news

News January 8, 2025

ஆபீஸில் பெஸ்ட் ஊழியராக மாற….8 டிப்ஸ்

image

➛ நிர்வாகத்தின் கொள்கை, வழிகாட்டுதலை பின்பற்றுங்கள் ➛ வதந்திகளில் இருந்து விலகுங்கள் ➛ சக ஊழியரை விட சிறப்பான வேலையை வெளிப்படுத்துங்கள் ➛ அனைவரிடமும் நல்லுறவை வளர்த்து கொள்ளுங்கள், அதுவே உங்களை தலைமை நிலைக்கு முன்னேற்றும் ➛ வேலையை சரியான நேரத்தில் செய்து முடியுங்கள் ➛ தவறை ஏற்றுக்கொண்டு திருத்தி கொள்ளுங்கள் ➛ வேலையில் புது உத்திகளை முயற்சியுங்கள் ➛ முக்கியமானது கடின உழைப்பாளியாக இருங்கள்.

News January 8, 2025

வெளிநாடுகளில் கல்வி: ரூ.3 கோடி கடன் வழங்கும் SBI

image

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தனது வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், SBI- GLOBAL ED-VANTAGE LOAN என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் கல்வி பயில ரூ.3 கோடி வரை கல்விக்கடன் அளிக்கிறது. இதற்கு ஆண்டுக்கு 9.65% முதல் வட்டி வசூலிக்கிறது. இந்தத் திட்டத்தில் 80 (E)ன் கீழ் வரிச் சலுகையும் உண்டு.

News January 8, 2025

CBSEல் வேலைவாய்ப்பு… மாதம் ₹1 லட்சம் வரை சம்பளம்

image

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)ல் Superintendent, Junior Assistant பதவிகளுக்கான 212 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 – 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சம்பளம் தகுதிக்கேற்ப ₹19,900 – ₹1,12,000 வரை. <>விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.<<>> விண்ணப்பிக்க கடைசி நாள் 31.01.25.

News January 8, 2025

பாலியல் புகாரில் சிக்கிய அதிமுக நிர்வாகி நீக்கம்

image

சென்னை அண்ணா நகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக நிர்வாகி சுதாகரை கட்சியில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை 103ஆவது அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக கூறியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பெண் ஆய்வாளர் ராஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News January 8, 2025

காய்ச்சல் பாதிப்பு: இபிஎஸ் இன்றும் பங்கேற்கவில்லை

image

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக 2வது நாளாக இன்றும் பங்கேற்கவில்லை. 2 நாட்களாக யார் அந்த சார் பேட்ஜ் அணிந்து சென்ற அதிமுகவினர் இன்று கறுப்புச் சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர். அண்ணா பல்கலை. விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி ADMK தரப்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

அயோத்தி கோயிலுக்கு ₹50,000 Coolers போட்டு வந்தவர் கைது

image

சில விஷயங்களை செய்யக் கூடாது எனக் கூறினால், சிலர் அதையே செய்து பிரச்னைகளில் சிக்கி கொள்கின்றனர். அயோத்தி ராமர் கோயில் உள்ளே புகைப்படம், வீடியோ எடுக்க தடை இருக்கிறது. ஆனால், ‘நேக்காக’ கண்ணாடியில் கேமரா வைத்து போட்டோ, வீடியோக்களை எடுத்த குஜராத்தை சேர்ந்த ஜானி ஜெய்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்ணாடி விலை தெரியுமா ₹50 ஆயிரம். கைதானவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இது தேவையா…?

News January 8, 2025

சபரிமலை செல்வோருக்கு புதிய கட்டுப்பாடு

image

சபரிமலை பக்தர்கள் கானகப் பாதையாக ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். தேக்கடி பெரியார் புலிகள் காப்பக மேற்குப் பிரிவு இணை இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில் கானகப் பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு அனுமதி 1 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். முன்னர் மதியம் 1 மணி வரை சத்திரம் – புல்லுமேடு வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.

News January 8, 2025

விஜய் படத்தால் ஒரு வாரம் மன அழுத்தம்: மீனாட்சி சவுத்ரி

image

‘கோட்’ படத்தில் விஜய்க்கு ஜோடி என்றாலும், சிறிய ரோலில் தான் நடித்திருந்தார் மீனாட்சி சவுத்ரி. இது குறித்து பேட்டியொன்றில் பேசிய அவர், ஒரு பாட்டுக்கு மட்டுமே வந்ததால் அதிகளவில் Trolls வந்ததாகவும், ஒரு வாரம் மன அழுத்தத்திற்கு ஆளாகியதாக தெரிவித்தார். ஆனால், ‘லக்கி பாஸ்கர்’ தனக்கு பாராட்டுகள் கொடுத்தாக கூறிய அவர், இனி நல்ல கதை உள்ள படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்து விட்டதாகக் கூறினார்.

News January 8, 2025

புதிய தலைவராக பகதூர் சிங் தேர்வு

image

இந்திய தடகள சம்மேளனத்தின் புதிய தலைவராக பஞ்சாப்பைச் சேர்ந்த பகதூர் சிங் சாஹூ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சண்டிகரில் நடந்த சம்மேளனத்தின் பொதுக்குழுவில், 2025-29 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், குண்டு எறிதல் வீரர் பகதூர் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002இல் புசனில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பகதூர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2025

டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணி… 5,000 பேர் மீது வழக்கு!

image

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நடந்த பேரணியில் பங்கேற்ற 5,000 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கிய நடை பயண பேரணி தமுக்கம் மைதானத்தில் பெருங்கூட்டமாக நிறைவுபெற்றது. சுமார் 18 km தூரத்தை 7 மணி நேர பயணமாக கடந்த இப்பேரணியில் மேலூர் & அதனை சுற்றி உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!