news

News January 9, 2025

“இரக்கம் தேவை…”: தனஸ்ரீ வேதனை

image

கிரிக்கெட்டர் சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இது குறித்து தனஸ்ரீயின் பதிவில், “ஆதாரமற்ற, உண்மை சரிபார்க்கப்படாத வெறுப்பைப் பரப்பும் ட்ரோல்களால் எனது பெயரை கெடுக்கின்றன. சில நாட்களாக எனக்கும் கடினமாக இருந்தது. மௌனம் பலவீனத்தின் அடையாளம் அல்ல, வலிமையின் அடையாளம். ஆன்லைனில் நெகட்டிவ் எளிதில் பரவும் போது, ​​ஊக்குவிக்க தைரியமும் இரக்கமும் தேவை” என எழுதியுள்ளார்.

News January 9, 2025

மொபைலை சும்மா சும்மா பாத்துட்டு இருக்கீங்களா?

image

மனிதனை மொபைல் போன் தனக்கு அடிமையாக்கிவிட்டது எனலாம். விஷயமே இல்லை என்றாலும் அடிக்கடி போனை எடுத்து பார்க்கும் வழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பல உடல்நல பிரச்னைகள் உண்டாகலாம். கண் எரிச்சல், தலைவலி, பார்வை குறைவு, கழுத்து – தோள்பட்டை வலி ஏற்படலாம். தூக்கத்தை கொடுக்கும் மெலடோனின் ஹார்மோனும் குறையும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக, நினைவாற்றல் சக்தியும் குறையக்கூடும். கொஞ்சம் கவனிச்சிக்கோங்க மக்களே..

News January 9, 2025

திருப்பதி நெரிசலில் 6 பேர் பலி: மோடி இரங்கல்

image

திருப்பதியில் கூட்ட நெரிசலில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் உயிரிழப்பு நேரிட்டது குறித்த தகவலை கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், அதேநேரத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1,000

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ.1,000 மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த மாதம் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை ஆகும். இதையொட்டி, 15ஆம் தேதியன்று பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க முடியாத நிலை நேரிட்டுள்ளது. அதேபோல், 11ம் தேதி முதல் தொடர் விடுமுறை வருகிறது. ஆதலால் பெண்களின் வங்கிக் கணக்கில் நாளை ரூ.1,000 டெபாசிட் செய்யப்பட இருக்கிறது.

News January 9, 2025

திருப்பதி கூட்ட நெரிசல் குறித்து விசாரணை: TTD உறுதி

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் உறுதி அளித்துள்ளது. திருப்பதி கோயில் வரலாற்றில் இதுபோல் இதுவரை நடந்ததில்லை என்றும் தேவஸ்தானம் வருத்தம் தெரிவித்துள்ளது. கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த விரிவான தகவலை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று வெளியிடுவார் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

News January 9, 2025

கூட்ட நெரிசல்: மன்னிப்பு கேட்ட திருப்பதி தேவஸ்தானம்

image

கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானம் மன்னிப்பு கோரியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெறுவோரை தேவஸ்தான தலைவர் பிஆர் நாயுடு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்ட நெரிசல் நேரிட்டது மிகுந்த துரதிருஷ்டவசமானது எனக் குறிப்பிட்டார். அதிகம் கூட்டம் கூடியதே நெரிசல் ஏற்பட்டதற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

News January 9, 2025

சிபில் அப்டேட் ஆகாவிட்டால் தினமும் ₹100 இழப்பீடு

image

கடன் குறித்த தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு 30 நாள்களுக்குள் வழங்க வேண்டுமென RBI உத்தரவிட்டுள்ளது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட CIBIL உள்ளிட்ட கடன் தகவல் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் நாளொன்றுக்கு ₹100 வீதம் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளது. கடன் விவரங்களை 21 நாள்களுக்குள் திருத்தம் செய்து அப்டேட் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.

News January 9, 2025

திருப்பதி நெரிசல்: ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு வேதனை

image

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலியான சம்பவத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். டோக்கன் விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானது குறித்து கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறியுள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 9, 2025

காலையில் எழுந்ததும் முதல் விஷயமா இத பண்ணுங்க!

image

காலையில் எழுந்ததும் கட்டிலில் இருந்து காலை கீழே வைப்பதற்கு முன்பாக, ஸ்ட்ரெட்சஸ் (Stretches) செய்ய அறிவுறுத்துகிறார்கள். சாதரணமாக சோம்பல் முறிக்காமல் உடலை நன்கு வளைத்து நெளித்து ஸ்ட்ரெட்சஸ் செய்யவேண்டுமாம். கை விரல் நுனி முதல் கால் விரல் நுனி வரை உணர்ந்து செய்ய வேண்டுமாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் சோம்பல் வெளியேறுவது மட்டுமின்றி, மனதில் உற்சாகமும் ஏற்படும். நாளைக்கே ட்ரை பண்ணுங்க.

News January 9, 2025

திருப்பதி கூட்ட நெரிசல்: நடந்தது என்ன?

image

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலியானதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. வைகுண்ட த்வாரா சர்வ தரிசன டோக்கன் விநியாேகம் கவுண்டர்களில் நடந்துள்ளது. இரவு 8 மணிக்கு உடல்நிலை சரியில்லாத பக்தரை அதிகாரிகள் வெளியே அழைத்து வந்துள்ளனர். இதைக்கண்ட பக்தர்கள் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றதால், 2 இடங்களில் நெரிசல் ஏற்பட்டு 2 தமிழர்கள் உள்பட 6 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!