news

News January 8, 2025

இல.கோபாலன் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

நாகாலாந்து கவர்னர் இல.கணேசனின் அண்ணன் இல.கோபாலன் (83) வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல்லத்தில் உறவினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கலைஞர் மீதும், என் மீது மாறாத பற்று கொண்ட இல.கணேசனுக்கு ஏற்பட்டுள்ள இழப்பால் அவரைப் போன்றே தானும் வருந்துவதாக CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தங்கம் விலை மீண்டும் உயர்வு

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹80 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1 கிராம் தங்கம் விலை ₹10 உயர்ந்து ₹7,225க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ₹80 அதிகரித்து ₹57,800க்கு விற்பனையாகிறது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி ₹100ஆகவும், 1 கிலோ வெள்ளி ₹1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News January 8, 2025

மீண்டும் பாஜக தலைவர் அண்ணாமலை என போஸ்டர்

image

மதுரையில் ‘மீண்டும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை’ என பிரேக்கிங் நியூஸ் ஃபார்மெட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பாஜக அமைப்புத் தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் மாநிலத் தலைவர், மாவட்ட வாரியான பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர். மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை, தமிழிசை இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. அடுத்த தலைவரா யார் வருவாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க..

News January 8, 2025

34,000 பேரின் பென்ஷன் நிறுத்தம்

image

மின்வாரியத்தில் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்காத 34,000 பேரின் பென்ஷன் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. TN மின் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) உள்ள 92,000 ஓய்வூதியதாரர்களில், 2024 ஜூலை-டிசம்பர் வரையில் 58,000 ஓய்வூதியதாரர்கள் மட்டுமே 2024ஆம் ஆண்டுக்கான Life Certificate சமர்ப்பித்துப் புதுப்பித்துள்ளனர். மீதமுள்ள 34000 பேர் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

News January 8, 2025

அஜித் கார் விபத்தில் சிக்கியது எப்படி? புது தகவல்கள்

image

துபாயில் பயிற்சியின்பாேது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது குறித்து அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். பயிற்சியின்போது அஜித்குமாரின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஓடி, ஓரமாக இருந்த தடுப்பில் மோதி விபத்தில் சிக்கியதாகவும், அஜித்துக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். அஜித்குமார் இன்றும் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

இன்று கூட்டுக்குழுவின் முதல் கூட்டம்

image

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை ஆராயும் பாராளுமன்ற கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பாஜக MP., சவுத்ரி தலைமையிலான JCP குழுவில் பிரியங்கா காந்தி, செல்வகணபதி உள்ளிட்ட 31 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மத்திய சட்டம் & நீதித்துறை அமைச்சக அதிகாரிகள், உறுப்பினர்களுக்கு மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள விதிகள் குறித்து விளக்கம் அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

News January 8, 2025

ஈரோடு கிழக்கில் யார் யாரெல்லாம் போட்டி?

image

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மறைந்த EVKS இளங்கோவனின் இளைய மகனான சஞ்சய் சம்பத் காங்., வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. எனினும், இதற்கு அவர்களது குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்காததால், அங்கு திமுக போட்டியிடலாம் எனத் தெரிகிறது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. பாஜகவோ, கூட்டணியில் உள்ள தமாகா வேட்பாளர் யுவராஜாவை நிறுத்த விரும்புகிறதாம்.

News January 8, 2025

8க்கு இவற்றில் உங்க மார்க் என்ன?

image

உங்க லைப்பில் எதெல்லாம் நடந்துள்ளது: ➥ வகுப்பை விட்டு வெளியே அனுப்பப்பட்டது ➥ ஸ்கூல் பங்க் அடித்தது ➥ ஆசிரியர் அறைந்தது ➥ பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியருடன் பேசியது ➥ சஸ்பெண்ட் ஆனது ➥ எதிர் பாலினத்தவருடன் அமர்ந்தது ➥ ஆசிரியருடன் வாக்குவாதம் செய்தது ➥ ஸ்கூல் பிரின்சிபால் ரூமில் நின்றது. 8க்கு நீங்களே மார்க் போட்டுட்டு கமெண்ட்ல உங்க நினைவுகளை சொல்லுங்க. இது தான் இப்போ எக்ஸ் ட்ரெண்டிங்.

News January 8, 2025

திமுகவின் கொட்டத்தை அடக்க வேண்டும்: அண்ணாமலை

image

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை வெளிமாநில அதிகாரிகளைக் கொண்டு நடத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “கடந்த முறை தேர்தல் அதிகாரிகள் சரியாக வேலை செய்யவில்லை. திமுகவினர் ஜனநாயகத்தை புதைகுழியில் புதைத்தனர். திமுகவின் படைபலத்தின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும்” என்றார்.

News January 8, 2025

இனி அரசு கேபிளில் HDல் TV பார்க்கலாம்!

image

தமிழகத்தில் HD Setup Box பணி வழங்கும் பணி நடந்து வருவதாக அரசு கேபிள் TV நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த Setup Box தேவைப்படும் ஆபரேட்டர்கள் ₹500 Deposit செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், அரசு கேபிள் TVஇன் SD Setup Boxகளை ஒப்படைக்க வேண்டும். தவறினால், அப்பகுதியில் புதிய ஆபரேட்டர்கள் நியமிக்கப்படுவர். புதிய ஆபரேட்டர்களாக பதிவு செய்ய www.tactv.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது.

error: Content is protected !!