India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நண்பர்கள் வட்டத்தில் ‘மச்சான்’, ‘மச்சி’, ‘மாமா’ போன்ற வார்த்தைகள் புழங்குவது சகஜம். ஆனால், இதுவே ஒரு கொலையில் முடிந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், தனக்கு சகோதரிகள் இருக்கும் நிலையில் தன்னை ‘மச்சான்’ என அழைத்த நண்பன் அருணின் வீட்டுக்கு சென்று, அவரது தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார் சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர். தற்போது, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.
வேலைக்கு செல்வதை வெறுத்து, தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் முதலில் சிந்திப்பது டீக்கடை வைப்பதுதான். ஆனால், அதனை செயல்படுத்தி ₹150 கோடி சம்பாதித்து அசத்தியிருக்கிறார் அனுபவ் துபே. தனது 28 வயதில் வெறும் ₹3 லட்சத்தை வைத்து இந்தூர் நகரில் ‘சாய் சுட்டா பார்’ என்ற பெயரில் டீக்கடை தொடங்கினார். இன்று துபாய், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் 600 கிளைகள் உள்ளன. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு மக்களே.
கடந்த சில ஆண்டுகளாகவே இளம் இயக்குநர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து கலக்கி வருகிறார் ரஜினிகாந்த். அந்த வகையில், மாரி செல்வராஜுடன் ரஜினி இணைவதாக பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், நடிக்க ரஜினி மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சையில் சிக்க விரும்பாததால் இந்த முடிவை அவர் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
L’oreal அழகு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் ஃபிரான்கோய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்தான் உலகின் பணக்கார பெண்ணாக அறியப்படுகிறார். இவரது பாட்டி யூஜின் ஷுல்லர்தான் பிரான்ஸ் நாட்டில் இந்நிறுவனத்தை நிறுவியது. உலகின் முன்னணி நிறுவனமான இதன் 33% பங்குகளை மேயர்ஸ் வைத்திருப்பதால், அவர் உலகின் நம்பர் 1 பணக்காரப் பெண் ஆகிறார். அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? ₹8 லட்சத்து 65 ஆயிரம் கோடி.
நடிகர் விஜய் தனியாக CBSE பள்ளி நடத்துவது எத்தனை பேருக்குத் தெரியும் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் CBSE பள்ளியை நடத்தி வருவதாகக் கூறிய அவர், SA சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் அப்பள்ளி நடத்தப்படுவதாகவும், அதில் இந்தி இருக்கும்போது, மும்மொழியை எப்படி அவர் எதிர்க்கலாம் என்றும் சாடினார். அத்துடன், விஜய்யின் மகன் பிரஞ்சு மொழி படிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ₹498.80 கோடி நிவாரணம் ஒதுக்கீடு செய்து CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களை சேர்ந்த 5.18 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்று கூறிய அவர், இந்த நிவாரண நிதி ஓரிரு நாள்களில் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகள் பலன் பெறும் வகையில், CM ஸ்டாலின் ₹498.8 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, மானாவரி பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிருக்கு ₹17,000, நீண்ட கால பயிர்களுக்கு ₹22,500 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண நிதியானது ஓரிரு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
CSKக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார். கடந்த IPL சீசனில் அவ்வணி மெதுவாக பந்து வீசியதால், ஹர்திக் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்தப் போட்டிக்கு கேப்டனாக பொறுப்பேற்க பும்ரா, ரோகித், சூர்யா என 3 பேர் தயாராக உள்ளனர். இவர்கள் அனைவருமே இந்திய அணியை வழி நடத்தியவர்கள். இதில், உங்களது ஓட்டு யாருக்கு?
கடினமான விஷயங்களை பிள்ளைகள் கஷ்டப்பட்டாவது புரிந்து கொள்ள வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் எண்ணிய காலம் மலையேறி விட்டது. அதற்கு உதாரணமாக, பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் இருந்து முள் கடிகாரங்கள் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக டிஜிட்டல் கடிகாரங்கள் மாட்டப்படுகின்றன. தேர்வின் போது முள் கடிகாரத்தில் டைம் பார்க்க மாணவர்கள் திணறுவதால் இந்த முடிவாம். சரி., நீங்க என்ன டைம் என சொல்லுங்க பார்ப்போம்.
இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 21,413 காலியிடங்களை (Gramin Dak Sevaks- GDS) நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் இதில் 2292 பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி அறிவும் அடிப்படை தகுதிகளாகும். சைக்கிள் (அ) இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18-40. மெரிட் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 3 ஆகும்.
Sorry, no posts matched your criteria.