India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பாஸ்போர்ட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இடஒதுக்கீடு விவகாரத்தில் வன்முறை வெடித்ததால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இது தொடர்பான வழக்கில், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு 2ஆவது முறையாக கைது வாரண்ட் பிறப்பித்த நிலையில், ஷேக் ஹசினா உள்பட 97 பேரின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
3.15 மணி நேரம் ஓடும் ‘புஷ்பா 2’ படத்தில், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் 11ஆம் தேதி முதல் புதிய வெர்ஷன் திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான இத்திரைப்படம், 32 நாட்களில் உலகம் முழுவதும் ₹1,831 கோடியை வசூலித்துள்ளது. விரைவில் ₹2,000 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 142 ▶குறள்: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். ▶பொருள்: அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.
சென்னை அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ராஜி, அதிமுக நிர்வாகி சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளி எனக் கருதப்படும் சதீஷுக்கு ஆதரவாக செயல்பட்டதாக சுதாகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோரைத் தாக்கியதாக ராஜி கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும் ஜன. 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு. வரும் 14ஆம் தேதி அவர் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அவர், திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSCயின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
▶ஜனவரி 8 ▶மார்கழி- 24 ▶கிழமை: புதன் ▶ நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 4.30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: நவமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶நட்சத்திரம்: அஸ்வினி ▶சந்திராஷ்டமம்: உத்திரம்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சாலை விபத்திற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். விபத்து நடந்து 24 மணி நேரத்திற்குள் சாலை விபத்து குறித்து போலிசாருக்கு தெரிவித்தால், பாதிக்கப்பட்டவரின் சிகிச்சை செலவுக்கு ₹1.5 லட்சம் உடனடியாக வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழக்கும் நபரின் குடும்பத்தாருக்கு ₹2 லட்சம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இன்று (ஜன. 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
இன்று (ஜன. 8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
திருட வந்த இடத்தில் ஒன்றும் கிடைக்காததால், பெண்ணுக்கு முத்தம் கொடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஜன.3-ல், 38 வயது பெண், தனது வீட்டில் தனியாக இருக்க, அங்கு வந்த திருடன் பணம், மொபைல், ஏடிஎம் கார்ட் எல்லாத்தையும் எடு என மிரட்டியுள்ளான். தன்னிடம் எதுவும் இல்லை என அப்பெண் கூறவே, முத்தம் கொடுத்துவிட்டு தப்பிச் சென்றான். இவன் மீது திருட்டு, துன்புறுத்தல் பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.