news

News January 9, 2025

ஒரே ஒரு RESIGN LETTER.. மிரண்ட மேனேஜர்!

image

தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் மீதான விருப்பு, வெறுப்புகளை ராஜினாமா கடிதத்தில் காட்டும் காலம் இது. அந்த வகையில், ஐடி ஊழியர் ராகுல் எழுதிய ராஜினாமா கடிதம் வைரலாகிறது. அதில், “2 வருட கடின உழைப்பை தந்தும் எனது சம்பளம் உயரவில்லை. வேகமான ஃபோனான IQOO 13-ஐ கூட என்னால் வாங்க முடியவில்லை எனில், எனது கெரியர் எப்படி வேகமாக முன்னேறும். எனவே, வளர்ச்சி தரும் நிறுவனத்தில் சேரவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

News January 9, 2025

கம்பீர், ரோஹித்திற்கு செக் வைக்கும் BCCI

image

AUSக்கு எதிரான BGT டெஸ்ட் தொடரில் தோல்வி குறித்து BCCIன் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் ஷர்மா கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் ரோஹித், கோலியின் மோசமான ஃபார்ம், அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

News January 9, 2025

ராசி பலன்கள் (09-01-2025)

image

➤மேஷம் – உற்சாகம் ➤ ரிஷபம் – வரவு ➤மிதுனம் – ஆர்வம் ➤கடகம் – வெற்றி ➤சிம்மம் – கவலை ➤கன்னி – அச்சம் ➤துலாம் – பக்தி ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – சாந்தம் ➤மகரம் – நஷ்டம் ➤கும்பம் – பெருமை ➤மீனம் – தொல்லை.

News January 8, 2025

பொங்கலுக்கு டிரெயின்ல போறீங்களா: இது தெரியுமா?

image

பொங்கல் சீசன் வந்தாச்சு…. மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களே ஃபர்ஸ்ட் சாய்ஸ். அப்படி டிக்கெட் புக் பண்ணிட்டு, டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸ், என்ன உணவு ஆர்டர், ரயில் அட்டவணை என அனைத்தையும் தெரிந்து கொள்ள தவிக்கிறீர்களா? 9881193322 என்ற ரிஜிஸ்டர்ட் எண்ணிற்கு Whatsappல் ‘ஹாய்’ என மெசேஜ் செய்தால் போதும். உங்களின் டிக்கெட் ஸ்டேட்டஸ் மொத்தமும் வந்துவிடும். யூஸ் பண்ணிக்கோங்க மக்களே…

News January 8, 2025

கணவன் – மனைவி இதைப் பேசவே கூடாது!

image

கணவன்- மனைவி, முடிந்துபோன பழைய விஷயங்களைப் பற்றியே பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. ஏதோ ஒரு சின்ன சண்டை கூட, நீங்கள் பழசை கிளறும்போது பெரிதாகிவிடும். இருவருக்குமே இது பொருந்தும். நேற்று நடந்த சண்டையைக் கூட இன்று சொல்லிக்காட்ட வேண்டாம். இதைக் கடந்தால்தான், எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் பரஸ்பரம் உங்கள் இருவராலும் மனம்விட்டு பேசி எதையும் சரிசெய்ய முடியும். உங்கள் யோசனை என்ன.. கமெண்ட் செய்யுங்க.

News January 8, 2025

GROUP IV கலந்தாய்வு தேதி வெளியானது

image

குரூப் 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதிகளை TNPSC அறிவித்துள்ளது. தமிழக அரசில் 9,491 பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட்ட GROUP IV தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஜன.22 முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெறும். எனினும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பிப்.6,7, 18, 19, 20, 21 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறாது. முழு <>தகவல்களுக்கு<<>>

News January 8, 2025

பெண் வீட்டாரே.. கொஞ்சம் இரக்கம் காட்டுங்க!

image

சமீபகாலமாக பெண் வீட்டார் செய்யும் அட்ராசிட்டிகளால், ஆண்கள் அலறி வருகின்றனர். அந்த வகையில், திருமணத்திற்கு பெண் தேடிய வினித் என்பவர், தனது ஆதங்கத்தை எக்ஸ் தளத்தில் கொட்டி தீர்த்துள்ளார். “ஐடி துறையில் மாதம் 1 லட்சத்துக்கு கீழ் சம்பாதிப்பவர்களை மனிதனாக கூட பெண் வீட்டார் கருதுவதில்லை. 28 வயதில் ஒருவர் எப்படி 1-2 லட்சம் சம்பாதிக்க முடியும்?” எனக் கேட்டுள்ளார். உங்களுக்கு இப்படி அனுபவம் இருக்கா?

News January 8, 2025

இன்னொரு பெண்ணுடன் சிக்கிய சஹால் (PHOTO)

image

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால், தன் மனைவி தனஸ்ரீயை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் ஒரு ஹோட்டலுக்கு வேறொரு பெண்ணுடன் சென்றபோது கேமராவில் சிக்கியுள்ளார். அப்போது அவர் முகத்தை கைகளால் மூடிக் கொண்டார். கன்னட நடிகையான அப்பெண்ணுடன், திருமணத்துக்கு முன்பே சஹால் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்து அவரது தரப்பில் எந்த பதிலும் இல்லை.

News January 8, 2025

Sexual abuse: பிரபல தொழிலதிபர் மீது தங்கை புகார்

image

தற்போது உலகை கலக்கிவரும் AI chatbot, ChatGPT டெக்னாஜிகளை உருவாக்கிய நிறுவனமான OpenAI-யின் CEO சாம் ஆல்ட்மேன். இவர், தன்னை 3 வயது முதல் 10 வருடங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது தங்கை ஆன் ஆல்ட்மேன்(30) குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், கோர்ட்டிலும் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், பணத்துக்காக தன் தங்கை பொய் சொல்வதாக சாம் ஆல்ட்மேன் இக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

குடும்பத் தலைவிகளுக்கு லோன்

image

அவசர தேவைகளுக்கு குடும்பத் தலைவிகள் Instant Personal Loanகளை எடுக்கலாம். இதற்கு Income Proof தேவையில்லை. ஆதார், பான் கார்டு போதும். நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் வங்கிகளின் வெப்சைட், APPல் மொபைல் எண்ணை கொடுத்து உள் நுழையவும். Instant Loan ஆப்ஷனை க்ளிக் செய்து, தேவையான தகவல்களை கொடுக்கவும். அது ஏற்றுக் கொள்ளப்பட்டால், அடுத்த சில நிமிடங்களில் உங்கள் அக்கவுண்டிற்கு பணம் வந்துவிடும்.

error: Content is protected !!