news

News January 8, 2025

தங்க முட்டையிடும் வாத்தை கொல்லாதீர்கள்: கைஃப்

image

பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பை வழங்கும் முன் ஒருமுறைக்கு நூறு முறை BCCI சிந்திக்க வேண்டும் என முன்னாள் வீரர் கைஃப் அறிவுறுத்தியுள்ளார். விக்கெட்டுக்கள் எடுப்பதிலும், நல்ல உடல் வலிமையை பேணுவதிலும் மட்டுமே அவர் அக்கறை காட்ட வேண்டும் எனவும், தங்க முட்டையிடும் வாத்தின் கழுத்தை நெரித்து விடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, பும்ராவை கேப்டனாக்க சிலர் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2025

இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை அறிவித்தாரா விஜய்?

image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒரு போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையான செய்தி இல்லை. நேற்றே இடைத்தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலே இலக்கு எனவும் தவெக தலைமை அறிவித்துவிட்டது. எனவே, இந்த செய்தியை தவெக நிர்வாகிகள் நம்ப வேண்டாம்.

News January 8, 2025

வருமான வரி கட்றீங்களா? விரைவில் GOOD NEWS

image

2025-26 பட்ஜெட்டில் சில வரிச் சலுகைகள் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வருமான வரிவிலக்கு வரம்பு ஆண்டுக்கு ₹3 லட்சமாக உள்ளது. இது 4 லட்சமாக உயர்த்தப்படலாம். அதேபோல், தற்போது ஆண்டு வருமானம் ₹3-₹6 லட்சம் உள்ளவர்களுக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இந்த வரம்பும் ₹4-₹7 லட்சமாக உயர்த்தப்படலாம். இதனால் ஆண்டுக்கு ₹14 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு வருமான வரி குறையும்.

News January 8, 2025

ஆளுநரின் கோட் சூட்டை கிழித்து அனுப்பி இருப்போம்

image

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், CM ஸ்டாலின் மட்டும் கண் ஜாடை காட்டி இருந்தால் வெளிநடப்பு செய்த ஆளுநர் ரவியின் கோட் சூட்டை கிழித்து, டிராயருடன் அனுப்பி இருப்போம் என்று முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவை நேரடியாக சீண்டினால் ஏடாகூடமாக நடக்கும் என்பதால் பாஜகவினரை வைத்தே ஆளுநர் சீண்ட பார்ப்பதாக கூறியுள்ளார்.

News January 8, 2025

APPLY NOW: மாதம் ₹40,000 சம்பளம்

image

இந்திய விமானப்படையில் அக்னிவீர் பிரிவில் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 17.5-21 வயதிற்குள் உள்ளவர்கள் வரும் 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி ப்ளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பயிற்சியின் போது அதிகபட்ச சம்பளமாக மாதம் ₹40,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>https://agnipathvayu.cdac.in/avreg/candidate/login <<>>இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

News January 8, 2025

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று

image

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV வைரஸ் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளதுதான் என்கின்றனர் டாக்டர்கள். உதாரணத்துக்கு, புனேவில் ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை வைரல் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதுக்கு உட்பட்ட 114 குழந்தைகளில், 13% பேருக்கு HMPV தொற்று இருந்துள்ளது.

News January 8, 2025

டெல்லி தேர்தல்: காங்.ஐ ஓரங்கட்டிய மாநில கட்சிகள்

image

டெல்லி சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். INDIA கூட்டணிக்குள் இருந்தாலும், AAPயும், காங்கிரஸும் தனித்தனியாக தேர்தலை எதிர்கொள்கின்றன. முன்னதாக, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிகளும் AAPக்கு ஆதரவு தெரிவித்தன. மாநிலத்தில் ஒரு தேசிய கட்சி வளரக் கூடாது என்பதாலேயே இக்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

News January 8, 2025

மே 1ஆம் தேதி ரிலீஸாகிறது ‘ரெட்ரோ’

image

சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் த்ரில்லர் நிறைந்த காதல் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

News January 8, 2025

11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

image

11, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வுகள் பிப்.15 முதல் 21ம் தேதி வரை நடைபெறும் என்றும், பிப்.7 முதல் 14ம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாணவர்களை ஆசிரியர்கள் தயார் செய்யவும், விடுபட்ட பாடங்களை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

News January 8, 2025

₹25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ்

image

டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும், ₹25 லட்சத்திற்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் அசோக் கெலாட் கூறும்போது, “ஜீவன் ரக்‌ஷா யோஜனா” என்ற பெயரில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5இல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் BJP, AAP, CONG என மும்முனை போட்டி நிலவுகிறது.

error: Content is protected !!