India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை வேந்தர் நியமனம் தொடர்பான அறிவிப்பை எதிர்த்து பேரவையில் இன்று முதல்வர் தனித் தீர்மானம் கொண்டு வர உள்ளார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும், ‘UGC திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டு நெறிமுறை 2025’-க்கு எதிராக இந்த தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னருக்கும், அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
*வீட்டின் மின்சார செலவில் கவனமாக இருங்கள். தேவையற்ற நேரத்தில் ஃபேன், பல்பு, லைட், டிவியை அணைத்து வையுங்கள் *சமைக்கும் விஷயத்தில் கவனம் இருக்க வேண்டும். அதிகளவில் சமையல் பொருட்கள் வீணாவதில் கவனம் வையுங்கள் *சேமிப்புகளில் நாட்டம் கொள்ளுங்கள். அது திடீரென ஏற்படும் செலவு நேரத்தில் உதவும் *பண்டிகை காலங்களில் அதிகப்படியான துணியோ, பொருட்களோ வாங்கிக்குவிக்க வேண்டாம். தேவைக்கேற்ப செலவு செய்வதே நல்லது.
மதகஜராஜா பட விழாவில் விஷால் பேசுகையில் கை விரல் நடுங்கிய வீடியோ வெளியானது. இதையடுத்து வைரஸ் காய்ச்சல் என்று தனியார் ஹாஸ்பிட்டல் அறிக்கை வெளியிட்டது. பின்னர் ஹாஸ்பிட்டலில் விஷால் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விஷாலின் மேலாளரோ இதை மறுத்துள்ளார். இதையடுத்து விஷாலுக்கு உண்மையில் என்ன ஆனது? அவர் எங்கிருக்கிறார்? என அவரின் ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக உள்ளடக்கம், தொழில் துறை உள்ளடக்கம், மக்களின் அனுபவம் ஆகிய 3 குறியீடுகளின் அடிப்படையில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் எது என அவதார் குழுமம் ஆய்வு நடத்தியுள்ளது. இதில் மாநில பட்டியலில் கேரளம், தெலங்கானா, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு முதல் 4 இடங்களில் உள்ளன. நகரங்களின் பட்டியலில் குருகிராம், மும்பை, பெங்களூரு, சென்னை முதல் 4 இடத்தில் உள்ளன. சிறிய நகரங்களில் பட்டியலில் கோவை முதலிடத்தில் உள்ளது.
பொங்கலையொட்டி மக்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு, இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை சென்னையில் உள்ள ரேஷன் கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைக்கவுள்ளார். இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி ரேஷன் கடைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சையில் இருப்போர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பில் பங்கேற்க இலவச டோக்கன் வாங்க காத்திருந்த பக்தர்களிடையே நேற்று மாலை ஏற்பட்ட நெரிசலில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.
நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் படகில் காரைக்கால் அருகே கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி 10 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை காங்கேசன் துறைக்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர்.
ராணிப்பேட்டை அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்தும், சென்னை நோக்கி காய்கறிகளை ஏற்றிச் சென்ற லாரி, டிப்பர் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வாலாஜாபேட்டை GHஇல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த பக்தர்கள் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
விஷ்ணுவின் மகிமையை பெற ஏகாதசி விரதம் சிறப்பானது. முந்தைய நாள் இரவு கண் விழித்து விஷ்ணு சகஸ்ரநாமம் பாட வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலை நீராடி, கோயிலில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பிற்கு சென்று வழிபட வேண்டும். விரதத்தின் போது சாப்பாடு மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழங்கள், பால், தயிர், நிலக்கடலை, பயித்தம் பருப்பு பாயசம் செய்து விஷ்ணுவிற்கு படைக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட மக்கள் செல்வார்கள் என்பதால், பஸ்களில் கூட்டம் அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்களை நாளை முதல் 13ஆம் தேதி வரை அரசு அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து 14,104 சிறப்பு பஸ்கள், பிற ஊர்களில் இருந்து 7,800 பஸ்களை அரசு அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து திரும்பி வரவும் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 22,676 பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.