தேவையில்லை. எனினும், இறைச்சியை அதிக வெப்பத்தில் சமைத்து சாப்பிடவும்.
Sorry, no posts matched your criteria.