news

News February 19, 2025

தமிழ்.. தமிழ்.. 60 ஆண்டாக பேச மட்டுமே செய்கின்றனர்: R.N.ரவி

image

TN அரசியல்வாதிகள், தமிழ் தமிழ் எனப் பேச மட்டுமே செய்வதாக R.N.ரவி விமர்சித்துள்ளார். 60 ஆண்டுகளாகவே தமிழர்களுக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் எவ்வித சேவையையும் செய்யவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், பாரதியார், கம்பர், வால்மீகி போன்றோரை பற்றி பேசுகிறோம்; போற்றுகிறோமா எனக் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழின் பெருமையை பின்பற்றி நாம் பயணிக்கிறோமா என்பதும் கேள்விக்குறியே எனவும் கூறியுள்ளார்.

News February 19, 2025

CM பதவியை ராஜினாமா செய்யத் தயார்: மம்தா

image

வங்கதேச நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தனக்கு தொடர்பு இருப்பதாக நிரூபித்தால், மேற்குவங்க மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். தன்னை எதிர்கொள்ள பாஜகவினருக்கு தைரியம் இல்லை என விமர்சித்த அவர், அதனால் தான் முஸ்லிம் லீக் அமைப்பில் நான் உறுப்பினராக இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாக சாடினார்.

News February 19, 2025

பரங்கிக்காயில் பல்லாயிரம் மருத்துவ குணங்கள்!

image

*பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகமுள்ளதால் கண்களுக்கு நல்லது.
*ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பை பரங்கிச்சாறு போக்கும்.
*பரங்கிச்சாறோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.
*உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பரங்கிக்காய் போக்கும்.
*ரத்த சோகையை குணப்படுத்தும் பண்பு பரங்கிக்காயிடம் உண்டு.

News February 19, 2025

மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை

image

தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள சூழலில், மார்ச் 1இல் கையெழுத்து இயக்கம் தொடங்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், இந்த கையெழுத்து இயக்கம் மூலம், குழந்தைகளுக்கு விருப்பமான 3ஆவது மொழி எது என்பது பற்றிய விவரங்களை சேகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக NEPஐ செயல்படுத்தாமல், அந்த நிதியை தமிழகத்திற்கு தர முடியாது என தர்மேந்திர பிரதான் பேசியிருந்தார்.

News February 19, 2025

உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்: CM ஸ்டாலின்

image

TN உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுவதாகக் கூறி சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இது குறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், உரிமைகளை வென்றெடுக்கும் தீரர்கள்! என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் #SaveTNRights என்ற ஹேஷ் டேக்கையும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன், செல்வப்பெருந்தகை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

News February 19, 2025

சத்ரபதி சிவாஜி பொன்மொழி!

image

*பெண்களின் அனைத்து உரிமைகளிலும் மிகப்பெரியது, ஒரு தாயாக இருப்பது.
*நீங்கள் உற்சாகமாக இருக்கும்போது, ​​மலையும் களிமண் குவியல் போலத் தோன்றும்.
*ஒருபோதும் தலை குனியாதீர், எப்போதும் அதை உயரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.
*ஒவ்வொருவரின் கைகளிலும் வாள் இருந்தாலும், ஒரு அரசாங்கத்தை நிறுவுவது மன உறுதிதான்.
*தன்னம்பிக்கை வலிமையையும், வலிமை அறிவையும், அறிவு நிலைத்தன்மையையும், நிலைத்தன்மை வெற்றியையும் தருகிறது.

News February 19, 2025

மகனுக்காக முடிவை மாற்றிய நபி

image

சர்வதேச ODI போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை, ஆப்கன் வீரர் முகமது நபி திரும்பப் பெற்றுள்ளார். நபியின் மகன் ஹசன் ஐசாகில், கடந்த ஜூனியர் WC தொடரில் AFG அணிக்காக விளையாடினார். இதனால் விரைவில் அவர் அந்த அணியில் இடம் பிடிப்பார் எனத் தெரிகிறது. இதனால் தனது மகனுடன் ODI போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசையில், நபி தனது முடிவை திரும்பப்பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News February 19, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 19 ▶ மாசி 7 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM, 01:30 PM – 02:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 01:30 PM ▶எமகண்டம்: 07:30 AM – 09:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சப்தமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶நட்சத்திரம்: விசாகம் ▶சந்திராஷ்டமம்: ரேவதி.

News February 19, 2025

தமிழகத்தில் NEPஐ அனுமதியுங்கள்: சரத்குமார்

image

TNஇல் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். NEPஇல் எந்த இடத்திலும் இந்தி மொழி கட்டாயம் எனக் குறிப்பிடவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மாறாக பிற மாநிலங்களில் 3ஆவது விருப்ப மொழியாக மாணவர்கள் தமிழ் மொழியை தேர்வு செய்யவும் NEP வாய்ப்பு வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News February 19, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: புறங்கூறாமை
▶குறள் எண்: 183
▶குறள்:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
▶பொருள்: கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிடச் சாவது நன்று.

error: Content is protected !!