India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48(IKT)’ திட்டத்தில் முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சைக்கான தொகை ₹1 லட்சத்திலிருந்து ₹2 லட்சமாக அதிகரித்து TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் வரை 3.20 லட்சம் பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. EVKS இளங்கோவன் குடும்பத்தை CM ஸ்டாலின் வாஞ்சையுடன் அணுகுகிறார். அதனால், இளைய மகனான சஞ்சய் சம்பத்தை நிறுத்த அவர் நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால், EVKS குடும்பத்தினருக்கு அதில் ஆர்வமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், சஞ்சய் சம்பத்திற்கு ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டு இந்த தேர்தலில் திமுகவே களமிறங்க உள்ளதாகப் பேசப்படுகிறது.
HDFCஇல் 500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டுள்ளது. RELATIONSHIP மேனேஜர் நிலையிலான பதவிகளுக்கு இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் – ரூ.12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் பட்டப்படிப்பு தேர்ச்சி, SALESஇல் 10 ஆண்டு முன் அனுபவம் கோரப்பட்டுள்ளது. விருப்பம் இருப்போர் பிப். 7-க்குள் விண்ணப்பிக்கலாம்.
திமுகவின் அனுதாபி சக்தி வாய்ந்த அமைச்சருடன் எப்படிப் போட்டோ எடுக்க முடியும் என பாஜகவின் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். நிர்பயா நிதி பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் திமுக உறுப்பினர் இல்லை; திமுகவின் ஆதரவாளர் என CM ஸ்டாலின் விளக்கம் அளித்திருந்தார்.
பக்தர்கள் முகக்கவசம் அணியாமல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர வேண்டாம் என TTD சேர்மன் BR நாயுடு கூறியுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 10ம் தேதி காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. ஜன.19ஆம் தேதி வரை சிறப்பு டோக்கன் வழங்கப்பட்டு பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, HMPV வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் ‘Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி ரூ.10 கோடி இழப்பீடு கோரி தனுஷ் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 11ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 14ஆம் தேதி வரை மாநிலத்தின் ஓரிரு இடங்களில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரன் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல, திமுகவின் அனுதாபி என பேரவையில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஞானசேகரன் திமுக ஆதரவாளர் என்பதை மறுக்கவில்லை எனவும், அவர் அமைச்சர்களோடும், அரசியல் பிரமுகர்களோடும் போட்டோ எடுத்திருக்கலாம் அதில் தவறில்லை என்றும் கூறினார். மேலும், அவர் யாராக இருந்தாலும், ஏன் திமுகவைச் சேர்ந்தவராக இருந்திருந்தாலும் நடவடிக்கை எடுத்திருப்போம் என்றார்.
மகளிர் உரிமைத் தொகை இதுவரை கிடைக்காத மகளிர் புதியதாக விண்ணப்பிக்க 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் Dy CM உதயநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விடுபட்ட பல லட்சம் பெண்கள் எங்கே விண்ணப்பிப்பது என்ற பேச்சு சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. <
பாமகவினர் கைது குறித்து ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த CM ஸ்டாலின், போராட்டங்களுக்கு முன் அனுமதி அவசியம் என்றார். பல இடங்களில் அனுமதியுடன் போராட்டங்கள் நடைபெறுவதாகவும், அனுமதியின்றி போராட்டங்களை நடத்தியவர்கள் மீதே வழக்கு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கமளித்தார். ஆளும்கட்சியாக இருந்தபோதும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட DMKவினர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.