India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசிய வீடியோ ஆதாரங்களுடன், சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் மருது கணேஷ் தலைமையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சீமானுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தனது கருத்தில் உறுதியாக உள்ளார். பெரியாரை எதிர்ப்பதுதான் தனது கொள்கை எனவும் கூறிவருகிறார். அவரது கருத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
TRB மூலம் விரைவில் 6,000 ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் எனவும், தீர்ப்புக்குப் பிறகு பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார்.
நடிகர் விஷால் உடல் நிலை குறித்து சோஷியல் மீடியாவில் சிலர் கற்பனை கதைகளைப் பதிவிட்டு வதந்தி பரப்பி வருவதாக அவரது ரசிகர் மன்ற செயலாளர் ஹரிகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில், மதகஜராஜா பட விழாவில் பங்கேற்ற விஷாலின் தோற்றம், கையில் ஏற்பட்ட நடுக்கம் பேசுபொருளான நிலையில், வைரஸ் காய்ச்சல்தான் இதற்கு காரணம் என விஷால் தரப்பில் மருத்துவச் சான்று வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படாதது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி கேள்வியெழுப்பினார். மேலும், அதிமுக ஆட்சியில் ரூ.2,500 வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், பொங்கல் பரிசை அதிமுக வழங்கிய போது, தேர்தல் காலமாக இருந்ததாகவும், எனவே, தேர்தல் வரும் போது பொங்கல் பரிசு தருவது பற்றி நாங்கள் யோசிப்போம் எனவும் கிண்டலாக பதிலளித்தார்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 2:30 மணி நேரம் ஓடக்கூடிய இப்படத்தில் அஜித்திற்கு பிடித்த மாதிரி பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். குறிப்பாக, கார் ரேஸ் காட்சியை பார்த்து தணிக்கை அதிகாரிகளே மிரண்டு போனார்களாம். ரசிகர்களை குஷிப்படுத்தும் நோக்கில், விறுவிறுப்பு குறையாத கதைக்களத்துடன் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றும் செதுக்கப்பட்டுள்ளதாம்.
தற்போது நடந்து வரும் தமிழக சட்டப்பேரவை, வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ படத்தைப் பார்ப்பது போல் இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடிவேலுவைப் போலவே முதல்வரை புகழ்வதில் ஒவ்வொருவருக்கும் இடையே போட்டி இருப்பதாகவும், வடிவேலுவின் இடத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டதாகவும் கலாய்த்துள்ளார்.
‘புஷ்பா 2 ரீலோடட்’ ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அல்லு அர்ஜுன், ரஷ்மிகா நடித்த ‘புஷ்பா 2’ வசூலில் மாபெரும் சாதனையை படைத்தது. 3.20 மணி நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில், கூடுதலாக 20 நிமிடக் காட்சிகள் சேர்க்கப்பட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் ரிலீஸ் தேதி தற்போது ஜனவரி 17க்கு தள்ளிவைக்கப்பட்டுள்து.
கடைசி நேரத்தில் கூட பொங்கலுக்கு ₹1000 வழங்கப்படலாம் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்த தங்கம் தென்னரசு, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளது. குறிப்பாக, வெள்ள நிவாரண பணிகளுக்கு ₹37,000 கோடி கேட்டோம். ஆனால் வெறும் ₹276 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்களுக்கு ₹1000 வழங்கப்படாது என்று உறுதிப்படுத்தினார்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விரைவில் ஆட்சியர் அலுவலகத்தில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு ஃபோனை கட் செய்தார். இதையடுத்து, செல்போன் சிக்னலை ட்ரேஸ் செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அப்துல் ரகுமானை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.1000 இல்லாத கோபத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான மைதானங்கள் தயாராவதில் சிக்கல் நிலவுவதால், துபாய்க்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டி மைதானங்களின் மறுசீரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மைதானங்களை வரும் 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான், ஐசிசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.