news

News January 8, 2025

ஆளுநர் உரை மீது பேரவையில் இன்று விவாதம்

image

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து, நாளை மறுநாள் வரை இவ்விவாதம் நடைபெறும். வரும் ஜன.11ல் இந்த விவாதத்திற்கு CM பதிலளிப்பார். நேற்றைய தினம் மன்மோகன் சிங், EVKS இளங்கோவனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இன்று அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி EPS கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

News January 8, 2025

ஹாரிஸ் ஜெயராஜ் எனும் இசை மந்திரவாதி

image

2000ம் ஆண்டுகளில் இவர் போட்ட ஹிட் பாடல்களுக்கு இன்று வரை VIBE செய்யாத ஆளே இல்லை. தனது மின்னலான பாடல்களால் ரசிகர்கள் என்னமோ ஏதோ என விழி மூடி யோசித்தாலும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய் உனக்கென வேணும் சொல்லு என அனைத்து உணர்ச்சிகளையும் ஹிட் பாடல்களாக ஒன்றா ரெண்டா என்ற கணக்கில்லாமல் அள்ளி தெளித்தவர். இன்று இந்த இசை மந்திரவாதியின் 49வது பிறந்தநாள். உங்களின் ஃபேவரிட் ஹாரிஸ் மாம்ஸ் பாட்டு எது?

News January 8, 2025

நிலநடுக்கம்: 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டம்

image

நேபாள், திபெத்தில் நேரிட்ட சக்திவாய்ந்த <<15093617>>நிலநடுக்கத்தில்<<>> 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. திபெத்தை மையமாக கொண்டு நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அங்குள்ள 3 பெரிய நகரங்கள், 27 கிராமங்களில் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

News January 8, 2025

இந்தியாவில் ₹25,500 கோடி முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்

image

இந்தியாவில் சுமார் ₹25,500 கோடி முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோ சாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தொழில்நுட்பம் மற்றும் ஏ.ஐ., விரிவாக்க பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு கோடி இந்தியர்களுக்கு ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

News January 8, 2025

Age is just a number…82 வயதில் சாதித்த மூதாட்டி

image

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையைச் சேர்ந்த மூதாட்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 82 வயதான கிட்டம்மாளுக்கு, தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர், டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டி பங்கேற்றார். 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

News January 8, 2025

கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் இனி செல்லாதா?

image

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு UGC செக் வைத்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள யுனிவர்சிட்டிகள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது எனவும், UGC அங்கீகாரம் ரத்து செய்யப்படும், ஆன்லைன் வழி கல்வி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் அதன் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி உங்க கருத்து?

News January 8, 2025

விஐபி தரிசனத்தை ஒழிக்க வேண்டும்!

image

விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாத கோயிலில் வரிசை வளாகத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், கோயில்களில் விஐபி தரிசன கலாச்சாரத்தை அகற்ற வேண்டும் என்றார். ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவ கருத்தை இழிவுபடுத்துவதாகவும் கூறினார்.

News January 8, 2025

ஜனவரி 8: வரலாற்றில் இன்று

image

*1297 – மொனாக்கோ விடுதலை பெற்றது *1642 – வானியலாளர் கலீலியோ கலிலி மறைந்தார் *1828 – ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக கட்சி தொடக்கம் *1942 – இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தார் *1973 – ரஷ்யாவின் லூனா 21 விண்கலம் விண்ணில் பாய்ந்தது *1986 – கன்னட நடிகர் யாஷ் பிறந்தார் *1995 – தமிழீழ விடுதலைப் புலிகள் – சந்திரிகா அரசு இடையே போர் நிறுத்தம் ஆரம்பம்.

News January 8, 2025

இந்தியாவின் ஜிடிபி 6.4% வளரும் எனக் கணிப்பு

image

2024-25இல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4% வளர்ச்சியடையும் என்று மத்திய புள்ளியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கட்டுமானத் துறை, நிதி, ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை சேவைகள் துறை ஆகியவை 7.3% வளர்ச்சியை காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய உள்கட்டமைப்பு மேம்பாடு, வீட்டு தேவை மற்றும் நகரமயமாக்கல் போக்குகளைப் பிரதிபலிக்கிறது.

News January 8, 2025

அன்னை தெரேசாவின் பொன்மொழிகள்

image

*சிலர் உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்களாக வருகிறார்கள். சிலர் உங்கள் வாழ்க்கையில் பாடங்களாக வருகிறார்கள். *மிகுந்த அன்புடன் செய்யப்படும் சிறிய விடயங்கள் இந்த உலகை மாற்றும். *உங்களுக்காக எதுவும் செய்ய முடியாதவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பதன் மூலம் உங்களின் உண்மையான குணம் அளவிடப்படுகிறது. *நேற்று என்பது கடந்துவிட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. எங்களுக்கு இன்று மட்டுமே உள்ளது.

error: Content is protected !!