India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியார் குறித்து சீமான் மிகுந்த தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று வன்னி அரசு கடுமையாக சாடியுள்ளார். நாதக என்ற கட்சியை தொடங்கும் முன் பெரியார் மட்டுமே புரட்சியாளர் எனக் கூறி வந்த சீமானை வைத்து, திராவிட அரசியலை நீர்த்துப் போகச் செய்ய சங்பரிவார் அமைப்புகள் செயல்படத் தொடங்கியதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், சீமான் தனது பேச்சுக்கு பொது இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
பெண்ணின் உடல் அமைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் தான் என்று கேரள ஐகோர்ட் கூறியுள்ளது. தன் உடல் அமைப்பு குறித்து ஆபாசமாக கமெண்ட் அடித்து வருவதாக சக ஆண் ஊழியர் மீது பெண் ஊழியர் புகாரளித்திருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அந்த ஆண் ஊழியர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது. ஆண்களே இனி பார்த்து பேசுங்க!
பொதுவாக HMPV போன்ற சுவாச மண்டலத்தை தாக்கும் வைரஸ் தொற்றுகளை உறுதி செய்ய BioFire test என்ற ஆய்வக பரிசோதனை மேற்கொள்ளப்படும். சுவாசத்தொற்று ஏற்படுத்தும் பல்வேறு கிருமிகளை கண்டறிய இது உதவும். பெரிய மருத்துவமனைகளில் இந்த லேப் பரிசோதனை வசதி உள்ளது. இந்த டெஸ்டுக்கு, ஹாஸ்பிடல்களை பொறுத்து, ரூ.3000 முதல் ரூ.9000 வரை செலவாகும்.
மார்கழி வளர்பிறையில் ஏகாதசி மோட்சம் தரும் என்பார்கள். 2025ம் வைகுண்ட ஏகாதசி ஆங்கில தேதிப்படி வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஏகாதசி நாளை மதியம் 12:03 மணிக்கே தொடங்குகிறது. சூரியன் உதிக்கும் போது என்ன திதி இருக்கிறதோ அதை தான் அன்று பின்பற்றுவார்கள். இதன் அடிப்படையில் நாளை இரவு கண் முழித்து நாளை மறுநாள் காலையில் சொர்க்கவாசல் பார்க்கவேண்டும். SHARE IT
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் விசா காலத்தை இந்திய அரசு நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டில் நடந்த கலவரத்தை அடுத்து, ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவர் உள்பட 96 பேரின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதாக தற்போதைய வங்கதேச இடைக்கால அரசு நேற்று அறிவித்தது. தொடர்ந்து அவரை நாடு கடத்த சொல்லி வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியாவின் இன்றைய நடவடிக்கை அமைந்துள்ளது.
நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில், செம்மனூர் நகைக்கடை அதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த கேரள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவின் போது, பாபி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதற்கு ஒத்துக்கொள்ளாததால், அவரது கூட்டாளிகள் சமூக வலைதளங்களில் மோசமான கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் ஹனிரோஸ் புகார் அளித்திருந்தார்.
கனடா அமெரிக்க தேசத்தின் ஒரு பகுதியாக மாற வாய்ப்பில்லை என ஜஸ்டின் ட்ரூடோ டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். சமூகம், தொழிலாளர்கள் என இரு நாட்டு தரப்பிலும் ஒருவருக்கொருவர் வர்த்தகம், பாதுகாப்பு சார்ந்து கூட்டாளிகளாக இருப்பதன் மூலம் பலனடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணையலாம் என தெரிவித்திருந்த ட்ரம்ப், US தான் கனடாவை பாதுகாப்பதாகவும் கூறியிருந்தார்.
NTK தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் சுப்பையா பாண்டியன், தனது ஆதரவாளர்கள் 32 பேருடன் கட்சியிலிருந்து விலகினார். சீமான் படிப்பாளி, மிகப் பெரிய அறிவாளி. ஆனால் மிகவும் மோசமான நிர்வாகி என சாடியுள்ள சுப்பையா பாண்டியன், தங்களது விலகலுக்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன்தான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகல் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 45ஆவது படத்திற்கு ‘பேட்டைக்காரன்’ என டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு த்ரிஷா இப்படத்தில் சூர்யாவிற்கு கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதியின்படி 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ஜன.26ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. தங்களின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால், ஜன.26 விடுமுறை மற்றும் 27ஆம் தேதி என தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.