India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கலுக்கு முந்தைய தினம் (ஜன.13) மக்கள் போகி பண்டிகை கொண்டாடுகின்றனர். அப்போது பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பது வழக்கம். அந்த நேரத்தில் வீட்டிலுள்ள பிளாஸ்டிக், டயர், ட்யூப் உள்ளிட்டவற்றை மக்கள் எரிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள அரசு, டயர், பிளாஸ்டிக், ட்யூப்பை எரிக்க வேண்டாம். சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு போகி கொண்டாடுங்கள் எனக் கேட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடவில்லை. அண்மையில் தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் தவெகவின் இலக்கு என்று விஜய் தெரிவித்திருக்கிறார். ஆதலால் எந்த இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடாது எனக் கூறியுள்ளார்.
சீமான் மீது நெல்லை, மயிலாடுதுறை காவல்நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் தி.க.வினர் அளித்த புகாரின்பேரில் வடலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை, மயிலாடுதுறையிலும் தற்போது அடுத்தடுத்து வழக்குப்பதிவு ஆகியுள்ளது.
MSMEகளுக்கு ₹100 கோடி வரை கடன் உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சிறு நிறுவனங்கள் இயந்திரங்கள், உபகரணங்களை பிணையின்று வாங்க வழிவகை செய்யப்படும் என கடந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், ஊரகப் பகுதிகளில் தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையிலும் இத்திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்தர உள்ளது.
2 மாவட்டங்களுக்கு மட்டும் நாளை முதல் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர், உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜன.13ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜன.11ஆம் தேதி சனிக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை வருகிறது.
மக்களால் பெரிதும் போற்றப்பட்ட தலைவர் இந்திரா காந்தி என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ‘எமர்ஜென்சி’ திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சித்தரித்துள்ளதாகக் கூறினார். அவரை கண்ணியத்துடன் காட்சிப்படுத்த விரும்பியதாகவும், எமர்ஜென்சி காலத்தை தவிர்த்து, அவர் மக்களால் நேசிக்கப்பட்டவராக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மார்ச்சில் இருந்து விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியானது. இது குறித்தும் நிர்வாகிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சென்னையில் இருந்து 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 5,736 சிறப்பு பேருந்துகள் என 4 நாள்களுக்கு மொத்தம் 14,104 பேருந்துகளும், திருச்சி, கோவை உள்ளிட்ட பிற ஊர்களில் இருந்து 7,800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மொத்தமாக 21,904 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, பிப். 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என EC அறிவித்தது. இந்நிலையில், பொங்கல் மற்றும் வார இறுதி நாள்கள் நீங்கலாக ஜன. 10, 13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையில் நம்பெருமாள் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். ரத்னாங்கி அலங்காரத்தில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளிய நம்பெருமாளை கண்ட பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா…” என முழக்கமிட்டு, பக்தி பரவசம் அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.