India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒரே பாலினத்தவர் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க சுப்ரீம் கோர்ட் மீண்டும் மறுத்துள்ளது. 2023 தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2023ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது மற்றும் ஒரே பாலின தொழிற்சங்கங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு கோர்ட் எதிர்ப்பு தெரிவித்து தீர்ப்பு வழங்கியது.
பண்டிகை காலத்தை குறிவைத்து மோசடி நடந்து வருவதாக சைபர் கிரைம் எச்சரித்துள்ளது. போலி சலுகைகள், ரீசார்ஜ் டீல், தள்ளுபடி என்ற பெயரில் இணையத்தில் மோசடி நடக்கிறது. எனவே, இலவச ரீசார்ஜ் என்று கூறி செல்போன் எண்ணிற்கு அனுப்பப்படும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். அந்த லிங்கை தொட்டால் தனிப்பட்ட தகவல் திருட்டு, நிதி மோசடி நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க அலர்ட் கொடுத்துள்ளது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு திமுக அரசு தடையாக உள்ளதாக பாஜக மூத்த தலைவர் H.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளதாகவும், மக்களுக்காக போராட்டம் நடத்தும் தங்களை மாநில அரசு ஒடுக்க முயற்சிப்பதாகவும் சாடியுள்ளார். தமிழகத்துக்கு திமுகவால் நன்மையில்லை எனவும், அரசை தூக்கி எறிந்தால் மட்டுமே மாநிலத்துக்கு நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பெயரை தாங்கள் நினைத்தால் மாற்றி விடுவோம் என ட்ரம்புக்கு மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐநா.வால் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்ற வேண்டும் என சில தினங்களுக்கு முன் ட்ரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த
கிளாடியா, அமெரிக்காவின் பெயரை மெக்சிகன் அமெரிக்கா என்று மாற்றுவோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் லாக்-டவுன் அமல்படுத்தப்படும் என்று பரவிய வதந்திக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிகரித்து வரும் HMPV வைரஸ் தொற்று காரணமாக லாக்-டவுன் அமல்படுத்தப் படலாம் என்று தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இதனை மறுத்திருக்கும் மத்திய அரசின் Fact Check குழு, அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் ‘கங்குவா’ இடம் பிடித்தது பலருக்கும் ஆச்சரியமளித்தது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை உள்ளது. மத்திய அரசு சார்பில் ஒரு படம் தான் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் (இந்த ஆண்டு ‘லாபட்டா லேடீஸ்’). ஆனால், படக்குழுவினர் விரும்பினால், சொந்தமாக பணம் செலுத்தி விருதுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படிதான் கங்குவாவும் இப்பட்டியலில் இணைந்துள்ளது.
ரோஹித், கோலிக்கு யாரும் எந்த அட்வைஸும் கூறத் தேவையில்லை என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார். ரோஹித் ஃபிட்னஸில் கவனம் செலுத்தினால் போதுமானது என நினைப்பதாகவும், கோலிக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் எதிர்கால வெற்றிகளில், இவர்கள் இருவரது பங்களிப்பும் இன்றியமையாததாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்த லியா லட்சுமி (4) என்ற மாணவி, சில தினங்களுக்கு முன்பு பள்ளி செப்டிங் டேங்கில் விழுந்து இறந்ததாக செய்தி வெளியானது. இந்நிலையில், தற்போது ஆசிரியை அடித்தே சிறுமி இறந்ததாக அதன் பெற்றோர், விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே, மாணவி பயின்ற பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறைந்த பாடகர் ஜெயச்சந்திரன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கு அதிகமான பாடல்களை தன் இனிய குரலில் பாடியுள்ளார். 1965-ல் பாடத் தொடங்கிய அவருக்கு எண்ணற்ற விருதுகள் தேடிவந்தன. 1986-ல் சிறந்த பாடகருக்கான தேசிய விருது, கேரள அரசின் 6 விருதுகள், தமிழக அரசின் 2 விருதுகள் முக்கியமானவை. MSV, இளையராஜா, ARR, வித்யாசாகர் உள்பட பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. • மாத சம்பளம் பெறும் பெண்களுக்கான வருமான வரி குறைப்பு • பெண்கள் நிர்வகிக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு குறைந்த அளவிலான வரி • வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு பெருமளவில் வரி விலக்கு • கல்விக்கடனுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.