news

News January 9, 2025

வாழைக்கும் பாம்பிற்கும் இப்படி ஒரு தொடர்பு உண்டா?

image

மக்கள் கூடும் இடங்களில் வாழை மரம் கட்டப்பட்டிருக்கும், ஏன் என யோசித்திருக்கிறீர்களா? இன்றளவும் கிராமங்களில் பாம்பு தீண்டினால் விஷத்தை முறிக்க முதலுதவியாக வாழையின் அடிக்கிழங்கில் சுரக்கும் நீரை அருந்த கொடுப்பார்கள். அதே போல, வாழை இலையில் பாலிஃபீனால் (Polyphenol) இருக்கிறது. உணவை வாழை இலையில் வைத்து சாப்பிடும் போது, பாலிஃபீனால்கள் உணவில் கலந்து மனிதனுள் சென்று ஊட்டச்சத்துக்களைத் தருகிறது.

News January 9, 2025

விஜய் நாளை ஆலோசனை

image

தவெக நிர்வாகிகளுடன் விஜய் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை அவர் ஆலோசனை நடக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக கட்சியை ஆரம்பித்த விஜய், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனவும் சாெல்லப்படுகிறது.

News January 9, 2025

12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

image

வரும் 12ஆம் தேதி 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 11ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 12ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

News January 9, 2025

திருப்பதி சம்பவம்: முதல்வர் ரூ.2 லட்சம் நிவாரணம்

image

திருப்பதியில் நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த <<15103086>>சேலம் பெண்<<>> மல்லிகாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள CM ஸ்டாலின், ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மல்லிகாவின் சடலத்தை அவரது சொந்த ஊரான மேச்சேரிக்கு கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளைச் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News January 9, 2025

ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

image

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. நேற்று மாலை சொர்க்கவாசல் திறப்பு தரிசன டோக்கன் பெறக் காத்திருந்த பக்தர்கள் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் பலியான நிலையில், 40 பேர் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளனர்.

News January 9, 2025

12 வருடங்களுக்கு பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்!!

image

12 வருடங்களுக்கு பின்னர், கோலி டெஸ்ட் தரவரிசையில் 20வது இடத்திற்கு வெளியே தள்ளப்பட்டுள்ளார். பட்டியலில் அவர் 27வது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து டெஸ்ட்டில் அவரின் ஆட்டம் சொதப்பி வரும் நிலையில், இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவரின் பழைய ஆட்டத்தை ரசிகர்கள் மிஸ் செய்கிறார்கள். இது அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் கஷ்டம் தான். மீள்வாரா கிங்?

News January 9, 2025

UGC புதிய விதிகள் மாநில உரிமைக்கு எதிரானது: CM

image

UGC புதிய விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதன் மீது பேசிய அவர், பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது கூட்டாட்சி தத்துவம், மாநில உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறினார். இது, மாநில அரசை சிறுமைப்படுத்தும் செயல் எனவும், அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் தெரிவித்தார்.

News January 9, 2025

அமைச்சரின் ஆபாச வீடியோ வெளியிடுவோம்: அதிமுக

image

<<15104294>>ஜெயக்குமார் <<>>ஒரு பெண்ணுடன் பேசியதாக கூறப்படுவது போன்ற ஆடியோவை திமுக ஐடி விங்க் வெளியிட்டுள்ளது. இதற்கு அதிமுக ஐடி விங்க், பதிலடி கொடுத்துள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் படத்துடன் பதிவு வெளியிட்டு, எங்க கிட்டயும் சீப்பு இருக்குன்னு, இந்த மாதிரி மார்பிங் ஆடியோ போடாம, உங்க அமைச்சரோட ஒரிஜினல் வீடியோவையே போட்டுடலாம் தான். ஆனா ரொம்ப அசிங்கமா போய்டும்ன்னு பார்க்குறோம் என எச்சரித்துள்ளது.

News January 9, 2025

BREAKING: இரட்டை இலை விவகாரத்தில் EC-க்கு தடை

image

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு (EC) சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ், ஓபிஎஸ் என இருப்பு தரப்பும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த விவகாரம் குறித்து 4 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என EC அறிவித்த நிலையில், வழக்கை விசாரித்த ஐகோர்ட், விசாரணை நிலுவையில் இருக்கையில் எப்படி முடிவெடுக்க முடியும் எனக் கூறி தடை விதித்தது.

News January 9, 2025

மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை: ஜெயக்குமார்

image

அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் அதிமுகவினரை திமுகவினரும், திமுகவினரை அதிமுகவினரும் மாறிமாறி விமர்சிக்கின்றனர். இந்நிலையில், <<15104294>>ஜெயக்குமாரின் <<>> பதிவில், அதிமுகவிற்கு மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை எனத் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் சாரின் வெட்கங்கெட்ட ஆட்சிக்கு வேங்கைவயலே சாட்சி. திமுகவின் அலங்கோல ஆட்சிக்கு அண்ணா பல்கலை. பாலியல் வழக்கே சாட்சி என்றும் சாடியுள்ளார்.

error: Content is protected !!