news

News January 9, 2025

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்

image

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் தேவசம்போர்டு திணறி வருகிறது. ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களில் 10,000 பேருக்கு மட்டுமே பாஸ் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், தினமும் 25,000 பேர் வரை பாஸ் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 90,000 பக்தர்கள் வந்தால் பிரச்னை இல்லையென கூறும் போலீசார், ஒரு லட்சம் பேர் வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

News January 9, 2025

நீங்க ஒன்னும் பிரதமர் கிடையாது: எலான் மஸ்க்

image

கனடா முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவுடன் 51ஆவது மாகாணமாக கனடா இணைய வேண்டுமென டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு துளியும் வாய்ப்பில்லை என கனடாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஜஸ்டின் ட்ரூடோ பதிலளித்திருந்தார். இந்நிலையில், “நீங்கள் ஒன்றும் கனடாவின் பிரதமர் கிடையாது. நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை” என மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார்.

News January 9, 2025

பொங்கல் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

image

பொங்கல் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்படவுள்ளது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீளக் கரும்பு ஆகியன பரிசுத் தொகுப்பாக வழங்கப்படவுள்ளன. பொங்கல் தொகுப்பை ஜன. 13ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க ரேஷன் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 9, 2025

அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்க?

image

எப்போதாவது நெட்டி முறித்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அடிக்கடி நெட்டி முறிப்பதால் சில பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அந்த வகையில், 45 வயதை கடந்தவர்கள் அடிக்கடி நெட்டி முறித்தால், முழங்கால் வீக்கம், தசைநார் பிடிப்பு, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த பழக்கத்தில் இருந்து வெளிவர அழுத்தம் நிறைந்த வேலைகளுக்கு கைகளை அவ்வப்போது உட்படுத்துவது அவசியம்.

News January 9, 2025

இக்கட்டான சூழலில் துணை நிற்போம்: ராகுல்

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 9, 2025

திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த மல்லிகா, பொள்ளாச்சியைச் சேர்ந்த நிர்மலா ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனிடையே, அதிகாரிகளின் அலட்சியமே இச்சம்பவத்திற்கு காரணம் என கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.ராயுடு தெரிவித்துள்ளார். மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

News January 9, 2025

ஜனவரி 9: வரலாற்றில் இன்று

image

*1788 – அமெரிக்காவின் 5ஆவது மாநிலமாக கனெடிகட் இணைந்தது *1878 – இத்தாலியின் மன்னனாக முதலாம் உம்பேட்டோ முடி சூடினார் *1915 – தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார் மகாத்மா காந்தி *1921 – புனித ஜார்ஜ் கோட்டையில் மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது *1951 – நியூயார்க்கில் ஐநா தலைமையகம் திறப்பு *1974 – யாழ்ப்பாணத்தில் 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நிறைவு.

News January 9, 2025

ஓய்வு அறிவிக்கும் போது கப்டில் சொன்னது..

image

நியூசி. வீரர் மார்டின் கப்டில் ஓய்வு அறிவிக்கும் போது சிலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். நியூசி. அணியில் விளையாட வேண்டும் என்பது தனது கனவு எனவும், தன்னை தயார்படுத்திய U-19 கோச் மார்க், தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் தியாகம் செய்த மனைவி லாரா ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார். கப்டில் ஏதாவது ஒரு அணிக்கு கோச் ஆக வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 9, 2025

சாக்ரடீஸின் பொன்மொழிகள்

image

*நான் ஒரு புத்திசாலி என்று எனக்குத் தெரியும், ஏனெனில் எனக்கு எதுவும் தெரியாது என்று எனக்குத் தெரியும். *வீழ்வது தோல்வி அல்ல. வீழ்ந்தே கிடக்கும் போதுதான் தோல்வி வரும். *தன்னிடம் இருப்பதில் திருப்தியடையாதவன், வைத்திருக்க விரும்புவதிலும் திருப்தியடைய மாட்டான். *அமைதி என்பது ஆழமான மெல்லிசை, எல்லாச் சத்தங்களையும் தாண்டி அதைக் கேட்கக்கூடியவர்களுக்கு. *இந்தப் பிரபஞ்சம் கோழைகளுக்கு சாதகமாக இருக்காது.

News January 9, 2025

கல்யாண நாளில் அஜித் போட்ட பிளான்

image

‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரிலீஸை மிஸ் செய்த நிலையில், தனது திருமண நாளான ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட அஜித் ஆசைப்பட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவிடம் சொல்ல முயற்சித்த போது, அந்த தேதிக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, விரைவில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!