India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாள்தோறும் வாழ்க்கையில் நடப்பவற்றை டைரியில் குறிப்பெடுக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த எவி ரிஸ்கி (100), 90 ஆண்டுகளாக டைரி எழுதி வருகிறார். 10 வயதில் டைரி எழுதத் தொடங்கிய அவர், இடையில் ஒரு நாள் கூட விடாமல், இதுவரை 33,000 டைரிகளை எழுதி குவித்துள்ளார். அன்றாடம் நடப்பவற்றை தூங்கச் செல்வதற்கு முன் டைரியில் எழுதுவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
மதராஸி டீசரில் Peculiar body languageஐ SK வெளிப்படுத்த, கஜினி சூர்யா போல ஏதாவது கேரக்டராக இருக்குமா? என நெட்டிசன்கள் கேட்டனர். அதற்கு ஏ.ஆர்.முருகதாஸே பேட்டியில் பதிலளித்து விட்டார். துப்பாக்கி ஸ்லீப்பர் செல், கஜினி மெமரி லாஸ் போல, இதிலும் ஒரு கான்செப்ட் இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், SKவை அடுத்த கட்டத்திற்கு இப்படம் எடுத்து செல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். என்னவாக இருக்கும்..?
ரோஹித், விராட் கோலி இருவரும் கொஞ்சம் தடுமாறி வருகிறார்கள். ஆனால், இவர்களின் ஃபார்ம் CT தொடருக்கு மிகவும் முக்கியமானது. கம்பாரிஷனில் விராட் கோலி CT தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 5 அரைசதங்களுடன் 529 ரன்களை எடுத்துள்ளார். அதே நேரத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா 10 போட்டிகளில் ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 481 ரன்கள் குவித்துள்ளார். வரும் தொடரில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள்?
தமிழ்நாடு அரசின் 2025 – 2026 நிதிநிலை அறிக்கை அடுத்த மாதம் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்குத் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 3ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். அதற்கு அடுத்த நாள் மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட்டில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
பதவி ஆசையால் பாஜகவுடன் சேர்ந்து இரட்டை இலையை எதிர்த்த ஒபிஎஸ்-க்கு என்னை எச்சரிக்க தகுதி இல்லை என ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். ஒபிஎஸ் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக ஜெயலலிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்த அவர், ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றதாக ஒபிஎஸ் பேசி வருவதில் உண்மை இல்லை என்றார். இரட்டை இலையை எதிர்ப்பது இறப்புக்கு சமம் என்றும் ஒபிஎஸ்-க்கு பதிலளித்துள்ளார்.
மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக வலம் வரும் நிலையில், தனது மகன் அர்ஜித்தை, தன்னைப் போலவே இயக்குநராக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதற்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக மகனை அவர் சேர்த்துவிட்டுள்ளார். அந்த வகையில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடித்து வரும் ‘மதராஸி’ திரைப்படத்தில் அர்ஜித் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் இந்திய எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. J&K-ன் பீர் பாஞ்சால் எல்லை வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் (BAT)10 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக கிருஷ்ணா காட்டி பகுதியில் தொடர் ஊடுருவல் முயற்சி நடந்தது. இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்து முறியடித்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழிப்பது எப்போது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். பழவந்தாங்கல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து Xஇல் பதிவிட்டுள்ள அவர், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை, பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என CM ஸ்டாலின் முழங்கி வருவது வெட்கக்கேடானது என விமர்சித்துள்ளார்.
மகாகும்பமேளாவை ஒட்டி லட்சக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடியதால், நீர் மிக மோசமாக மாசடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. குளிப்பதற்கு ஏற்ற வகையில் நீரின் தன்மை இல்லை என்றும் அதிக அளவில் Faecal பாக்டீரியா கலந்துள்ளதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் நாளை உ.பி அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் NGT உத்தரவிட்டுள்ளது.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 31ஆம் தேதி 22 கேரட் சவரனுக்கு ₹61,840க்கு விற்பனையானது. ஆனால், இன்றைய காலை நேர சந்தையின்படி ₹63,760க்கு விற்பனையாகிறது. 18 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹1,920 உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.